ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளருக்கான 2009 ஆம் கல்வியாண்டுக்கான ஓராண்டு கால டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ஊடகத்துறையில் ஆர்வம் உள்ள க.பொ.த.உயர்தரத்தில் சித்தி பெற்றவர்கள் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் சேர்ந்து செய்தி சேகரிப்பது, செய்தி வாசிப்பது, எழுதுவது போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கற்று நடுநிலை ஊடகவியலாளராகலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய விலாசம்: இல 96, கிருல வீதி, கொழும்பு - 05.
மின்னஞ்சல் - info@slcj.lk
மேலதிக விபரங்களுக்கு: பிரார்த்தனா/ ரேணுகா - 011 5353635
ஊடகத்தினூடாக ஊடகத்துறையை மேம்படுத்துவோம்.
நன்றி: வீரகேசரி
தமிழ் நடுநிலை என்றால் என்னங்கோ?சைவ வெள்ளாப் பொறுக்கித் தனங்களை நியாயப்படுத்துவதும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை நியாயப் படுத்தவதுமா?
பதிலளிநீக்குஎனது வலை பதிவையும் தங்களின் வலை பகுதியில் இணைத்தமைக்கு
பதிலளிநீக்குநன்றி
தோழமையுடன்
அப்புச்சி
களத்துமேட்டுக்கு வந்து பதிவிட்டுச் சென்ற சிவா சின்னப்பொடியை வரவேற்கின்றேன், ஆரோக்கியமான விமர்சனமே மனிதனை முழு மனிதனாக்கும்.
பதிலளிநீக்கு//தமிழ் நடுநிலை என்றால் என்னங்கோ?//
ஊடக தர்மம் என்பது சின்னப்பொடிக்கு தெரியாமல் உள்ளதோ?, பக்கம் சாராமல், தன்நிலை வழுவாமல் நேர் நோக்கில், பல்லின தரவுகளையும் காலத்தின் தேவையறிந்து பதிவு செய்வதே நடுநிலையான ஊடக தர்மம் ஆகும்.
//சைவ வெள்ளாப் பொறுக்கித் தனங்களை நியாயப்படுத்துவதும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை நியாயப் படுத்தவதுமா?//
சின்னப்பொடியென சரியாகத் தான் பெயரிட்டு உள்ளீர்கள், சிங்கள சார்புச் செய்திகள் எமக்கு தேவையானது, அவற்றில் இருந்து நாம் அறிய வேண்டிய பல தேடல்கள் உள்ளன.
பேரினவாதமென்பது இனரீதியானது, நீங்கள் குறிப்பிட்ட சைவமோ அல்லது பௌத்தமோ மதம் சம்பந்தப்பட்டது, களத்துமேட்டில் எவ்வித மதவாதமும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை, பதிவு செய்யப்படவும் மாட்டாது, களத்துமேட்டை சின்னப்பொடி ஒரு தடவை மீள் பரிசீலனை செய்து பாருங்களேன்.
வரவுக்கு நன்றி.
தொடர்ந்து வாருங்கள், ஆரோக்கியமான பின்னூட்டத்தை களத்துமேடு வரவேற்கின்றது.
வாருங்கள் அப்புச்சி, உங்களது படம் இல்லாததால் வெறுமையாக நட்புக் களம் உள்ளது, பரவாயில்லை தானே!
பதிலளிநீக்குநடுநிலையும் சார்பு நிலையும்
பதிலளிநீக்குமேற்குலக ஊடகங்களும், உலக மேலாதிக்க சக்திகளும் ‘நடுநிலை’ என்ற சொல்லை மிக உன்னதமான பண்புகளைக் கொண்ட ஒரு சொல்லாகவும் அந்தச் சொல்லுக்குரிய அர்த்தமும் அதனூடக கட்டமைக்கப்படுகின்ற கருத்தியலும் மிகச் சிறந்தது, உயர்ந்தது என்று திரும்பத் திரும்ப நமக்குப் போதித்திருக்கின்றன.
ஊடகத்துறையில் பெரிய மேதைகள் விற்பன்னர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் ‘ஊடகமென்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். ஒரு ஊடகவியலாளனும் நடு நிலையான போக்கையே கடைப் பிடிக்கவேண்டும்’ என்று உபதேசம் செய்வதையும் நாங்கள் பார்க்கலாம்.
