ஸ்ரீலங்காவில் 2008 ஜனவரி முதல் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவினரின் மக்கள் பணியகத்திலும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு 2 - 144 இலக்க காரியாலயத்திலும் நேற்று வரை சுமார் 239 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 152 பேர் பற்றிய தகவல்கள் எதுவுமில்லாததால் இவர்கள் பற்றிய தகவல்களை அக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் தருமாறு நேற்றுக் காலை செத்சிறிபாய இயந்திரவியல்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவினர் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவிடம் கேட்டுள்ளனர்.
இக் கூட்டத் தில் குழுவின் அங்கத்தவர்களான பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், வாசுதேவ நாணயக்கார, இணைப்பு அதிகாரிகளான ஆர். திவ்வியராஜன், லால் வெடிக்கார, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண, பயங்கரவாத தடுப்புப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அசோகா கல்கமுவ, கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குநர் வாக்கிஸ்டர், இரகசிய பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
காணாமல் போனவர்களில் தகவல் எதுவும் கிடைக்காத 152 பேர் பெயர் விபரங்கள்:
1. அன்ரனிப்பிள்ளை தனபாலன், யாழ்ப் பாணம் 36 வயது
2. சிதம்பரப்பிள்ளை நித்தியலக்ஷ்மி, புத் தளம், 30 வயது
3. குணசெல்வம் மஹிந்தன், கிராண்ட்பாஸ், 37 வயது
4. சிதம்பரபிள்ளை சிரோன் சிவபாதம் புத்தளம், 28 வயது
5. டீ. கமலகாந்தன், மட்டக்குளிய, 26 வயது
6. சுப்பிரமணியம் இராமச்சந்திரன், துன்னாலை,யாழ்ப்பாணம், 37 வயது
7. திலகராஜா செல்வகுமார், கொழும்பு, 26 வயது
8. தங்கரட்ணம் பாலசுப்பிரமணியம், உடப்பு, 35 வயது
9. டீ. சிவராசா ஜெயகாந், தெஹிவளை, 28 வயது
10. டுலிப் அரிகுமார் கல்கிசை, 21 வயது
11. சுப்பிரமணியம் மயூரன், கொழும்பு, 25 வயது
12. மொஹமட் நசீர், நீர்கொழும்பு, 26 வயது
13. ஆசீர்வாதம் சூரியகுமரன் கிராண்ட்பாஸ், 22 வயது
14. அசன் மொஹமட் நசீர் கொழும்பு, 27வயது
15. சூரியகுமார் கொழும்பு, 25 வயது
16. சூசைப்பிள்ளை அன்டன், வவுனியா
17. தர்மகுலசிங்கம் மயூரன் கொள்ளுப்பிட்டி, 22 வயது
18. திஸ்ஸ வீரசிங்கம் பெனடிக் மட்டக் குளிய, 39 வயது
19. வீரபத்திரன் வைரமுத்து களுவாஞ் சிக்குடி, 51 வயது
20. செல்வமுத்து ஜெயகாந்தன் மொனராகலை, 27 வயது
21. கே. இராசதுரை, புத்தள, 32 வயது
22.நல்லதம்பி தம்பிமுத்து கல்முனை, 34 வயது
