யாழ். நெடுந்தீவு, நயினாதீவு கடற்கரைப் பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும் நான்கு பெண்களின் சடலங்கள் சிதைந்த நிலையில் கரையொதிங்கி உள்ளன.
நேற்று முன்தினமிரவு நெடுந்தீவு குயின் டவர் பகுதியில் முதலாவது பெண்ணின் சடலமும், நேற்றுக் காலையில் நயினாதீவு சல்லி மயானத்துக்கு அருகில் இரண்டாவது சடலமும், நயினாதீவு வெள்ளை மணல் கடற்கரைப் பகுதியில் மூன்றாவது சடலமும், நேற்று நண்பகல் நயினாதீவு பிடாரி அம்மன் கோவில் பகுதியில் நான்காவது பெண்ணின் சடலமும் காணப்பட்டுள்ளன.
சடலமாகக் காணப்பட்ட இப் பெண்கள் உடமைகளாக காதணிகளும், மேற்சட்டையும் மற்றும் பாவாடையும் அணிந்துள்ளார்கள்.
இச் சடலங்கள் கடந்த வாரம் இந்திய அகதி முகாமான இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கை திரும்பிய போது படகு கவிழ்ந்ததில் மரணித்தவர்களாக இருக்கலாமென அறிய முடிகின்றது.
போர்ச்சூழல் ஒருபுறம் பட்டினி ஒருபுறம் மக்களின் இருப்பிடங்களை சுடுகாடாக்கிக்கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஇந்நிலையில் இயற்கையும் துன்பப்படுத்துகிறதே????
தினமும் அகதியாய் அலைந்துதிரிந்து அவதிப்படுவதை விட இப்படி உயிர்நீப்பதும் ஒருவகையில் நல்லதுதான் களத்துமேடு.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎமது மக்கள் இந்தியாவுக்குச் சென்றால் நிம்மதியாக வாழலாம் என்று நினைத்து அங்கு அகதியாகச் சென்று வாழ முற்படுகின்றனர், ஆனால் அங்கும் மனிதத்தை மதிக்காமை கண்டு "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்பது போல, எமது நாட்டுக்கே சென்று விடுவோமே எனும் எண்ணத்தில் திரும்பி வரும் போது இப்படியான அநர்த்தத்தில் சிக்கிவிட வேண்டிய பரிதாப சூழல்.
பதிலளிநீக்குஎம்மவரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
வருகைக்கு நன்றி நிர்ஷன்.