பல அச்சு ஊடகங்கள் ‘நடுநிலை நாழிதழ்’ ‘நடுநிலை வாரஇதழ்’ ‘நடுநிலை மாத இதழ்’ என்று பெரிய எழுத்தில் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்வதையும் நாங்கள் அவதானிக்கலாம்.
இலத்திரனியல் ஊடகங்களான பல வானொலிகள் தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் கூட இந்த நடுநிலை என்ற சொல்லை தவறவிட்டதில்லை.அந்தளவு இந்தச் சொல் இன்று ஊடகத்துறையிலே முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது.
நடுநிலை என்பது என்ன?
நடுநிலை என்பதற்கு சரியான அர்த்தம் ‘பக்கம் சாராமல் இருப்பதாகும்’. பக்கம் சாரமால் இருப்பதென்றால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்,அரசியல் சமூக நலன்கள்,பொருளாதார நலன்கள், இன மொழி உணர்வுகள், இப்படி எந்தவித தாக்கமும் இல்லாமால் அனைத்தையும் அனைவரையும் சமமாக மதித்து அனைவருக்கம் சமமான சந்தர்ப்பம் வழங்கி செயற்படுவது என்று வரையறுக்கலாம். இன்றைய சமுச்சீரற்ற ஏற்றத் தாழ்வான இந்த உலகத்திலே எவராவது அப்படி இருக்கிறார்களா? அரசியல் சமூகம் சமயம் பொருளாதாரம் ஊடகம் என்று எந்தத் துறையிலாவது பக்கம் சாராத நடு நிலை என்று சொல்லக் கூடிய இந்தச் செயற்பாடு இருக்கிறதா? ஏன்றால் உண்மையான பதில் ‘இல்லவே இல்லை’ என்பது தான்.
தனி மனிதர்களில் இருந்து அமைப்புக்கள் நிறுவனங்கள் அரசாங்கங்கள்; என்ற அனைத்துமே சார்புத் தன்மை உடையவையே. தனி மனிதர்கள் கூட இன்னொருவரை சார்ந்திருக்காமல் வாழ முடியாது. தனி மனிதர்களுடைய சொந்தக் கருத்துக்களும் கூட அவர்கள் வாழும் சூழலையோ அந்தச் சூழலிலுள்ள சமுக அரசியல் பொருளாதார அடிப்படைகளையோ , மொழித் தளத்தையோ விட்டு வானத்தில் இருந்து குதிக்க முடியாது.
உதாரணமாக இன்று நமது தாயகத்திலே சிறீலங்கா அரசின் கொடூரமான இன ஒடுக்கு முறையும் இனஅழிப்பு நடவடிக்கைகளும் அதற்கு எதிரான வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டமும் நடைபெறுகிறது. ஈழத் தமிழர் ஒருவர் ‘இதில் எனக்கு சம்மந்தம் இல்லை. நான் பக்கம் சாராதவன் நடு நிலைமையானவன் என்று கூறினால் அவரைவிட பெரிய பொய்யன் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் ஒட்டு மொத்தமான தமிழ் மக்களுக்கும் எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் போது ‘நான் அதில் சம்பந்தப் படாதவன்’ என்று சொன்னால் அவர் அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக நடக்கின்ற நியாயத் தன்மையுடைய விடுதலைப் போராட்டத்தை மறுதலிக்கிறார் என்றே அர்த்தமாகும். இதன் மூலம் அவர் ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்ளும் அரச சார்புத் தன்மையை கொண்டிருக்கிறார் என்பதே உண்மையாகும். சிறீலங்காவின் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் விமானக் குண்டு வீசசு நடத்தும்; போதோ எறிகணைத் தாக்குதல்கள் நடத்தும் போதோ அவரையே அவரது வீட்டையோ தவிர்த்துவிட்டுத் தாக்குதல் நடத்தாது. அந்த நபர் விரும்பாவிட்டாலும் சிறீலங்காஅரசின் இன ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தமிழர்கள் என்ற அடையாளத்துக்குள் தான் அவரும் அடக்கப்படுவார்.
குறிப்பாகச் சொல்வதானால் நடு நிலைமை என்று சொல்வது அநீதிக்கு துணைபோகின்ற ஒரு சந்தர்ப்பவாதமாகும்.தமிழிலே இதற்கு மதில் மேல் பூனையாக இருப்பது என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது.
