இலங்கையின் கல்வித் திட்டத்துக்கு அமைய நடாத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ்மொழி மூல பரீட்சார்த்தியாகத் 2008.08.17 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையில் தோற்றிய எழுதுமட்டுவாழ் வடக்கு, மாங்குளம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் 176 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.
தந்தை தர்மலிங்கம் மிருசுவில் அரச தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகவும், தாய் செல்வராணி தர்மலிங்கம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகவும் கடமை புரிகின்றார்கள்.
தர்மலிங்கம் பாசுபதனுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாசுபதனுக்கு.இத்தனை ஓட்டத்துக்குள்ளும் கல்வியோடு ஓடி வெற்றி பெற்றதற்கு.இன்னும் நிறைய வளர வேண்டும் இந்த இளம் தளிர்.
பதிலளிநீக்குஎல்லோரும் சேர்ந்து பாசுபதனை வாழ்த்துவோம்,
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
அன்பின் தோழருக்கு தோழமையுடன் கூடிய செவ்வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லா தரப்பு செய்திகளையும் பிரசுரிப்பதற்காக முதலில் நன்றி.நீங்கள் குறிப்பிட்டது போல நாமும் பலருடன் தொடர்பை ஏற்படுத்திய்ள்ளோம்.கண்டிப்பாக விரைவில் அவர்களின் பேட்டியும் வெளிவரும்.சிலர் புளக்கர் என்றவுடன் பின் வாங்குகிறார்கள்.சிலர் பாதுகாப்பை காரணம் காட்டுகிறார்கள்.இலங்கை நிலவரம் தங்களுக்கு தெருயும் தானே.இப்பொழுது ஒரு ஆக்கம் எழுதப்பட்டுள்ளது.வாசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.மேலும் புலமை பரிசில் பரீட்சைதொடர்பான செய்தியில் சிறு வித்தியாசம் தெரிகிறது.தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்
அன்புடன்
அப்புச்சி
www.vimbam.blogspot.com
நன்றி அப்புச்சி,
பதிலளிநீக்குஐந்தாம் தர புலமைப் பரிசில் திட்டத்துக்கு அமைய சிங்களம், தமிழ் மொழிமூலமாக நாடளாவியரீதியில் பரீட்சை நடாத்தப்படும்.
ஒட்டுமொத்தமாக பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் முதல் மூன்று இடங்களையும் சிங்கள மொழிமூல பரிட்சார்த்திகளே பெற்றுக் கொண்டனர்.
தமிழ்மொழிமூல பரீட்சார்த்திகள் வரிசையில் 176 புள்ளிகள் பெற்று பாசுபதன் முதலிடத்தில் இருக்கின்றார்.
(மேலதிக விபரம் களத்துமேட்டில்)