வன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 டிசம்பர், 2008

முறிகண்டி ஸ்ரீலங்கா படை வசம்!

வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 57 ஆம் படைப் பிரிவினர் கொக்காவிலுக்கு வடக்காகவும், அக்கராயன்குளத்துக்கு கிழக்காகவும் நகர்ந்து 2008.12.10 ஆம் திகதி நேற்றுப் பிற்பகல் முறிகண்டியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
ஒளிப்பேழை







சனி, 15 நவம்பர், 2008

கண்டாவளையில் மாவீரர் தின முன்னேற்பாடு!

வன்னி - கண்டாவளைக் கோட்டத்தில் கடந்த 2008.11.13 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.சி.சீராளன் ஏற்பாட்டில் கண்டாவளைக் கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுச் செயலாளர் திரு.செ.புஸ்பராஜா தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூரும் முன்னோடிக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினர், வட்டப் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மாவீரர் செயற்பாட்டுக் குழுவினர் மற்றும் தேசிய போரெழுச்சிக் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளித்தல், மாவீரர் துயிலுமில்லம், பொது இடங்கள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல், குருதிக்கொடை வழங்கல், களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல், வீதிகளில் மாவீரர் நினைவுப் பதாகைகளை அமைத்தல் மற்றும் இறுதிநாளில் மாவீரர் தினத்தை எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

புதன், 12 நவம்பர், 2008

பாலாவி ஏ-32 வீதியில் 4 பெண் விடுதலைப்புலிகள் கைது!


வன்னியில் ஸ்ரீலங்கா படை தரப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்று வரும் சண்டையில் ஏ - 32 வீதியில் பாலாவிக்கு அண்மித்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு பெண் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா படைதரப்பு கூறுகின்றது.

கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 வயதுடைய நிலாவெளி, 18 வயதுடைய இளவேனி, 19 வயதுடைய துருவேனி ஆகியோர் மற்றைய மூவருமென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலாவெளி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்று கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் ஸ்ரீலங்கா கல்வியமைச்சின் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

ஒளிப் பதிவு கோவை

செவ்வாய், 11 நவம்பர், 2008

முல்லைத்தீவு குமுளமுனை ஸ்ரீலங்கா படை வசம்!


முல்லைத்தீவில் இராணுவ முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினரின் 59 ஆம் படையணியினர் இன்று 2008.11.11 ஆம் திகதி மாலை முல்லைத்தீவின் தெற்கில் 13 கி.மீ தூரத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான குமுளமுனைக் கிராமத்தின் ஒரு பகுதியை அண்மித்துள்ளதுடன் முன்டிமுறிப்புக்கும் குமுளமுனைப் பாதைக்கும் இடைப்பட்ட பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

கிளிநொச்சியிலுள்ள யாழ் – பூநகரி கரையோர ஏ-32 பாதையின் மேற்கே அமைந்துள்ள பேய்முனையின் கிராஞ்சி பகுதியை ஸ்ரீலங்கா படையினர் நேற்று தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2008

வன்னியில் இருந்து மண்டைதீவுக்கு வள்ளதில் வந்த 19 பேர்!


தீபாவளி தினமான 2008.10.27 நேற்று வன்னியில் இருந்து 19 பொது மக்கள் வள்ளத்தின் மூலம் இடம்பெயர்ந்து மண்டைதீவுக்கு வந்துள்ளனர்.

முறிகண்டி பகுதியைச் சேர்ந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் 6 ஆண்களை மற்றும் இரு குழந்தைகள் உட்பட 19 பேர் பலத்த செல் வீச்சுக்கும் மத்தியில் பூநகரி ஊடாக மண்டைதீவுக்கு வந்துள்ளனர்.

கடற்படை அதிகாரிகளினால் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரச அதிகாரிகளிடம் இம் மக்கள் ஒப்படைக்கப்படவுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி இராமேஸ்வரத்தில் தென்னிந்திய திரைபடத்துறையினர் ஆர்ப்பாட்டம்! (பட இணைப்பு)

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி டைரக்டர் திரு.பாரதிராஜா தலைமையில் தென்னிந்திய திரைப்படத் துறையினர் இந்திய மத்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முகமாக ஆர்ப்பாட்டமொன்றினை இராமேஸ்வரத்தில் நடத்த சென்னையிலிருந்து விசேட புகையிரதத்தில் இராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஆதி காலத்தில் கரிகால சோழன் இலங்கை மீது படையெடுத்து சிங்களர்களை வெற்றி கொண்டு அவர்களை அடிமை படுத்தி கல்லணையை கட்டினான்.

ஆதித் தமிழர்கள் பூமியாக "லேமுரிய கண்டம்" மூழ்கிய போது அதன் மேல் உள்ள மலைப் பங்கான பூமி எச்சமே இலங்கை ஆகும். மட்டகளப்பு மண்ணையும்,மதுரை மண்ணையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒரே மண்ணே என நிருபணம் ஆனது.

அந்த மண்ணின் மைந்தர்களை இன்று கொடுங்கோலன் ராஜபக்ஷ விரட்டி கொல்கிறான், அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற, தமிழனை கொன்று குவித்து அந்த பிணத்தின் மீது அரியாசனம் ஏற முயல்கிறான்.

