வன்னியில் இருந்து செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறியுள்ளன.
இந் நிலையில் வன்னியில் தொண்டு பணியில் ஈடுபட்டு வந்த கத்தோலிக்க அமைப்பான "கரிதாஸ்" வெளியேறப் போவதில்லையென உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.
வன்னியில் தங்கியிருந்து இம் மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து முன்னெடுப்பதே எமது நோக்கமென "கரித்தாஸ்" தெரிவித்துள்ளது.
கரிதாஸ் நிறுவனத்தின் சில நிகழ்ச்சித் திட்டங்களில் நானும் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் பங்கேற்றவன் என்ற வகையில் தங்கள் செய்தி ஓரளவு மனநிறைவைத் தருகிறது. அப்பாவிப் பொதுமக்களைப் பற்றிய சிந்தனை எவரிடமேனும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றுள்ள இக்கட்டான நிலையில் எமது போராட்டம் மக்களுக்கு உதவிவந்த பொதுத் தொண்டு நிறுவனங்களையும் துரத்தியடித்துவிட்டது. யாரிடம் முறையிடுவது எனத் தெரியாதுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவியளிக்கும் அலுவலகங்களே இடம்பெயர்ந்துள்ள நிலையில் கடவுளாலும் காப்பாற்ற முடியாத பரிதாபத்துக்குரியவர்களாக அகதிகள் அல்லல்படுவதை அறியமட்டும் முடிகிறது. மிகவும் மனதுக்கு வேதனையாக இருப்பதை மாத்திரம் என்னால் சுட்டிக்காட்டமுடிகிறது.
பதிலளிநீக்குதாங்க முடியாத வேதனையுடனேயே இச் செய்திகளை "களத்துமேடு" பதிவேற்றம் செய்கின்றது.
பதிலளிநீக்கு//இன்றுள்ள இக்கட்டான நிலையில் எமது போராட்டம் மக்களுக்கு உதவிவந்த பொதுத் தொண்டு நிறுவனங்களையும் துரத்தியடித்துவிட்டது//
///உதவியளிக்கும் அலுவலகங்களே இடம்பெயர்ந்துள்ள நிலையில் கடவுளாலும் காப்பாற்ற முடியாத பரிதாபத்துக்குரியவர்களாக///
கடவுள் தான் எம்மவருக்குத் துணை முகுந்தன்.