23. முத்துலிங்கம் உதயகுமார், கொட் டாஞ்சேனை, 37 வயது
24. ஜெயராம் ஜெசுதன், வவுனியா, 23 வயது
25. அழகப்பன் நடராஜா வவுனியா, 22 வயது
26. எம். தர்மராஜா மொனராகலை, 22 வயது
27. எம். தினேஷ்குமார் மொனராகலை, 26 வயது
28. வேலுசாமி புண்ணியமூர்த்தி மொனராகலை, 26 வயது
29. சடாச்சரம் திருவருள் பண்டாரவளை, 22 வயது
30. ஆர். ஜெயகாந்தன் மொனராகலை, 25 வயது
31. சிவராசா ஜெயந்தன் தெஹிவளை, 27 வயது
32. பீ.ஏ.எம். ரபீக் கொழும்பு, 40 வயது
33. குமாரரட்ணம் கிருஷ்ணராஜ், கொழும்பு, 30 வயது
34. வி.எஸ். குங்ஜா, புத்தளம், 38 வயது
35. கே.என். நாகேஸ்வரன், கொச்சிக்கடை, 41 வயது
36. செபஸ்டியன் என்டனிராஜ், மன்னார், 30 வயது
37. தேவபிரகாசம் ஜோன், தம்புள்ள, 57 வயது
38. கோவிந்தன் நாகராஜ், புத்தளம், 27 வயது
39. இமானுவேல் அன்டனிதாஸ் கொட்டாஞ்சேனை, 57 வயது
40. யு.எல். நிசார் திருகோணமலை, 31 வயது
41. நாகலிங்கம் நதிகுமார் மொனராகலை, 28 வயது
42. ரவீந்திரன் ரஞ்சித் கொழும்பு, 25 வயது
43. முத்துவேல் ஸ்ரீவினோதரன், மொனராகலை
44. தம்பிராஜா கார்தீபன், கொழும்பு, 26 வயது
45. சடாசரம் அருள், பண்டாரவளை, 28 வயது
46. எம். சனுன் முனீர்,மாதம்பிட்டி, 42 வயது
47.கருணேந்திரன் கருணாகரன், மட்டக்குளி, 29 வயது
48. செல்வச்சந்திரன் நிசான், மட்டக்குளி, 22 வயது
49. நடுவிலான் சரஸ்வதி, கதிரேசன் வீதி, 31 வயது
50. நாகேந்திரன் ஜெயபிரபா, கொழும்பு, 26 வயது
51. செல்லையா தர்மலிங்கம், மட்டக்களப்பு, 26 வயது
52. கனகசூரியம் ராஜா, மட்டக்களப்பு, 27 வயது
53. பரமானந்தன் துஷ்யந்தன், கதிரேசன் வீதி, 24 வயது
54. கே. வசீகரன், கதிரேசன் வீதி, 26 வயது
55. செல்லத்துரை கண்ணன், கதிரேசன் வீதி, 24 வயது
56. வரதராஜன், வெள்ளவத்தை
57. ஸ்ரீதரன் வெள்ளவத்தை, 28 வயது
58. தங்கவேல் உதயகுமார், வத்தளை, 31 வயது
59. பரமலிங்கம் சந்திரகாந்தன், கொழும்பு, 47 வயது
60. வீரகுட்டி சதாரலிங்கம், பம்பலப்பிட்டி, 40 வயது
61. எஸ்.ஜீ. பிரதீபன், மட்டக்களப்பு, 22 வயது
62. தில்லையம்படி முரளிதரன், மட்டக்களப்பு, 36 வயது
63. யஸ்பன் கிரிபர்ட், ஜெம்பட்டா வீதி, 43 வயது
64. ஸ்ரீகாந்தன் சசிதரன், கதிரேசன் வீதி, 30 வயது
65.மகாராஜா குகதாசன், நீர்கொழும்பு, 26 வயது
66.விநாயகம் வாகீசன், கதிரேசன் வீதி, 24 வயது
67.பேரின்பன் நிசாந்தன், புத்தளம், 26 வயது
68. கதிரேசன் சிவபாலன், தெஹிவளை, 38 வயது
69. சிவஞானரட்ணம் ,முகுந்தன், வெள்ளவத்தை, 32 வெள்ளவத்தை
70. எம். புகாரி எம். நிஸ்தார்,புத்தளம், 32 வயது