எதற்காக நடுநிலை?
உண்மையில் ஊடகத்துறையில் நடுநிலைமை என்று சொல்வது ஊடக நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்ற ஒரு வியாபாரத் தந்திரமாகும். மக்களை திசை திருப்புவதற்காக, ஏமாற்றுவதற்காக மக்களை சந்தைப் பொருட்களாக்கு வதற்காக கையாளப்படும் ஒரு செயல் முறையே இதுவாகும்..‘நடு நிலை என்றால் சரியானதாக இருக்கும், நேர்மையானதாக இருக்கும், உண்மையானதாக இருக்கும்’ என்கின்ற பிம்பம் அல்லது மாயை நமது மனத் தளத்திலே திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.‘சரியானது’ ‘உண்மையானது’ ‘நேர்மையானது’ என்ற இந்த சொற்பதங்கள் அவை குறிப்பிடும் அர்த்தத்தை ஒருபோதும் நூற்றுக்கு நூறு வீதம் வெளிப்படுத்தியதில்லை. உதாரணமாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் தங்களது செயல் சரியானது என்று நினைக்கின்றனர்.பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நீங்கள் போராடுகின்றீர்கள் என்று சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை அவர்கள் உண்மை என்று நம்புகின்றனர். தமிழர்களுக்கு எதிராக தாங்கள் கட்டவிழ்த்து விடுகின்ற இனஅழிப்பு நடவடிக்கைகளை அவர்கள் நேர்மையான செயற்பாடு அல்லது தங்களுக்கு விதிகக்ப்பட்ட கடமை என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்பது அதுவல்லவே!
ஓரு மேற்குலக ஊடகம் அல்லது உள்ளுர் ஊடகம் ‘இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்திலும் தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனர்.’ என்று செய்தி வெளியிட்டால் மேற்குலக ஊடகக் கோட்பாட்டின் படி அது ஒரு நடு நிலைமையான செய்தியாகும்.
ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பை இன்னொரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ‘ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹ{சைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திப்பதாகவும் அதனால் உலகிற்கு ஆபத்து’ என்றும் புஷ் நிர்வாகம் கூறியதை மேற்குலக ஊடகங்கள் எல்லாமே வரிந்து கட்டிக்கொண்டு முதன்மைச் செய்திகளாக வெளிட்டன. ஆய்வுகள் விவாதங்கள் விமர்சனங்கள் என்று இந்த ஒரு விடயம் உடகங்களின் முதன்மையான இடத்தை பிடித்துக்கொண்டது. ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்த போது உலகை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் சதாமின் அடக்கு முறையில் சிக்கியிருக்கும் ஈராக்கிய மக்களை விடுவிப்பதற்காகவும் அமெரிக்கா மேற்கொண்ட உன்னதமான நடவடிக்கையாகவும் அது சித்தரிக்கப்பட்டது. இந்தச் சித்தரிப்புக்கள் எல்லாமே நடுநிலையான ஊடகக் கோட்பாடு என்ற அடிப்படையிலே தான் மேற்குலக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது.
