ஸ்ரீலங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீலங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஆகஸ்ட், 2011

கிழக்கில் பீதியை ஏற்படுத்தும் மர்ம மனிதர்களைக் கண்டு கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள்!



இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ள மர்ம மனிதனினால் தினமும் தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, இதனை தமிழ் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகின்றது.

எமது எதிர்கால கல்வியலாளர்களைச் சிதைப்பதற்காக திட்டமிட்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் இந்த நேரம் பார்த்து மர்ம மனிதனை உருவாக்கி உள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

விடுதலை பெற்ற 152 முன்னாள் விடுதலைப் புலிகள்! - காணொளி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முள்ளிவாய்க்காலில் காவு கொடுக்கத் தயாராக இருந்த பல்லாயிரம் பேரில் இருந்து மீண்டு, ஸ்ரீலங்கா படையிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11000 பேரில் புனர்வாழ்வு பெற்ற 152 பேர் நேற்று 2011.08.12 ஆம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஜெயலலிதா கண்டனம்! (காணொளி)


தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்தை விமர்சித்த ஸ்ரீலங்காவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானம், முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் இலாபத்துக்காகக் கொண்டு வரப்பட்டதாகுமென ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உளத் தூய்மையாக செயற்படுமா?


இலங்கை அரசாங்கத்துடன் பத்து தொடர் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பேச்சுவார்த்தையைத் தொடர முடியாமல் உள்ளது, அரசாங்கம் உளச்சுத்தியுடன் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் காலத்தை நீடிக்கின்றது என்பதை உணர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளனர்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சனல் 4 வீடியோ காணொளிக்கு மறுப்புக் கூறும் ஸ்ரீலங்கா வீடியோ காணொளி!


பிரித்தானிய ஊடகமான சனல் 4 அண்மையில் ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" எனும் வீடியோ காணொளி பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்து சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பேரினவாதம் உலகுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையை உணர்ந்துள்ளது.

செவ்வாய், 12 ஜூலை, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஜூலை 23

எதிர்வரும் 2011. 07.23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒத்திவைக்கப்பட்ட 65 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  அபேட்சகர்கள் வாக்கு வேட்டைக்கு வீடு வீடாகச் சென்று கட்சி சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செவ்வாய், 14 ஜூன், 2011

சனல்-4 தொலைக்காட்சியில் இன்று "இலங்கையின் கொலைக்களம்" ஒளிபரப்பு

வன்னி யுத்தத்தின் அவலத்தினை உலகுக்குக் காட்டுவதற்காக சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட "இலங்கையின் கொலைக்களம்" எனும் ஆவணத் திரைப்படம் இன்று சர்வதேச நேரம் 23.05 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

சனி, 4 ஜூன், 2011

ஜெனிவாவில் ஒளிபரப்பான "இலங்கையின் கொலைக்களம்" ஆவணத் திரைப்படம்.

சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் 2011.06.06 ஆம் திகதியான இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில், ஈழத் தமிழர்கள் மீதான போர்க் குற்ற ஆவணத் திரைப்படம் "இலங்கையின் கொலைக்களம்" (SRILANKA'S KILLING FIELDS)எனும் மகுடத்துடன் சனல்-4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்டது.

வியாழன், 19 மே, 2011

வன்னிப் பேரவலத்துக்காக சுயாதீன விசாரணை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளதென ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையினைத் தொடர்ந்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

திங்கள், 22 டிசம்பர், 2008

இந்தியாவுக்கு அகதியாகச் சென்ற சிங்களத் தம்பதியர்!

இலங்கைத் தமிழர்களுடன் இணைந்து சிங்களத் தம்பதியரும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் செல்லும் போது இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

2008.12.20 ஆம் திகதி சனிக்கிழமை படகின் மூலம் தமிழகம் சென்ற 19 தமிழர்களுடன் இளம் சிங்கள காதல் தம்பதிகளான 30 வயதுடைய துஸா சந்தன மற்றும் 18 வயதுடைய சறுகா பில்கானி போன்றோரும் இடம்பெற்று இருந்தனர்.

கொழும்புப் பகுதியில் வாகனச் சாரதி பயிற்சி நிலையம் நாடாத்தி வந்த திரு.துஸா சந்தனவிடம் வாகனப் பயிற்சிக்காகச் சென்ற செல்வி.சறுகா பில்கானி காதல் வயப்பட்ட நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் வவுனியா பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள், இந் நிலையில் இவர்களுக்கு உதவி வழங்கிய தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற போது இத் தம்பதியரும் கூடவே சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 19 டிசம்பர், 2008

வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் ஸ்ரீலங்கா விஜயம்!