71. விவேகானந்த ராஜா, வெள்ளவத்தை, 29 வயது
72. வேலாயுதம் மதுரகுலசிங்கம், கொழும்பு, 29 வயது
73. நடேசமூர்த்தி கோணேஸ்வரன், கொட்டாஞ்சேனை
74. டாசன் ரொபின்சன், கொழும்பு
75. சுதர்சனா கொழம்பகே, பிலியந்தல, 36 வயது
76. சுலான் சஞ்சன, பிலியந்தல, 05 வயது
77. செல்வரட்ணம் கௌசிகா, கொச்சிக்கடை, 22 வயது
78. நடராஜா சுகுமாரன், யாழ்ப்பாணம்
79. புஸ்பராசா புஸ்பநாதன், யாழ்ப்பாணம், 29 வயது
80. புஸ்பராசா கிருஷ்ணகுமார், கொட்டாஞ்சேனை, 36 வயது
81. வீரையா பத்மநாதன், கொட்டாஞ்சேனை, 45 வயது
82. செல்லையா சுப்பிரமணியம், கொட்டாஞ்சேனை, 28 வயது
83. சுப்பிரமணியம் பிரதீபன், யாழ்ப்பாணம், 24 வயது
84. கே.டீ. சிவதாசன், யாழ்ப்பாணம், 35 வயது
85. விவேகானந்தன் கிருஷ்ணகுமார், வத்தளை, 33 வயது
86. விவேகானந்தன் ரஜனிகுமார், வத்தளை, 27 வயது
87. வெள்ளைசாமி சாரூன், அக்கரப்பத்தனை, 31 வயது
88. புஷ்பராஜா கிருஷ்ணகுமார், கொழும்பு
89. கேசவன் கருணாகரன், திருகோணமலை, 37 வயது
90.தங்கராசா ராஜு, திருகோணமலை, 32 வயது
91. மூக்கையா ரஞ்சன், மகாபாகே, 29 வயது
92. பரமசாமி கணேசமூர்த்தி, தெஹிவளை, 39 வயது
93. வில்வரட்ணம் ஜெயவதன், தெஹிவளை, 23 வயது
94. ஏ. நிசாந்த மதுரபெருமா, வரலபன, 42 வயது
95. ஏ.என்.எம்.கைனு, வரலபன, 05 வயது
96. அப்துல் சபிதுல்லா, புத்தளம், 30 வயது
97. நாராயணசிங்கம் லோகநாதன், தெஹிவளை, 30 வயது
98. முருகையா சதாசிவம், தெஹிவளை, 31 வயது
99. முருகையா சுதெவன், களுபோவில, 31 வயது
100. மயில்வாகனம் பிரதிவிராஜ், வெள்ளவத்தை, 37 வயது
101. நடராஜா சுகுமாரன், புறக்கோட்டை, 60 வயது
102. ராஜேந்திரன் வின்சன்ட் விமல்ராஜ், கொழும்பு, 26 வயது
103. செல்வராசா சுதன், வவுனியா, 25 வயது
104. அப்துல் முதலிப் மொஹமட், புத்தளம், 35 வயது
105. ஜபீர் ரிசாட் முகமட், புத்தளம், 30 வயது
106. சுப்பிரமணியம் உதயகுமார், வவுனியா, 34 வயது
107. நடராசா பேரின்பராசா, வவுனியா, 33 வயது
108. பழனியாண்டி சண்முகராசா, தெஹிவளை, 34 வயது
109. முத்துக்குமார் செல்வகுமார், தெஹிவளை, 28 வயது
110. அருணாசலம் சந்திரகலா, லுணுகல, 28 வயது
111. குப்பமுத்து பேரின்பநாயகம், லுணுகல, 33 வயது
112. அமத்தன் சண்டீப், கடவத்தை, 04 வயது
113. நிரோசா செல்வதுரை, கடவத்தை, 24 வயது
114. டீ.எஸ். ஜலில் ஜுமாட், வத்தளை, 71 வயது
115. சின்னையா தேவநாயகம், தெஹிவளை, 38 வயது
116. பதிநாதர் பிரசன்னா, யாழ்ப்பாணம், 26 வயது
117. ஆரண் பிரபானந்த், யாழ்ப்பாணம், 21 வயது
118. ரட்ணசபாபதி இளமாறன், தெஹிவளை, 28 வயது
