மட்டக்களப்பு நியாப் திட்ட பெண் பொறியியலாளர் 31 வயதுடைய பிறேமலதா லோகேஸ்வரன் இன்று காலை 7 மணியளவில் தேற்றாத்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரது சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் பலியாகிய அறிவு சான்ற பலர் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் இனம் தெரியாதவர்களால் பலியெடுக்கப்பட்டு வருவதை யாரும் கண்டித்ததாக அறிய முடியவில்லை. முட்டாள்தனமான இச் செய்கைகளால் பழி தமிழினத்தின் மேலும் பாதிப்பு எமது தமிழ்ச் சமூகத்திற்குமே என்பதை எப்போது உணர்வார்கள்!
பதிலளிநீக்குஇளவயதிலேயே எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் படித்துப் பட்டம்பெற்று எமது தாயகத்தில் எத்தனை இடரிருந்தாலும் பணிபுரியும் அனைத்து நல் இதயங்களுக்கும் எமது வணக்கங்கள்!
மேலதிக விபரங்கள் எனது கிருத்திய வலைப்பதிவில் விரைவில் வெளிவர இருக்கிறது. கொல்பவர்கள் மாற்றுக் கொள்கையுடைய அரசியல்வாதிகளைத் தான் கொல்கிறார்கள் என்று நோக்கினால் (என்னுடைய அடிப்படைக் கொள்கையே இறைவன் படைத்த உயிரை எவரும் கொல்லவோ அல்லது தண்டிக்கவோ எந்த உரிமையும் இல்லை என்பது) இன்று படித்த மேதைகள் சாதாரண அப்பாவிகள் என பொதுவாக கொல்லப்படுவதற்கு என்ன காரணம் யார் காரணம் என்று அறிய முடியாதுள்ளது. முன்னரானால் குறிப்பிட்ட கொலைக்கு ஏதாவது ஒரு அமைப்பு காரணத்தைச் சொல்லும். ஆனால் என்ன எமது மண்ணில் நடக்கிறது என்பதே புரியாத புதிராக இருக்கே ஈழவா!
துப்பாக்கி மலிந்த பூமியல்லவா
பதிலளிநீக்குதமிழீழ தேசம்
தெருச்சண்டை முதற்கொண்டு
குடும்பப் பகையீறாக
அனைத்துக்கும்
பதிலும் தண்டனையும்
துப்பாக்கிச் சூடுதானே!
தங்களுக்குத் தாங்களே தலைவனென்னும் பதங்களைத் தாங்கிக் கொண்டு இவர்கள் நடாத்தும் கொட்டமடிப்புக்கு அளவே இல்லையா? இவர்களுக்கு யார் கொடுத்தார்கள் கொல்லும் அதிகாரத்தை அல்லது இயமனின் பணியை!
கருத்துக்கு நன்றி முகுந்தன்.