ஆனால் ஈராக் போரின் பின்பு இன்றுவரை அமெரிக்க அரசுத் தலைவர் ஜேர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் கூற்றை அடிப்படையாக வைத்து இந்த ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எவையும் ஈராக்கில் கண்டபிடிக்கப்படவில்லை. சதாம் ஹ{சேன் ஆட்சியில் இருந்ததைவிட பல மடங்கு மோசமான அடக்குமுறைதான் இன்று ஈராக்கில் நிலவுகிறது. அமெரிக்க நலன்களுக்காக சன்னி, சியட் மதப்பிரிவகளுக்கிடையிலான மோதல்கள் கூர்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. குர்திஷ் இனமக்களுக்கு சதாம் இளைத்த கொடுமை பற்றிப் பேசும் இந்த மேற்குலக ஊடகங்கள் துருக்கியிலே அந்த மக்களுக்கு இருக்கும் அடக்குமுறை பற்றியோ அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றியோ பேசுவதில்லை.குர்திஷ் இனமக்களின் விடுதலைக்காகப் போராடிய அப்துல்லா ஒச்சலான் இன்றைக்கும் இவர்களைப் பொறுத்த வரை ஒரு பயங்கரவாதியாகும்.. ஈராக்கியப் போரிலே ஒருகுண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது ஒரு குழந்தையை அமெரிக்க படை வீரர் ஒருவர் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி அமெரிக்க தொலைக்காட்சிகளிலே அடிக்கடி காண்பிக்கப்படும். ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் மக்களுக்காகவே போராடுகின்றார்கள் என்பதை காண்பிப்பது தான் இதன் நோக்கம்.ஆனால் ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளின் காட்சிப்படங்களையும் யுத்தத்தை திணித்ததன் மூலம் சிரழிக்கப்பட்ட அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் இன்னமும் எவரும் உரிய முறையில் படம்பிடித்துக் காட்டவில்லை.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர்
‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று இப்போது இந்த மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் ஒரு கருத்தியலை கட்மைத்துள்ளன. ‘பயங்கர வதம் என்றால் என்ன?’ என்பதற்கு இதுவரை இந்த ஊடகங்களாலேயோ இந்த ஊடகங்களை இயக்ககின்ற மேலாதிக் சக்தினாளினாலேயோ ஒரு தெளிவான வரைவிலக்கணம் கொடுக்கப்படவில்லை. அவ்வாறே பயங்கரவாதத்துக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடும் வரையறுக்கப்படவில்லை. இந்த நிலையில் தங்களுடைய மேலாதிக்க நலன்களுக்கு எதிரான அல்லது அவற்றைப் பாதிக்க கூடிய அனைத்துமே பயங்கரவாதம் என்றும் தங்களது நோக்கங்களுக்கு துணைபோகின்ற அல்லது அதற்கான புறச் சூழல்களை உருவாக்குகின்ற அனைத்துமே ஜனநாயகச் செயற்பாடுகள் என்றும் விவாதத்துக்கோ விமர்சனத்துக்கோ இடமின்றி இந்த மேலாதிக்க ஊடகங்களால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.
அரசுகளை அதிகாரமிழக்க வைப்பது
இன்றைக்கு பல மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் சில சந்தர்ப்பங்களில் அதிரடியாக சில செய்திகளை கட்டுரைகளை ஆவணப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரித்தானியப்படைகள் மேற்கொண்ட சித்திரவதைகள் கியூபாவின் குவாந்தனாமோ சிறையில் அமெரிக்கப்படையினரால் மேற்கொள்ப்பட்ட சித்திரவதைகள், நிக்சன் அமெரிக்காவின் அரசத் தலைவராக இருந்த காலத்தில் இடம்பெற்ற வேட்டர் கேற் ஊழல், கிளின்டனுக்கும் மொனிக்கா லிவின்சிக்கும் இடையிலான பாலியல் தொடர்பு, பிரித்தானிய தலைமை அமைச்சர் ரொனி பிளேயருடை நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் என்பவற்றை இதற்கான உதாரங்களாகக் காட்டலாம். இவற்றை பார்த்துவிட்டுத் தான் நம்மவர்கள் பலர் ‘இதுவல்லவோ ஊடகத்துறையின் ஐனநாயகப் பண்பு’,இதுவல்லவோ நடுநிலை, ‘இதுவல்லவோ ஊடகத்துறையின் உச்ச வடிவம்’ என்று புழகாங்கிதம் அடைகின்றார்கள்.
உண்மையில் ‘இந்தப் பரபரப்புச் செய்திகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மறுபக்கம் இருக்கிறது’ என்பது பலருக்கத் தெரியாது. இவற்றிக்குப் பின்னால் இடம்பெறும் பேரம்பேசல்களும் பொதுவாக வெளியே தெரிவதில்லை.‘ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது’ என்று தமிழிலே இருக்கும் உவமானம் இந்தப் பரபரப்பு செய்தி வெளியீட்டின் பின்னணியை விளக்குவதற்கு மிகப் பொருத்தமான சொற்றொடராகும்.
