புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் ஊடகங்களில் ஒன்றான "டான் தமிழ்அலை" செய்மதி வானொலி மூலமாக சனிக்கிழமை இரவு வேளையில் "உறவுப்பாலம்" எனும் நேரடி விவாதக்களமொன்றினை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த உறவுப்பாலத்துக்கு இலங்கையில் இருக்கும் குறித்த அரசியல்வாதியிடம் உலகம் வாழ் தமிழர்கள் தொலைபேசியூடாக வினாக்களைத் தொடுக்கலாம், அதற்கு தொலைபேசி மூலமாக பதிலிறுப்பார்கள் என அறிய முடிகின்றது.
இது தொடர்பாக கடந்த வாரம் ஈபிஆர்எல்எவ் திரு.இ.துரைரெட்ணம் நேயர்களின் திறந்த வினாக்களுக்கு உடனேயே பதில் தெரிவித்திருந்தார், அதேபோன்று நேற்று முன்தினம் உறவுப்பாலத்திற்காக, நேயர்களின் தொலைபேசி மூலமான வினாக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு பிள்ளையான் சந்திரகாந்தன் பதிலளித்திருந்தார்.
அவரின் பதிலில் அதிரடி இணையத்தளத்தை விமர்சித்து இருந்தாரென காரணங்காட்டி இன்று அதிரடி இணையத்தளம் பதிவொன்றை இணைத்துள்ளது.
கடந்த காலங்களில் பிள்ளையானின் அடாவடித்தனங்கள் அதிகரித்து வருவது எல்லோரும் அறிந்ததே, ஆனால் அரசாங்கத்தின் கோடரிக்காம்பாக அவர் இருப்பதால் நினைப்பதெல்லாவற்றையும் அவரால் அரங்கேற்ற முடிகின்றது, தெற்கில் அடாவடித்தன ஆட்சியாளர் ஒரு மேர்வின் சில்வாவெனில் கிழக்கிலும் அடாவடிதன ஆட்சியாளராக ஒரு பிள்ளையான் என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரபல்யமாக இருக்கின்றார் கிழக்கின் முதலமைச்சர். இதனை எழுத ஊடகங்களும் பயந்து வருகின்றன, அண்மையில் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கான தடையும் துப்பாக்கியூடான அச்சுறுத்தலும் பிள்ளையானால் கிழக்கில் ஏற்படுத்தப்பட்டதாகும். கடந்த மாதம் தினமுரசு விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் பிள்ளையான் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிந்ததே!
ஒரு சமூகத்தின் பொறுப்புமிக்க ஒரு நபர் ஊடகங்களூடான விவாதங்களில் கலந்து கொள்ளும் போது காத்திரமாகப் பதிலிறுக்க வேண்டும்.
pls visit www.vimbam.blogspot.com and drop your comments.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அப்புச்சி.
பதிலளிநீக்குவிரைவில் விம்பம் தளத்துக்கு பின்னூட்டமிடுவேன்.
அன்பின் களத்துமேடு வலைப் பதிவாளருக்கு தங்களின் கருத்துக்கு நன்றி நீண்டகாலமாக தங்களின் பதிவுகளை வாசித்து வருகிறேன்,ஆனால் என்னவோ பதில் எழுதவில்லை.மன்னிக்க வேண்டும்.நீங்கள் குறிப்பிட்டது போல எல்லோரதும் செவ்வியும் கண்டிப்பாக விம்பத்தில் வெளிவரும்.கேள்விகளை மாத்திரமே நாம் கேட்கிறோம் பதில்கள் அவர்களுடையது.
பதிலளிநீக்குநன்றி