

ஆங்கிலேயரின் ஆட்சியில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை வெளிக் கொணரும் நோக்கில் தென்னிந்திய பத்திரிகை ஆர்வலர் சுப்பிரமணிய செட்டியார் அவர்களால் 1930.08.06 ஆம் நாள் வீரகேசரி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு கிராண்பாஸில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் ஸ்ரீலங்காவின் தேசிய ஊடகமான வீரகேசரி நடுநிலைக் கருத்துக்களில் இருந்து வழுவாமல் பரிணமிக்க வாழ்த்துக்கள்.
வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றுதான் இந்தத் தளத்துக்கு வந்தேன். நண்பர் அருணின் வலைத்தளமே வழிவகுத்தது. நல்ல தகவல்கள் தரமான விடயங்களைப் பரிமாறியிருக்கிறீர்கள்.
வீரகேசரிக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். ஊடகத்துறையில் நான் சிறக்க, பலவிடயங்களை வெளிக்கொணர உதவியது வீரகேசரி வாரவெளியீடும் மெட்ரோவும் தான்.
ஒருவகையில் பல திறமையான எழுத்தாளர்களை வளரவிடாமல் தடுத்ததும் வீரகேசரிதான். வெளியில் சமத்துவம் சமாதானம் பேசினால் மட்டும் போதாது ஊழியர்களதும் சமத்துவம் பேணப்பட வேண்டும் திறமையானவர்களுக்கு களம் இனியாவது வீரகேசரியின் "ஆங்கிலமோக" நிர்வாகம் வழங்கக்கூடிய காலம் பிறக்க ஏகனை வேண்டுகிறேன்.
களத்துமேட்டுக்கு வந்து பதிவிட்டுச் சென்ற இறக்குவானை நிர்ஷனுக்கு நன்றி.
பதிலளிநீக்குவீரகேசரி தமக்கென ஒரு எழுத்தாளர் வட்டத்தை வைத்திருந்தது, இதனால் பல படைப்பாளிகள் ஓரங்கட்டப்பட்டார்கள் என்பது பலருக்குத் தெரிந்த விடயம்.
அதேபோல் உள்ளேயும் சில சீரற்ற தன்மைகள் இருந்தது தெரிந்ததே, இப்போது அதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.