‘அரசு என்பது ஒரு அடக்கமுறைக் கருவி.அது அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு, அனைத்துவகைப் படைகளையும் வைத்துக்கொண்டு, சிறுபான்மையாகவுள்ள அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காக பெரும்பான்மையாகவுள்ள உழைக்கும் மக்களை அடக்கி ஆள்கிறது’ என்பது 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமாகும். அது போலவே ‘மக்களாட்சி’ அல்லது ஜனநாயகம் என்பதற்கு ‘மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களுடைய பிரதிநிதிகளால் நடத்தப்படுகின்ற, மக்களுடைய ஆட்சி’ என்று 18 ம் நூற்றாண்டின் இறுதியில் வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டது
20 ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை இவை பொருத்தமான வரைவிலக்கணங்களாக இருந்தன. ஆனால் இன்று இந்த 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த வரைவிலக்கணங்கள்; பொருத்தமற்றுப் போய்விட்டன.இன்று எந்த ஒரு அரசும் தனக்குரிய அதிகாரங்கள் முழுவதையும் கட்டமைத்து வைத்து எந்தத் தலையீடும் இல்லாது சுயமாக அவற்றைப் பிரயோகிக்கக் கூடிய தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானிக்கக் கூடிய நிலையில் இல்லை.இன்றைக்கு அரசுகளின் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக உலக வங்கியும் பன்னாட்டு வணிக மற்றும் நிதி நிறுவனங்களும் தான் இருக்கின்றன. அவ்வாறே மக்களாட்சி என்பது இன்று ‘பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு வணக-நிதி நிறுவனங்களுக்காக மக்களைக் கொண்டு தெரிவு செய்யபட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுகின்ற ஆட்சி என்று மாற்றம் பெற்றுவிட்டது. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பதில்லை.இந்தக் கட்சியைத்தான் இந்த நபரைத் தான் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று மக்கள் தீர்மானிக்க வைக்கப்படுகின்றார்கள். உலக வங்கியும் மேற்குலக பெருவணிக நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் இந்த கைங்கரியத்தை ஊடகங்களுடாக திட்டமிட்டுச் செய்ய வைக்கின்றன.
ஆட்சியிலுள்ளவர்களுடைய செயற்பாடுகள் தங்களுடைய பொருளாதார-வணிக நலன்களை பாதிக்கின்ற போது, அதற்கு எதிரான தங்களுடைய கருத்தை ஆட்சிலுள்ளவர்கள் கண்டு கொள்ளாத போது, இந்தப் பன்னாட்டு பெரு வணிக வர்க்கம், எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அல்லது தங்களில் தங்கி இருக்கின்ற உலக மேலாதிக்க ஊடகங்களை செய்திப் புரட்சி செய்யத் தூண்டி விடுகின்றன. இந்த மேலாதிக்க ஊடகங்களின் நடுநிலை செய்திப் புரட்சியைப் பார்த்து வாய்பிளந்து அகல விழிதிறந்து பார்த்து நிற்கிற உலக மக்களுக்கு இந்தச் செய்திப் புரட்சியின் பின்னால் உள்ள பேரம் பேசல்கள் தெரிவதில்லை.
ஈராக் போரின் பின்னர் உலக எண்ணை வர்த்தகத்தில் புஷ் குடும்பத்தினரின் ஆதிக்கம் அந்தப் போருக்கு முன்பிருந்ததை விட அதிகரித்ததே ஈராக்கிலும் கியூபாவின் குவாந்தனாமோ சிறையிலும் அமெரிக்கப்படைகளின் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளும், புஸ் நிர்வாகத்துக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கி ஈராக் மற்றம் ஆப்கானிஸ்தான் பேர்களில் பங்கெடுத்ததன் மூலம் ரொனி பிளேயரின் ஆட்சி பிரித்தானிய பெரு வணிக நிறுவனங்களின் மத்திய கிழக்கு மற்றும் மூன்றாம் உலக நாடுகளடனான வர்த்தக உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியதே அவரது ஆட்சியல் ஊழல்கள் பற்றிய செய்திகளும் ; பிரித்தானியப் படையினர் ஈராக்கில் மனத உரிமை மீறலில் ஈடுபட்டது பற்றிய செய்திகளும் வெளிவந்தற்கான பின்னணி எத்தனை பேருக்குத் தெரியும்?.
