2008 ஆம் ஆண்டுக்கான புத்துருவாக்குதலும் புதுமை புகுத்தலும் எனும் கண்காட்சியில் யாழ்ப்பாண மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட நவீன விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புக்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.

யாழ். மத்திய கல்லூரி மாணவன் செந்தூர்ச்செல்வன் அம்புஜனின் கண்டு பிடிப்பில் திருடரின் கைவரிசையில் இருந்து பணப்பையைப் பாதுகாக்கும் அபாய ஒலி எழுப்பும் பணப்பை.

யாழ். மத்திய கல்லூரி மாணவன் ராசேந்திரம் ருபேந்திரனின் கண்டு பிடிப்பில் இருளின் நூல்களை வாசிக்க உதவும் மூக்குக்கண்ணாடி.

யாழ். மத்திய கல்லூரி மாணவன் உதயகுமார் டயந்தனின் கண்டு பிடிப்பில் தேங்காய் துருவும் கருவி மூலம் இலகுவாக மரக்கறி நறுக்க உதவும் கருவி.

யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி சோபிதா கமலராஜாவின் கண்டு பிடிப்பில் கடல்நீரை எளிய முறையில் நன்னீராக்கும் கருவி.

யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.பிரதாபனின் கண்டு பிடிப்பில் உணவகங்களில் பயன்படக்கூடிய பெருமளவு மரக்கறிகளை மின்சார உதவியுடனும் கையினாலும் வெட்டும் கருவி.

யாழ். மத்திய கல்லூரி மாணவன் சுரேஷ்குமார் தர்ஷனின் கண்டுபிடிப்பில் எளிய முறையிலான பாதுகாப்பான எலிப்பொறி.

கோப்பாய் சரவணபவ வித்தியாலய மாணவன் நல்லநாதன் பிரசாந்தனின் கண்டுபிடிப்பான இருளில் பயன்படுத்தக்கூடிய காலணி, இருளில் சுத்திகரிக்க உதவும் தும்புத்தடி, பார்வையற்றோர் இருளின் நடக்க உதவும் கைத்தடி.

யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி ரேணுகா அமிர்தலிங்கத்தின் கண்டுபிடிப்பான இயற்கை மூலிகைகளான வேப்பிலை, துளசி இலை மூலம் தயாரிக்கப்பட்ட நுளம்புத்திரி.

யாழ். மத்திய கல்லூரி மாணவன் ராஜரட்ணம் விதூஷன் கண்டு பிடித்த இலகுவான முறையில் மரக்கறி நறுக்க உதவும் கருவி.
எம்மவர்கள் சாதனையாளர்கள் என்பதை மீண்டும் நிரூபிப்பதற்கு தக்கதொரு தருணத்தை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த மாணவர்கள்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
சாதிப்போம்.சாதனைகளால் சகாப்தம் படைப்போம்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குகுண்டு வீச்சின் அச்சங்களுக்குள்ளும் பசி...பட்டினியோடும் நம் குழந்தைகளின் திறமை காண மனம் கலங்குகிறது.வாழ்த்துக்கள்.நலமாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குநன்றி நிர்ஷன்.
பதிலளிநீக்கு//சாதிப்போம்.சாதனைகளால் சகாப்தம் படைப்போம்//
தேவையற்ற போரொன்று எம்மவருக்குள்ளே குடி கொண்டு விட்டதால் சாதனைகளெல்லாம் வேதனைகளாகிக் கொண்டு இருக்கின்றதே, என்ன செய்வது நிர்ஷன்.
வணக்கம் செல்வன், வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇன்னும் உங்களின் தளம் அடித்தளம் இட்ட நிலையிலேயே இருக்கின்றது.
ஏன் தாமதம்?
வேதனைகளிலும் சோதனைக்குப் பதிலளிக்கத் தெரிந்தவர்கள் அல்லவா எம் செல்வங்கள், முயற்சிக்குப் பாராட்டுவோம், தட்டிக் கொடுப்போம்.
பதிலளிநீக்குநன்றி ஹேமா.