தமிழ் மொழி வளர்ச்சிக்காக தென்னிந்திய மாநிலத்தில் எண்ணற்ற ஊடகங்கள் கால் பதித்துள்ளன, அவற்றில் பல பிரபல்யமாகி கொடி கட்டிப் பறக்கின்றன, சில மௌனமாகவே தமது செயற்பாட்டை தொடர்ந்து வருகின்றன.தமிழ்மொழியை வளர்க்க வேண்டுமென முன்வந்துள்ள ஊடகங்கள், வருமானம் ஈட்ட வேண்டிய காரணத்தை முதன்மைப்படுத்தி ஏனோ ஆங்கிலமொழி மோகத்துக்கு சிக்குண்டு தமிங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே!
ஆங்கிலமொழிக்காக எத்தனையோ ஊடகங்கள் இருக்கும் போது, தமிழ்மொழிக்கான ஊடகங்களென தம்மை அடையாளப்படுத்தி உள் நுழையும் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஆங்கில மோகத்துக்கு இலக்காகி வருகின்றன, இந் நிலை நீடித்தால் தமிழகத்தில் தமிழை தேடவேண்டிய நிலை விரைவில் ஏற்படும்.
தரமான நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகின்றது, அவற்றில் பல மேலைத்தேய தொலைக்காட்சிகளின் தாக்கத்துக்கு உட்பட்ட நேரடி நிகழ்ச்சிகளும், போட்டி நிகழ்ச்சிகளும் ஆகும். இந் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களும், பங்கு பற்றுவோரும் ஆங்கிலமொழி கலந்தே தமிழைப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.தொலைக்காட்சி நிறுவனத்தாரின் உத்தரவின் படியே ஆங்கிலம் கலந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றனவோ தெரியவில்லை, பாமர மக்களுக்கும் இந் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் சென்றடைய வேண்டுமெனில், தொலைக்காட்சி நிறுவனத்தினர் தமிழில் நிகழ்ச்சிகளைப் படைப்பதே சிறப்பானதாகும்.
இதனை தமிழ்நாடு கண்டும் காணாத மாதிரி இருப்பதன் மர்மம் தான் என்ன?

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.