நாய்க்கு இருக்கும் கிராக்கி இப்போது மனிதருக்கு இல்லை. அமெரிக்க வெள்ளை மாளிகைக்கான நாயாரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்றது.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் போது அவருக்கு நண்பனாக, குடும்ப உறுப்பினராக வளர்க்கக் கூடிய "காலி" என செல்லமாக அழைக்கப்படும் திரு நாயாரை "அமெரிக்க நாய்கள் வளர்ப்புக் கழகம்" தேசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்துள்ளது.
வாக்கெடுப்பில் 42,000 வாக்காளர்கள் கலந்து கொண்ட போதிலும், அதிகப்படியான வாக்குக்களைப் பெற்று "காலி" முன்னிலையில் உள்ளது. வெற்றி பெற்ற நாயாரே படத்தில் காணப்படுபவராகும்.
நாயை உயர்திணையில் கௌரவம் செய்யவேண்டியதாகி விட்டதே !
கொடுத்து வைச்ச "காலி".நாயாருக்கு வாழ்த்துக்கள்."எங்கட ஊர்லயும் இவர்போல நிறையப் பேர் இருக்கினமெல்லோ"களத்துமேடு.
பதிலளிநீக்குஐயோ ஹேமா,
பதிலளிநீக்குஇவரையும் விட எவ்வளவோ மேலானவர்கள் இருக்கினம், ஆனால் அவையள ஒழுங்கு படுத்தத்தான் ஆருமில்ல.
கொடுத்து வைத்த நாய்.
நன்றி ஹேமா.