119. சண்முகம் காளிதாஸ், வட்டவளை, 28 வயது
120. நாகேந்திரன் பிரதீபன், திருகோணமலை, 25 வயது
121. திருச்செல்வம் தவனேசன், கிராண்ட்பாஸ், 38 வயது
122. பீ. காராளசிங்கம், வவுனியா, 55 வயது
123. சிவஞானம் அன்பழகன், வவுனியா
124. மகேந்திரராஜா சாரங்கன், வவுனியா, 23 வயது
125. பரமநாதன் சிவகுமார், மட்டக்குளி, 23 வயது
126. செல்வராஜா பாலகுமரன், கொழும்பு, 34 வயது
127. பாலசுப்பிரமணியம் சந்திரசேகரன், கொழும்பு
128. முருகப்பிள்ளை சிவகுருநாதன், வவுனியா, 30 வயது
129. கந்தையா கேதாரன், வவுனியா, 30 வயது
130. மு. சிவகுருநாதன், திருகோணமலை, 28 வயது
131. வி. ராசநாயகன், தம்பலகாமம்
132. கணகபிள்ளை யோகராஜா, மட்டக்களப்பு, 32 வயது
133. வைரமுத்து யோகநாதன், மட்டக்களப்பு, 32 வயது
134. அன்டனி ஜோன் ரீட், வத்தளை, 24 வயது
135. ஸ்டென்லி லியோன், கொச்சிக்கடை, 51 வயது
136. ஸ்டென்லி ரொசான் லியோன், கொச்சிக்கடை, 21 வயது
137. பிரபாத் சக்கரவர்த்தி, யாழ்ப்பாணம், 26 வயது
138. கணபதி ரஜிகுமார், வவுனியா, 22 வயது
139. கெட்ளின் ஸ்டேனிஸ் வின்சன், வத்தளை, 39 வயது
140. அரியரட்ணம் கோபிநாத், வவுனியா, 32 வயது
141. சகாதேவன் உதயகுமார், செட்டித்தெரு, 39 வயது
142. ராஜநாயகம் ஜெயநேசன், மன்னார், 32 வயது
143. பிரான்சிஸ் திருராஜா, மன்னார், 34 வயது
144. எம்.ஜே.எம். பாயிஸ், வெல்லம்பிட்டி, 37 வயது
145. தேவசேனாதிபதி சுகந்தன், யாழ்ப்பாணம், 27 வயது
146. பரமநாதன் முருகானந்தன், யாழ்ப்பாணம், 34 வயது
147. தியாகராஜா ஜெகன், திருகோணமலை, 29 வயது
148. நாகநாதன் ரஜீவ், கொழும்பு, 21 வயது
149. விஸ்வநாதன் பிரதீப், கொழும்பு, 17 வயது
150. இராமலிங்கம் திலகேஸ், கொழும்பு, 17 வயது
151. மொஹமட் டிலான், கொழும்பு, 24 வயது
152. மொஹமட் சஜீத், கொழும்பு, 24 வயது
கவனித்தீர்களா களத்துமேடு.இந்தக் காணாமல் போனவர்களின் வயதை.ஓரிருவரைத் தவிர அத்தனை பேரும் இளைய வயதினர்.என்ன சொல்ல.பாவம் புண்ணியம் உண்மையாய் இருந்தால் காலம் பதில் சொல்லட்டும்.
பதிலளிநீக்குதமிழ் இன அழிப்பு...அறுவடை.
இளம் பராயத்தினர் ஏன் கைதாகின்றனர் அல்லது காணாமல் போகின்றார்கள் என்பதை நாம் மீளாய்வு செய்து பார்க்க வேண்டுமல்லவா ஹேமா?
பதிலளிநீக்கு1. இளைஞர்களின் வடிவத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
2. மக்களே வி.பு களென இளையவர் கரங்களில் துப்பாக்கி கொடுக்கப்பட்டு பயிற்சிக் களங்களில் நிறுத்தப்பட்டு புகைப்படமும் எடுத்து மலிவு விளம்பரப் படுத்தியமையின் விளைச்சல்.