இது என்ன பைத்தியக்காரத் தனம்? தங்களுடைய நாட்டை தங்களுடைய படைகளின் தவறுகளை நேர்மையாக இந்த மேற்குலக ஊடகங்கள் விமர்சிப்பதை குறை கூறுவதா? என்று சிலர் கேட்கக் கூடும். (வெள்ளைக்காரர்கள் நாயைச் சுட்டாலும் நீதி விசாரணை நடத்தித் தான் சுடுவார்கள் என்று பெருமையாகச் சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் தானே நாங்கள்!)
மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் நடுநிலை என்ற சொல்லை முன்நிறுத்தி காய் நகர்த்துவதற்கு நான்கு அடிப்படை நோக்கங்கள் இருக்கின்றன.
1) தமது நிறுவனத்தை உலகின் தீர்மானகரமான ஒரு சக்தியாக நிலை நிறுத்துவது.
2) உலக பெரும் முதலாளிய நிறுவனங்களில் தேவைக்கேற்ப மக்களை தயார்படுத்துவது, அதாவது சந்தைக்கேற்ற உற்பத்தி என்பதற்கு மாறாக உற்பத்திக்கேற்ற சந்தையை உருவாக்குவது.
3) உலகமயமாதலுக்கு தடையாக இருக்கக்கூடிய அரசுகள், விடுதலை இயக்கங்கள், மக்கள் நல அமைப்புக்கள், என்பவற்றை பலவீனப்படுத்துவது.
4) தேசங்கள் தேசிய இனங்களின் மொழித்தளத்தையும் அது சார்ந்த கலாச்சாரத் தளத்தையும் சீரழித்து சிதைப்பது.
சாதாரணமாக இந்த மேற்குலக வல்லாதிக்க ஊடகங்கள் செய்தி சொல்லும் முறையையோ அல்லது அவை கருத்தை வெளிப்படுத்தும் முறையையோ பார்க்கும் ஒருவருக்கு அவற்றிற்கு பின்னால் இருக்கக்கூடிய இந்த நோக்கங்கள் தெரியவராது. உதாரணமாக 'சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக' ஒரு செய்தி அல்லது அது சார்ந்த ஒரு விவரணத்தொகுப்பு இந்த மேற்குலக ஊடகங்களில் வெளிவந்தவுடன் இந்த ஊடகங்களின் மொழி தெரிந்த ஒரு சராசரி தமிழர் அதைப் பார்த்து பிரமித்துப்போகிறார். அந்த ஊடகம் நேர்மையாக செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் நினைக்கிறார். ஆனால் ஒரு செய்தி இப்படி வெளியாகும்போது பத்துச் செய்தி தமிழர்களுடைய போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு இலட்சியத்துக்காக தங்களது உயிரை தியாகம் செய்யும் இளையோரை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாக 20 தடவை செய்தி வெளியிடப்பட்டிருக்கும். இவையெல்லாம் அந்தத் தமிழரின் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு மேற்குலக ஊடகத்தின் முக்கிய இயங்கு தளமாக உள்ள ஐரோப்பிய அல்லது அமெரிக்க மண்ணிலுள்ள ஒருவருக்கு சிறிலங்காப் படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த ஒரு செய்தியைவிட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்கள் நடாத்தும் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்று பல தடவை வெளிவந்த செய்தியே பெரிதாகத் தெரியும்.