ஸ்ரீலங்காவுக்கு வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், பங்களதேசம் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த இவ்விராணுவ ஆலோசகர்கள் வவுனியா இராணுவ தலைமையகத்துக்குச் சென்று ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், 57 வது மற்றும் 59 வது படையணித் தலைமையகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா இராணுவ தரப்புக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்று வரும் சில முன்னரங்க நிலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டு வன்னியின் நேரடி நிலைமைகளை அவதானித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

திங்கள், 8 டிசம்பர், 2008

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

கடந்த 2008 நவம்பர் 6 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு வரவு செலவுத்திட்டம் இன்று மதியம் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் மூன்றாவது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இவ் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக 126 பேரும் எதிராக 84பேரும் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சி (கரு ஜெயசூரிய அணி), ஜே.வி.பி.(விமல் வீரவங்ஸ அணி), இ.தொ.கா, மக்கள் மலையக முன்னணி, ஈ.பி.டி.பி. என்பன வரவு செலவுதிட்டத்திற்கு ஆதரவாகவும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி (சோமவன்ச அணி) என்பன எதிராகவும் ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரஸ், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

திங்கள், 1 டிசம்பர், 2008

அமைச்சர் பௌசியை பதவியில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் பணிப்பு!

பெற்றோலியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவி கருணாநாயக்கவும், சமையல் எரிவாயு விற்பனையாளரொருவரும் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் உயர் நீதிமன்றில் தொடுத்த வழக்கின் பயனாக பெற்றோலியத்துறை அமைச்சரைப் பதவி நீக்கி வேறொருவரை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறும் அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நான்கு வங்கிகளுக்கு வழங்கவிருக்கும் கொடுப்பனவுகளை இடை நிறுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு.அசந்த டி மெல்லின் பொறுப்பற்ற செயலை பெற்றோலியத்துறை அமைச்சர் திரு.ஏ.எச்.எம்.பௌசி கண்காணிக்கத் தவறியமைக்காகவே அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவரை நியமிக்கும் வரை திறைசேரிச் செயலர் திரு.சுமித் அபயசிங்கவை நியமிக்குமாறும் பரிந்துரைத்துள்ளதாக பிரதம நீதியரசர் திரு.சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

ஊடகவியலாளர் லோஷன் கைது!

ஸ்ரீலங்கா தலைநகரில் இருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப்.எம் வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளர் திரு.ரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷன் (லோஷன்) 2008.11.15 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணை போதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர் லோஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவற்துறை வழங்கிய பதிவுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஜா நிறுவனத்தின் சக்தி எப்.எம், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூரியன் எப்.எம் ஆகிய வானொலி நிறுவனங்களிலும் லோஷன் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி எப்.எம் அறிவிப்பாளர் திரு.சந்திரமோகன் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து, ஊடகவியலாளர் லோஷன் கைதாவதற்கு சற்று முன்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவிரால் விசாரணைக்கு உட்பட்டிருந்தாரென அறிய முடிகின்றது.

ஊடகவியலாளர்களான திரு.சசிதரன், திரு.வளர்மதி, திரு.திஸ்ஸநாயகம் போன்றவர்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதாகி விடுவிக்கப்படாமல் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை சோதனைச் சாவடி ஒட்டிசுட்டானுக்கு விரைவில் மாற்றம்?

ஓமந்தைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இல்லாததால் வன்னிக்கான நுழைவுப் பாதையுடனான இராணுவச் சோதனைச் சாவடியை நெடுங்கேணி - ஒட்டிசுட்டான் வீதிக்குத் தெற்கே ஒட்டிசுட்டான் பகுதிக்கு மாற்றுமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைக் கேட்டுள்ளது.

வன்னிக்கான நுழைவுப் பாதையை ஓமந்தைக்கு வடக்கே பொருத்தமான இடத்தில் தெரிவு செய்யலாமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 2 நவம்பர், 2008

ஸ்ரீலங்காவின் வீதி விபத்துக்கள்!






ஸ்ரீலங்காவில் தினமும் இடம்பெறும் வீதி விபத்துக்களைக் கொண்ட புள்ளி விபர அறிக்கை அண்மையில் ஸ்ரீலங்கா பாராளுமன்றில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நன்றி: தினக்குரல்

வியாழன், 23 அக்டோபர், 2008

உணவுக் கப்பல்கள் தாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள மாறுபட்ட கருத்துக்கள்!