3. சில இராணுவ தாக்குதல் சம்பங்களை வி.பு. உரிமை கோராமல் மக்கள் படை தான் செய்துள்ளது என சாட்டுக் கூறியமை.
இப்படியான இன்னோரன்ன விடயங்களே எம்மை ஆதிக்கவாதிகளின் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
களத்துமேடு. தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇவ்வாறான தகவல்களை வெளியிடும்போது உங்களுடைய பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
கொழும்பில் ஆட்கடத்தல் என்ற மர்மம் ஆரம்பமான காலகட்டம் 2005 ஏப்ரல் முற்பகுதியலாகும்.
இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குண்டுத்தாக்குதல் இடம்பெற்று மறு நாள் (அதற்கடுத்த நாளாகவும் இருக்கலாம். நினைவில்லை) ஐந்து இளைஞர்களின் தலையில்லா முண்டங்கள் அவிசாவளைக் காட்டிலிருந்து மீட்கப்பட்டது. அதனை பார்த்து செய்தி சேகரிக்க நான் நேரடியாகச் சென்றிருந்தேன்.
அந்த இளைஞர்கள் யாரென அடையாளம் காண ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் (தலை இல்லாத காரணத்தினால்) தமிழர்கள் என்ற சந்தேகம் பெரும்பாலும் நிலவியது. பத்திரிகையில் பிரசுரமான மறுநாள் வத்தளையிலிருந்து வந்த வயதான ஒருவர் எமது அலுவலகத்தில் கதறிக் கதறி அழுதார். தன்னுடைய மகனையும் காணவில்லை என்றும் இதில் எப்படி கண்டுபிடிப்பது என்றும் மன்றாடி அழுதுப் புலம்பினார்.
இறந்த ஓர் இளைஞனின் கால் விரலில் காணப்பட்ட சிறு அடையாளமே இந்தத் தந்தையின் மகன் தான் என்பதை உறுதிப்படுத்தியது.
இன்னும் எழுதலாம்...
இதுதான் ஆரம்பம். இதற்குப் பிறகு அந்த வருடத்தில் மாத்திரம் 90 இற்கும் அதிகாமனோர் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போயினர். ஆரம்பத்தில் கடத்தப்பட்டோரின் எந்தத் தகவலும் இப்போது வெளியாவதில்லை. எந்தச் செய்திகளையும் யாரும் வெளியிடுவதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றும் உலகம் அறியும்.
நன்றி களத்துமேடு.
கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி நிர்ஷன்.
பதிலளிநீக்குஎழுத்தில் தணிக்கையின்றி எழுத வேண்டும் எனும் ஆதங்கம் தான் என்னை எழுதத் தூண்டுகின்றது, உண்மைச் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும் அல்லவா?
1995 ஆம் ஆண்டில் இருந்து ஆட்கடத்தல், தலையில்லா முண்டங்கள், கைகள் பின்னால் பிளாஸ்டிக் விலங்கினால் பிணைக்கப்பட்டு களனி கங்கையில் மிதக்கவிடப்பட்ட சிதைவுற்ற சடலங்களும் இதன் தொடக்கமே!
கறுவாத் தோட்டம் (குருந்து வத்த) பிரதேசம் இச் சம்பவங்களுக்குச் சூனியப் பிரதேசமாக இருந்தது, இவை பற்றிய செய்திகளும் வீரகேசரியில் பிரசுரமாகியும் இருந்தன.
பத்திரிகாசிரியர் திரு.நடராஜா இச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தார், இன்னும் பலவுள்ளன.
அடிக்கடி வாருங்கள் நிர்ஷன், முடிந்ததைச் செய்வோம்.
ஆமாம்!
பதிலளிநீக்குஆட்கடத்தல்கள் காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பாக நிறைய எழுதலாம். பாதிக்கப்பட்டவர்களே கால ஓட்டத்தில் சில விடயங்களை உணரத்தொடங்கிவிட்டார்கள்.