உண்மையில் இந்த உதாரணத்தில் 30 செய்திகள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகவும் ஒரேயொரு செய்தி எதிராகவும் வந்திருக்கிறது. இந்த ஒரேயொரு செய்தி வெளிவந்ததன் பின்னணியை யாரும் சிந்திப்பதில்லை. சிறிலங்கா அரசு ஒரு உலகப்பெரு வணிக நிறுவனத்தின் பொருட்களை சிறிலங்காவில் சந்தைப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியிருக்கலாம். அல்லது சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களான தேயிலையையோ, றப்பரையோ மேற்குலக பெரு வணிக நிறுவனம் ஒன்றிற்கு கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு பின்னடித்திருக்கலாம். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்துவதற்காக ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு மேற்குலகிற்கு விருப்பமில்லாத ஒரு நாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்த நிலையிலேயே சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளை புரிவதாக ஒரே ஒரு செய்தியோ அல்லது செய்தித் தொகுப்போ வெளியிடப்படும். இதைப் பார்த்தவுடன் ஆடிப்போய்விடும் சிறிலங்கா அரசு வெளியில் வீர சூரத்தனமாக மறுப்பறிக்கைகளை விட்டுவிட்டு இரகசியமாக இந்தச் செய்தியை வெளியிட்ட மேற்குலக மேலாதிக்க ஊடகத்துடனும் அதற்குப் பின்;னால் இருக்கக்கூடிய மேலாதிக் சக்திகளுடனும் பேரம் பேசலில் ஈடுபடும். இந்தப் பேரம் பேசலில் மேற்குலக மேலாதிக்க சக்திகளின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு ஏற்ற உடன்பாடு எட்டியவுடன் பழையபடி தமிழ் மக்களின் போராட்டம் , பயங்கரவாதப் போராட்டம் என்ற பல்லவி தொடரும்.எனவே நடுநிலை எனபது மக்களை ஏமாற்றுவதற்கான அவர்களது இலட்சியங்களை அடையாளங்களை சிதைப்பதற்கான வடிவம் என்று நாம் தெளிவாக வரையறுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இந்த உலகத்தில் நூற்றுக்கு நூறு வீதம் பொய்யே சொல்லாத ஒருவன் எப்படி இருக்க முடியாதோ நூற்றுக்கு நூறு வீதம் தவறே செய்யாத ஒருவன் எப்படி இருக்க முடியாதோ அப்படித்தான் நடுநிலமையும் இருக்க முடியாது. இந்த இடத்திலே நடுநிலை கிடையாது என்றால் எல்லாமே சார்புத் தன்மை உடையது என்றால் நம்பகத்தன்மைக்கு இடமில்லாமல் போய்விடுமே என்ற முக்கியமான கேள்வி எழுவது இயல்பானதாகும்.
http://sivasinnapodi1955.blogspot.com/2006/11/05.html
இந்த பதிவில ஏன் நடுநிலை பற்றி சந்தேகம் வந்தது.
பதிலளிநீக்குமற்றப்படி ஈழவன் நீங்க வழக்கம் போலவே தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கோ...
ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ‘ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறை’ என்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.
பதிலளிநீக்குஅது இதழியலாக இருந்தாலும் இலத்திரனியல் சார்ந்த ஒலி ஒளி வடிவங்களாக இருந்தாலும் அதற்கு மேற்குலகத்தினரே சொந்தக்காரர்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய வழி முறைகளே சிறந்தது என்றும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது தான் நம்முடைய ஊடகத்துறையை வளர்பதற்கு சிறந்த வழி என்றும் கருதுகின்ற நிலைப்பாடுதான் இன்னும் நம்மிடையே இருக்கிறது.
இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது.
இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தியை சொல்லுகின்ற முறைதான் ஊடகத்துறையின் உச்சம் என்றும் தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பச் சொல்கின்ற போக்குத் தான் இன்னமும் நம்மவர்களிடத்திலே இருக்கிறது.இதழியல், சினிமா, சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.
இந்த காலணித்துவ அடிமை மனோபாவமும் அடிமைச் சிந்தனையும் தான் தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும் தமிழ் ஊடகத்துறை தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்கத் தவறியதற்கும் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.
நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.
ஊடகவியல் என்பது ஒரு இனத்தின் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் காத்திரமான- தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்ற ஒன்றாகும். இந்தத் தளத்தை ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பத் தவறுமாக இருந்தால் இந்தத் தளத்துக்குள் ஊடுருவல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் அனுமதிக்குமாக இருந்தால்அந்த இனம் படிப்படியாக தனது சுயத்தையும் அடையாளத்தையும் இழக்கும்.
சிறுகச் சிறுகச் கொல்லும் விசத்தைப் போல ஒரு தேசிய இனத்தின் கருத்தியல் தளத்துக்குள் புகுந்துகொள்ளும் ஆக்கிரமிப்புக் கருத்தியலும் படிப்படியாக அந்த இனத்தின் பண்பாட்டுத் தளத்தை சிதைத்து கடைசியில் அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்துவிடும்.
உலகமயமாதல் சூழலில் மனிதர்களையே சந்தைப் பொருட்களாக மாற்றுவதற்காக தேசங்களினதும் தேசிய இனங்களினதும் வரலாற்றiயும் பண்பாட்டையும் கலை கலாச்சார விழுமியங்களையும்; அழிக்கின்ற, மழுங்கடிக்கின்ற கைங்கரியத்தை செய்வதில் ஊடகவியல் மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.