விடுதலை புலிகள் தமிழனை கேடயமாக பயன்படுத்து வதாக கூசாமல் பொய் சொல்கிறான், தமிழனை முன் நிறுத்தி அவர்களை கொன்றொழித்து, இவன்தான் வெற்றி பெற துடிக்கிறான்.

தமிழ் இனம் மானம் மிகுந்தது, வீரம் செறிந்தது, தமிழன் இறுதியில் வென்றே தீருவான், மட்டக்களப்பில் தமிழ் பெண்ணின் பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு வைத்து கொல்லும் கேடுகெட்ட ஈனத்தனமான வீரம் சிங்களனுடையது, அப்பாவி பிஞ்சுகள் மீது ரசாயன குண்டுகளை வீசி அழிக்கும் வீரம் இவனுடையது.

இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள், உடனே ராடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும், அக்கருவிகளை இயக்க கூட தெரியாத அந்த முட்டாள்கள் இரண்டு இந்தியரை வைத்து இயக்கி கொண்டுள்ளனர் அவர்களையும் திரும்ப அழைக்க வேண்டும்.

இப் போராட்டத்துக்கு ஆதரவு செய்து எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சென்னையில் காலை முதல் மாலை வரை கமலஹாசன், ரஜனிகாந்த் உட்பட தென்னிந்திய நடிகர்கள் பலரும் உண்ணாவிரததப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக நடிகர்கள் சங்க தலைவர் திரு.சரத்குமார் தெரிவித்துள்ளார்.




வெள்ளி, 3 அக்டோபர், 2008

வன்னியில் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மீது குண்டுத் தாக்குதல்!

இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் ஸ்ரீலங்காவின் விமானப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் காவல்துறை நடுவப் பணியகத்தின் கட்டிடத் தொகுதிகளை பலத்த சேதமடைந்துள்ளன.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வன்னி செயலகத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடத்திய மற்றொரு தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் களஞ்சியசாலை அழிவுக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் கிளிநொச்சிக்கு 04 கி.மீ மேற்காக அமைந்த கனகபுரம் பாதையை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சனி, 20 செப்டம்பர், 2008

வன்னியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இடம் பெயருகின்றது !

போர்கால சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைச் செய்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் இரணைமடு சந்தியில் செயலகத்தைக் கொண்டு செயற்பட்டு வந்தது, ஆனால் இன்றைய யுத்த சூழல் மக்களை இடம்பெயர வைத்துள்ளதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு இடம்பெயருகின்றது.

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

கிளிநொச்சியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு இடம் பெயரும் மக்கள் !

கிளிநொச்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படைதரப்பு தொடர்ச்சியாக நடாத்தி வரும் எறிகணை வீச்சு, விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் தரை மார்க்கமான தாக்குதலில் தாக்கத்துக்கு உள்ளாவது வன்னியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களே ஆகும்.

இக் கொடூரத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் கிளிநொச்சிப் பகுதியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றார்கள்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

வன்னியிலிருந்து "கரிதாஸ்" வெளியேறாது !

வன்னியில் இருந்து செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறியுள்ளன.

இந் நிலையில் வன்னியில் தொண்டு பணியில் ஈடுபட்டு வந்த கத்தோலிக்க அமைப்பான "கரிதாஸ்" வெளியேறப் போவதில்லையென உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

வன்னியில் தங்கியிருந்து இம் மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து முன்னெடுப்பதே எமது நோக்கமென "கரித்தாஸ்" தெரிவித்துள்ளது.

ஐநா வெளியேறுகின்றது !

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.

ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில் இருந்து இன்றே வெளியேறி விடுவார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.

திங்கள், 15 செப்டம்பர், 2008

வன்னியிலுள்ள ஐ.நா. அதிகாரிகள் விரைவில் வெளியேறுவர்!

யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் நிவாரணப்பணிகளை அரச சார்பற்ற அமைப்புகளால் செய்ய முடியாதிருப்பதால் வன்னியில் தங்கியிருந்து செயற்படும் தன்னார்வ தொண்டூழியர்கள் அனைவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வன்னியை விட்டு வெளியேறி விடுமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி வன்னியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அதன் பணியாளர்களுக்கான பாதுகாப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க மாட்டாது.

அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை முன்னெடுக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ் ஆங்கிலப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

வன்னியில் பணியாற்றும் ஐ.நா. அதிகாரிகளின் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதால் தமது மனிதாபிமானப் பணிகளை அரச அதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு வவுனியாவில் தங்களது அலுவலகத்தை அமைத்துச் செயற்படுமாறு அவர்களுக்கு அறிவுறித்தியுள்ளோம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ்.

தற்போதைய சூழ்நிலையில் வன்னியில் இருந்து செயற்பட்டு வந்த அரசசார்பற்ற நிறுவனங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. அமைப்புத் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் வெளியேறி விட்டதாகவும், வன்னி மக்கள் ஐ.நா அதிகாரிகளை வெளியேற வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம், வீதி மறிப்புப் போராட்டம் போன்றன நடாத்தி தடுத்ததால் தற்காலிகமாக தங்களது வெளியேற்றத்தை ஒத்திவைத்துள்ள ஐ.நா.அதிகாரிகளும் விரைவில் வெளியேறி விடுவார்களெனவும் தகவல்கள் கூறுகின்றன.