நேற்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குச் சொந்தமான றுகுணு மற்றும் நிமலவ எனும் இரு கப்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது, இக் கப்பல்களில் தாக்குதல் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கை:


ஸ்ரீலங்கா படையினருக்கான தமது வழமையான வழங்கல் பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல்களின் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.


தமிழ் மக்களது நலன்களில் புலிகளுக்கு அக்கறையில்லை!

தகவல் திணைக்கள பணிப்பாளர் அறிக்கை

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக உணவுப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற இரண்டு விநியோகக் கப்பல்களைத் தாக்கியதன் மூலம் தமிழ் மக்களது நலன்களில் தங்களுக்கு அக்கறையில்லை என்பதை புலிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுச பெல்பிட்ட வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடபகுதி கடற்பரப்பில் றுகுண மற்றும் நிமலவ என்ற இரண்டு விநியோகக் கப்பல்கள் மீது புலிகள் நேற்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். இது அண்மைக்காலத்தில் வன்னி பொதுமக்களுக்காகக் கொண்டு செல்லப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது புலிகள் இலக்கு வைத்த இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
இம்மாதம் 16ஆம் திகதி ஐ.நா. சபையின் பதாகையின் கீழ் மருந்துப் பொருட்கள் உட்பட உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 லொறிகள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்திருந்தனர். கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவே இப்பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. இவ்வாகனத் தொடரணியை இலக்குவைத்து புலிகள் கடும் மோட்டார் மற்றும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பொதுமக்களுக்காகக் கொண்டுசெல்லப்படும் நிவாரணப் பொருட்களைத் தடைசெய்து, அங்குள்ள மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதே புலிகளின் நோக்கமாகும்.
பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் பிரதானமான போக்குவரத்து மார்க்கங்களாக கடல் மற்றும் ஆகாய மார்க்கங்;களையே அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது. வடக்கிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. வடக்கில் இவற்றுக்கு எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாதவகையில் மனிதாபிமான உதவிகள் முறையாக சென்றடைவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்;கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கை மனிதாபிமானத்திற்கெதிரான நடவடிக்கையாகும். தாக்குதலுக்குட்பட்ட இரண்டு கப்பல்களும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களாலும் தனியார்துறை விநியோகஸ்தர்களினாலும் பயன்படுத்தப்பட்டவையாகும்.
இக்கப்பல்கள் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சீரான முறையில் அத்தியாவசிப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதும் அப்பிராந்தியத்தில் மனித அவலங்களைத் தோற்றுவிப்பதுமே புலிகளின் நோக்கமாகும்.

இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் புலிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகின்றனர் என்பது தெளிவு. அப்பாவிப் பொதுமக்களது உயிர்களைப் பலியிட்டு குறுகிய அரசியல் இலாபங்களை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை வண்மையாகக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தைக் அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் பற்றிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒளிப்பதிவு இதில் உள்ளது.

புதன், 15 அக்டோபர், 2008

ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது தொடரும் யுத்தத்தை நிறுத்தாவிட்டால் தமிழக பா.உ. பதவி விலகுவர்!

ஸ்ரீலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் மீது தொடரும் போரை இரு வாரங்களுக்குள் நிறுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இந்திய மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் தமிழக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக நேரிடுமென தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்., கம்யூ., தி.க., விடுதலை சிறுத்தைகள் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டன.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ., ம.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., பங்கேற்கவில்லை.

இப் பதவி விலகலின் முதற்படியாக கருணாநிதி கனிமொழி திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதத்தை தந்தை கருணாநிதியிடம் கையளித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

சனி, 11 அக்டோபர், 2008

அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேனாவின் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரி!

2008.10.09 ஆம் திகதி பொரலஸ்கமுவையில் அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேனவின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பின் தற்கொலைதாரியின் புகைப்படத்தினையும், இந்தப் பெண் சம்பந்தமான தகவல்களைத் தருமாறு பின்வரும் தொலைபேசி இலக்கங்களையும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.



தொலைபேசி இலக்கங்கள்:
119
0112662311
0112662323
0112854931

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

ஸ்ரீலங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியற் கட்சிகள் விபரம்!






(தேவையான பக்கங்களை அழுத்துவதன் மூலம் பெரிய அளவில் பார்வையிடலாம்)

ஸ்ரீலங்கா தேர்தல்த் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியற் கட்சிகளின் விபரங்களை கடந்த 2008 ஜூலை 03 ஆம் திகதி தேர்தல் அத்தாட்சி அதிகாரி தயானந்த திஸநாயக்க அறிவித்துள்ளார்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----