தன் கணவர் கடத்தப்பட்டவுடன் எப்படியாவது மீட்டுத்தர வேண்டும் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என ஓடோடி வரும் மனைவிமாரின் கண்ணீர்க் கதைகளை பிரசுரித்தவுடன் கணவர் மீண்டும் கிடைத்துவிடுவார்.
சரி அவரிடம் உண்மைத் தகவல்களைப் பெறலாம் என்று சென்றால் அன்று அழுது புலம்பிய மனைவி சொல்வார், "தம்பி கணவர் வீட்டில் இல்லை. தயவு செய்து இதனை ஆராய முற்படாதீர்கள்"
......எல்லாருக்கும் பொதுவேதனை தான் என எண்ணுபவர்கள் குறைவு களத்துமேடு. எல்லாரும் ஒன்றுபட்டு உழைத்தால் தான் எமக்கானதை பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் பதிவு காலத்திற்கான கட்டாய பதிவு. இருக்கும் வரை முடியுமானதை செய்வோம். நிச்சயமாக.
//முடியுமானதை செய்வோம். நிச்சயமாக//
பதிலளிநீக்குநன்றி நிர்ஷன்.
அன்பின் களத்து மேட்டு தோழருக்கு அபுச்சியின் செவ்வணக்கம்
பதிலளிநீக்குஅண்மையில் இலங்கையில் இருக்கும் எனது ஊடக நண்பருடன் கதைக்கும் போது தங்களின் வலைப்பதிவு குறித்து குறிப்பிட்டேன்.உடனே அதனை பார்த்த அவர் தனது வாழ்த்துக்களை தங்களுக்கு கூறும்படி தெரிவித்து இருந்தார்.தாமதத்திற்கு மன்னிக்கவும்.மேலும் அண்மையில் காணாமல் போனோர் பெயர் பட்டியல் கிடைத்தது.கவலையை அதிகரிக்கிறது.இலங்கை அரசால் காணாமல் போனோர்.தமிழர் சிங்களவர் முசிலும்கள் உட்பட.தமிழ் போராளி அமைப்புக்களால் காணாமல் போன சகோதரர்கள் என மனிதம் தொலைந்து விட்டது.ஆனால் என்றோ ஒரு நாள் எல்லவற்றிற்கும் எல்லோரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.மேலும் தங்களின் விபரமான பதிலில் ஒரு முரண்பாடு உண்டு.ஆய்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்ற கேள்வி மனதில் மீண்டும் எழுகிறது.சுட்டாரை சுட சொன்னவரும் சுடப்பட்டார்.சிவசேகரத்தின் வரிகள் என நினக்கிறேன் இது தான் வரலாறு எமக்கு கற்று தந்த பாடம்.தோழர் சேயின் படத்தோடு களம் உள்ளதால் அடுத்ததாக சே யிற்க்கும் பீடலுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு காலத்து தேவையான விவாதம் பற்றி பதிவிடுகிறேன்.மேலும் எனக்காக புலமப்பரீட்சை தொடர்பாக விரிவாக எழ்தியமைக்கு நன்றி
.
.
நன்றி அப்புச்சி.
பதிலளிநீக்கு//ஊடக நண்பருடன் கதைக்கும் போது தங்களின் வலைப்பதிவு குறித்து குறிப்பிட்டேன்.உடனே அதனை பார்த்த அவர் தனது வாழ்த்துக்களை தங்களுக்கு கூறும்படி தெரிவித்து இருந்தார்//
சந்தோசமாக இருக்கின்றது,கூடவே நன்றியும், நண்பரை களத்துமேட்டுக்கு இரு வரிகள் பின்னூட்டம் இடச் சொல்லி இருக்கலாமே அப்புச்சி!
தோழர் சே யின் நினைவு தினம் அக்டோபர் 09 ஆம் திகதியென்பதால்
சேயும், பெடலும் பற்றிய காத்திரமான கட்டுரையை பதிவு செய்யுங்கள் அப்புச்சி.