வியாழன், 4 செப்டம்பர், 2008

வவுனியா வந்துள்ள புதுக்குடியிருப்பு மக்கள் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மாத்தளன் கரையோரப் பகுதில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மயிலீட்டியைச் சேர்ந்த 18 பேர் வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு வந்துள்ளதாக வவுனியா புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வன்னி போருக்கு முகம் கொடுக்க முடியாமல் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக 2008.08.26 ஆம் திகதி மாத்தளனில் இருந்து 3 படகுகளில் புறப்பட்டுச் சென்ற போது நடுக்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டு திருமலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 1 செப்டம்பர், 2008

வன்னி மனித அவலத்தை நீக்குவது எப்படி?

வன்னியில் இடம்பெற்று வரும் ஸ்ரீலங்கா படை நடவடிக்கையினால் அங்கு வாழும் மக்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் கஷ்டமுறுகின்றார்கள், உணவு, மருந்து போன்றனவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன் தங்க வசதியுமின்றி மரத்தின் கீழேயே தங்குவதாகவும், இவர்களுக்கு தற்காலிக கொட்டகைகளுமின்றி அவதியுறுவதாகக் கூறி வருகின்றார்கள், ஆனால் நிர்க்கதியான நிலையில் இருந்து இவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று கூற மறந்து விட்டனர்.

வன்னி மக்களை ஸ்ரீலங்கா கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருமாறு ஸ்ரீலங்கா படையினர் துண்டுப் பிரசுரம் மூலம் தெரிவித்துள்ளனர், ஆனால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் விடுதலைப் புலிகளிடம் சிக்கி இருப்பதனை ஊடகங்கள் எழுத தயங்குகின்றன.

வன்னியில் இருந்து இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிக்கு ஒருவர் வரவேண்டுமெனில் விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும், இப்போது இராணுவ நடவடிக்கை சூடு பிடித்திருப்பதால், வெளிப் பிரதேசத்துக்குச் செல்லுவதற்கான அனுமதி புலிகளால் மறுக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளுக்குத் தெரியாமல் அவர்களின் அனுமதியின்றி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சிலர் வந்திருந்தாலும் கூட, உயிரோடு விளையாடும் முயற்சியாகவே கருதப்படுகின்றது. திருட்டுத்தனமாக வந்து கைது செய்யப்படுபவர்கள் சண்டை இடம்பெறும் முன்னணி நிலைகளுக்கு விடுதலைப் புலிகளினால் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் செல் வீச்சுக்களுக்கும், விமானக் குண்டுத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க முடியாமல் திக்குமுக்காடி நிற்கும் வன்னி மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களோ அல்லது ஆதரவாளர்களோ கிடையாது.

வன்னிப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கான தடைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அகற்றி அவர்களை வெளியே செல்ல அனுமதிப்பதன் மூலம் அங்கு ஏற்படவிருக்கும் பாரிய மனித அவலத்தைத் தடுக்கலாம்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

மாவீரன் பண்டாரவன்னியனின் 205 ஆம் வெற்றி விழா !


வன்னி இராஜ்ஜியத்தின் இறுதிக் குறுநில மன்னனாக இருந்து 1803.08.25 ஆம் நாள் முல்லைதீவில் எம்மை ஆக்கிரமித்த ஆங்கிலேயரையும் அவர்களின் கோட்டையையும் அழித்து அங்கிருந்த மூன்று பீரங்கிகளையும் கைப்பற்றி வீரவாகை சூடிய மாவீரன் பண்டாரவன்னியனின் 205 வது வெற்றி விழா நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

கற்சிலைமடுவில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச்சிலை வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பண்டாரவன்னியன் நினைவுக்கல் நடப்பட்டு விழா சிறப்பாக நடந்தேறியது.

(குறிப்பு படத்தில் இருக்கும் கல்வெட்டு கணினியில் வரைந்தது)

புதன், 20 ஆகஸ்ட், 2008

வன்னி மக்களுக்கு கிழக்கு மாகாண சபையின் அவசர உதவி !

ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்றுவரும் யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களுக்கு அநர்த்த நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரெத்தினம், அம் மாகாணசபைக்குக் கோரிக்கை விடுத்ததன் பேரில் மனிதாபிமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள கிழக்கு மாகாணசபை முடிவு செய்துள்ளது.

யுத்தத்தால் பாதிப்புற்று இடம்பெயர்ந்துள்ள 150 000 பேருக்கும் மேற்பட்ட வன்னி மக்களுக்குக் தேவையான அவசர உதவிகளையும், அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் இதர பொருட்களையும் அனுப்ப கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் சி. சந்திரகாந்தன் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்கள்.

விரைவில் இம்மக்களுக்கான அவசர உதவிகளும், அத்தியாவசியப் பொருட்களும் போய்ச் சேருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----