வன்னியில் இடம்பெற்று வரும் ஸ்ரீலங்கா படை நடவடிக்கையினால் அங்கு வாழும் மக்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் கஷ்டமுறுகின்றார்கள், உணவு, மருந்து போன்றனவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன் தங்க வசதியுமின்றி மரத்தின் கீழேயே தங்குவதாகவும், இவர்களுக்கு தற்காலிக கொட்டகைகளுமின்றி அவதியுறுவதாகக் கூறி வருகின்றார்கள், ஆனால் நிர்க்கதியான நிலையில் இருந்து இவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று கூற மறந்து விட்டனர்.
வன்னி மக்களை ஸ்ரீலங்கா கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருமாறு ஸ்ரீலங்கா படையினர் துண்டுப் பிரசுரம் மூலம் தெரிவித்துள்ளனர், ஆனால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் விடுதலைப் புலிகளிடம் சிக்கி இருப்பதனை ஊடகங்கள் எழுத தயங்குகின்றன.
வன்னியில் இருந்து இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிக்கு ஒருவர் வரவேண்டுமெனில் விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும், இப்போது இராணுவ நடவடிக்கை சூடு பிடித்திருப்பதால், வெளிப் பிரதேசத்துக்குச் செல்லுவதற்கான அனுமதி புலிகளால் மறுக்கப்பட்டு வருகின்றது.
விடுதலைப் புலிகளுக்குத் தெரியாமல் அவர்களின் அனுமதியின்றி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சிலர் வந்திருந்தாலும் கூட, உயிரோடு விளையாடும் முயற்சியாகவே கருதப்படுகின்றது. திருட்டுத்தனமாக வந்து கைது செய்யப்படுபவர்கள் சண்டை இடம்பெறும் முன்னணி நிலைகளுக்கு விடுதலைப் புலிகளினால் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் செல் வீச்சுக்களுக்கும், விமானக் குண்டுத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க முடியாமல் திக்குமுக்காடி நிற்கும் வன்னி மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களோ அல்லது ஆதரவாளர்களோ கிடையாது.
வன்னிப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கான தடைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அகற்றி அவர்களை வெளியே செல்ல அனுமதிப்பதன் மூலம் அங்கு ஏற்படவிருக்கும் பாரிய மனித அவலத்தைத் தடுக்கலாம்.
யார் என்ன செய்ய முடியும் களத்துமேடு?எங்கள் தேசத்தில் எல்லோருமே ராஜாக்கள்.
பதிலளிநீக்குபொதுமக்கள்தான் பாவப்பட்டதுகள்.
கடவுள்தான் துணை எங்கட நாட்டுக்கும்...எங்கட சனங்களுக்கும்.
உண்மை தான் ஹேமா, பாவப்பட்டவர்கள் மக்கள் தான், நிமிடத்துக்கு நிமிடம் நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.
பதிலளிநீக்கு