ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றினார். கடந்த தடவை தனிச் சிங்கள மொழியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தமிழையும் தனது உரையில் சேர்த்துக் கொண்டார்.
அவர் தனதுரையில் எனது தாய்மொழி சிங்களம் ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை மக்களின் இரண்டு மொழிகள். பல நூறு ஆண்டுகளாக பாவனையில் உள்ள இந்த இரண்டு மொழிகளும் இலக்கிய வளம் செறிந்தவை, இம்மொழிகள், அரசகரும மொழிகளாக அங்கீகாரம் பெற்று நம்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகம் மேலும் வியாபிக்கப்படுவதைத் தொடர்ந்து இலங்கையின் சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையிலான உறவு பலமடையும். எதிர்கால அபிவிருத்திக்கு அது பாரிய சக்தியாக அமையும் ஒரு தேசம் என்ற வகையில் எமக்காகக் காத்திருக்கும் அர்த்தமுள்ள சுதந்திரம் நீடித்த ஐக்கியம் ஆகியவற்றை நோக்கி நாம் அணிவகுத்துச் செல்வோம், என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் உரையாற்றினார்.
63 வருட பாரம்பரியத்தைக் கொண்ட ஐ.நா.சபையில் தமிழ் மொழியில் உரையாற்றிய முதலாவது அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ...கோ எங்கள் மகிந்தவுக்கு தமிழும் தெரியுமோ.அதுவும் ஒரு கின்னஸ் சாதனையோடு தமிழ் பேசியிருக்கிறாரே!
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
பதிலளிநீக்கு//ஓ...கோ எங்கள் மகிந்தவுக்கு தமிழும் தெரியுமோ.அதுவும் ஒரு கின்னஸ் சாதனையோடு//
சிரிப்பாயில்ல.
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!
பதிலளிநீக்குமகிந்தவின் வருகையை எதிர்த்து அமெரிக்கத் தமிழர்கள் நியூயார்க் ஐ.நா. அவைக் கட்டிடத்துக்கு வெளியே காவல்துறை அனுமதியுடன் பெருமளவில் கூடிக் குரல் எழுப்பினர். இவ்வறப் போராட்டம் அங்கு நடந்து செல்லும் மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகள் கவனத்தைப் பெறக்கூடும் என்பதை முன்னரே ஊகித்துக் கொண்டு நாடகமாடியது இலங்கைத் தூதரகம். தம் ஆள்கள் இருபத்தைந்து பேரை அனுப்பி எதிர்க் குரல் அனுப்பவும், தமிழர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டோரை மிக அருகாமையில் வந்து அசைபடம் (வீடீயோ) எடுக்கவும் அனுப்பியிருந்தது இலங்கைத் தூதரகம். இன்னொரு பக்கம் ஐ. நா. அரங்கத்துக்குள் மற்ற நாட்டவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு ஆடிய நாடகம்தான் மகிந்தவின் இந்தத் தமிழ்ப்பேச்சு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுடலை மாடன்.
பதிலளிநீக்கு//மகிந்தவின் வருகையை எதிர்த்து அமெரிக்கத் தமிழர்கள் நியூயார்க் ஐ.நா. அவைக் கட்டிடத்துக்கு வெளியே காவல்துறை அனுமதியுடன் பெருமளவில் கூடிக் குரல் எழுப்பினர். இவ்வறப் போராட்டம் அங்கு நடந்து செல்லும் மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகள் கவனத்தைப் பெறக்கூடும் என்பதை முன்னரே ஊகித்துக் கொண்டு நாடகமாடியது இலங்கை//
மஹிந்தவின் தமிழ் உரை முன்னதாகவே தயாரிக்கப்பட்டதென மூன்று நாட்களுக்கு முன்னதாக ஊடகங்கள் கூறியிருந்தன.
"ஆடு நனைகின்றதென ஓநாய் அழுத கதை" மாதிரி தெரிகின்றது மஹிந்தவின் தமிழ் மக்கள் மீதான பார்வையும் பரிவும்.
பண்பால், பழக்கத்தால், அறிவால், கடின உழைப்பால் முன்னேறி, இலங்கையில் நமது தமிழரின் சிறப்பை சிறக்க செய்த எங்களது தமிழ் உறவுகளை அதாலேயே வெல்லமுடியாத துப்புகெட்ட வர்களின் பிரதிநிதி, எம் உறவுகளை அங்கு படுகொலை செய்துகொன்டு அனைத்து நாடுகளின் சபையில் உதிர்க்கும் நாடகத்தனமான பேச்சைத்தானே தினமனி, தினமலர் போன்ற ஊடகங்கள் பரப்புகின்றன.
பதிலளிநீக்குதமிழனாக இருந்துகொன்டு நமது தமிழ் உறவுகளுக்கு நேரும் அல்லல்களுக்கெதிராக கருத்துசொல்லுவதைத்தவிற வேறெதும் செய்ய முடியாததை என்னி வெட்க்கம், வேதனைப்படுகிறேன்.
களத்துமேட்டுக்கு வந்து பின்னூட்டமிட்ட சக்திவேலை வரவேற்கின்றேன்.
பதிலளிநீக்கு//தமிழனாக இருந்துகொன்டு நமது தமிழ் உறவுகளுக்கு நேரும் அல்லல்களுக்கெதிராக கருத்து சொல்லுவதைத் தவிற வேறெதும் செய்ய முடியாததை எண்ணி வெட்க்கம், வேதனைப்படுகிறேன்//
இலங்கைப் பதிவுகளையும் பார்த்து கருத்துப் பரிமாற்றம் செய்கின்றீர்களே, அதைத் தவிர வேறென்ன தேவை, தொடர்ந்து வாருங்கள் சக்திவேல், வருகைக்கு மிக்க நன்றி.