தமிழர்களுக்கு வயலின் இசையால் பெருமை சேர்த்த பெருந்தகை குன்னக்குடி வைத்தியநாதனின் மரணம் இசையுலகுக்குப் பேரிழப்பாகும்.
வைத்தியநாதனின் வயலின் ஒலி அடங்கி விட்டது, இனி எப்போது கேட்போம்?
வயலினால் பெருமை பெற்றவரா குன்னக்குடி வைத்தியநாதன் அல்லது குன்னக்குடி வைத்தியநாதனால் பெருமை பெற்றதா வயலின் என பட்டிமன்றம் நடாத்துமளவுக்கு திறமையின் உச்சத்தில் இருந்தவர் குன்னக்குடி.
வயலின் இசை இருக்கும் வரை குன்னக்குடி வைத்தியநாதனின் பெயர் நிலைத்திருக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய "களத்துமேடு" பிராத்திக்கின்றது.
குன்னக்குடி காலமானாரா?
பதிலளிநீக்குசெய்தி சொன்னதுக்கு நன்றி.அருமையான கலஞர்.அபூர்வமானவரும் கூட.
என் அஞ்சலிகள்.
மனதை உலுக்கும் செய்தியாக இருக்கிறது.என்ன சொல்ல என்று தெரியவில்லை.குன்னக்குடி அவர்களின் வயலின் இசையும் அவர் முகமும் மட்டும் கண்ணில் அலை பாய்கிறது.இறைவனுக்கும் தேவைப்பட்டிருக்கிறது போல அவர் இசை.அவரின் இனிய இசையோடு அவர் ஆத்மா அமைதி பெற கண்ணீர் நிறைந்த அஞ்சலி.
பதிலளிநீக்குஇசையால் வசமாக இதயமெது, மறக்கப்பட முடியாத கலைஞர்.
பதிலளிநீக்குவரவுக்கு நன்றி வல்லிசிம்ஹன்.
நன்றி ஹேமா.
பதிலளிநீக்கு//இறைவனுக்கும் தேவைப்பட்டிருக்கிறது போல அவர் இசை//
கையினால் இசை அமைப்பது என்பது இலகுவான விடயமல்ல, காதினால் கேட்டு, கண்ணினால் அபிநயித்து, கரத்தினால் துல்லியமாக இசையைத் தந்த மாமேதையின் மரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
வாழும் போதே வாழ்த்தப்படக் கூடிய கலைஞர்.
மாபெரும் இசைமேதை சிவத்திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் மறைந்த செய்தி முத்தமிழ் இசை வித்துவான்கள் மட்டுமல்ல இசை ஆர்வம் கொண்ட அத்தனை ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியான விடயமாகும். எமது நாட்டிற்கு வருகைதந்து தனது வித்வத்தைக் காட்டிய நிகழ்வை நான் மறந்து விடமுடியாது. கொழும்பிலும் நல்லூரிலும் அவரது இசைக் கச்சேரி மிக அருமையான மறக்க முடியாத சேவை என்றே குறிப்பிடலாம். அல்லல் பட்டு வாழும் இனமொன்றுக்கு இசையால் மன நிறைவைத் தந்த இந்த மகானை நினைவு படுத்தும்போது அவரை அழைப்பித்த மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இந்து விவகார அமைச்சர் தி. மகேஸ்வரன் அவர்களையும் நினைவு கூருவது தமிழன் என்ற வகையில் எனது கடனாகும்.
பதிலளிநீக்குகுன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் விரலுக்கு கட்டுப்பட்டு வாத்தியம் இருந்தது. அவர் கையாளும் மிகநுட்பமான ஆலாபரணைக்கு எவருமே நிகரில்லை.
அம்மேதையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வதோடு ஈழத்துக் கலை ரசிகர்கள் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கின்றேன்.
தகவலைத் தந்துதவிய களத்துமேட்டின் ஈழவனுக்கும் எனது நன்றிகள்.
கருத்தைப் பகிர்ந்து கொண்ட த.முகுந்தனுக்கு நன்றி.
பதிலளிநீக்கு