ஊடகத்துறை என்பது மக்களுக்கான தகவல்களைச் சொல்கின்ற, அறிவூட்டுகின்ற, மகிழ்வுட்டுகின்ற பணியைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் மக்கள் மீது கருத்தை திணிக்கின்ற- சந்தைப் பொருளாதார வலைப்பின்னல்களுக்குள் அவர்களைச் சிக்க வைக்கின்ற பணியைத் தான் பல ஊடகங்கள் குறிப்பாக உலக மேலதிக்க ஊடகங்கள் திட்டமிட்டுச் செய்துவருகின்றன.
உலகில் நிமிடத்துக்கு நிமிடம் , விநாடிக்கு விநாடி எத்தனையோ ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செயல்களும் நிகழ்ந்தாலும் எவை செய்தியாக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட செய்திகளாக அவை ஆக்கப்படவேண்டும், என்ன கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த மேலாதிக்க ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன.
அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
களத்துமேட்டுக்குச் சம்பந்தமில்லாத சிவா சின்னப்பொடியின் பின்னூட்டம் பல கருத்தியலையும் தொட்டுச் சென்றுள்ளது.
பதிலளிநீக்குமனிதனுக்கு சார்புத் தன்மை இல்லாமல் இருக்காது என்பது உண்மை, ஆனாலும் எழுத்தில் சார்புத் தன்மையின்றி, மக்களுக்குத் தெரியாத மறைக்கப்பட்டு வரும் உண்மையான செய்திகளை காத்திரமாக நாமும் பதிவு செய்ய முனைவது தவறாகுமா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிமல்.
பதிலளிநீக்கு//இந்த பதிவில ஏன் நடுநிலை பற்றி சந்தேகம் வந்தது.
மற்றப்படி ஈழவன் நீங்க வழக்கம் போலவே தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கோ...//
சின்னப்பொடியின் முதலாவது பின்னூட்டத்துக்கு களத்துமேடு தனது நியாயத்தனத்தை பதிவு செய்துள்ளது.
சின்னப்பொடி அவரது வலைப்பதிவில் ஏற்கனவே பதிவு செய்துள்ள கட்டுரையை படிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தியுள்ளார் என்பது ஒன்றே தெரிகின்றது.
\\ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ‘ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறை’ என்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.\\
பதிலளிநீக்குநான் அறிய அப்படி பலர் நினப்பதாக தெரியவில்லை.ஊடகங்கள் பற்றி பேசும் நிங்கள் இப்படி ஒரு விடையத்தை எழுதமுன்னர் ,இதற்கான ஒரு ஆய்வை செய்திருக்க வேண்டும் அடிப்படையில் நம்மவர்களை ஊடகம் என்றால் என்ன என்று தெரியாத முட்டாள்கள் என்கிறீர்களா?
//இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது//
இது எப்படி ஏற்பட்டது.தமிழ் ஊடகங்கள் பலவற்றை மக்கள் அறிந்ததால் என்று எடுத்து கொள்ளலாமா.தமிழில் சொல்வதை நம்பாமல் ஏன் ம்ற்றயதை கண்மூடி நம்புகிறார்கள்.??
//சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.//
என்ன கொடுமை சார் இது,புதிதாக இருக்கிறது.கிராபிக்ஸ்ஸை சொல்லுறியளோ???
//தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும்//
தலை சுத்துது சார் இதனை படிக்க.அது சரி அவரா நீங்கள்?
அடிப்படையில் இதழியல் கற்கை நெறி மூலம் தமிழ் ஊடகவியலாளர்கள் உருவாக வேண்டும்.இல்லாவிட்டால் இப்படி தான்.உண்மைக்கு முன்னால் நடுநிலைமை இல்லை என்றால் அந்த உண்மை என்ன?என்னை பொறுத்தவரையில் நடப்பவற்றை உறுதிப்படுத்தி மக்களுக்கு தெரிவித்தால் போதும்.மக்கள் தீர்மானிப்பார்கள் இது ஆய்வுகளுக்கு பொருந்தும்.செய்தி என்பது நடைபெற்ற விடையம்.அது உண்மையானது.மக்களுக்கு ஊடகம் என்றால் என்ன என்று தெரியாது என்று கதை அளப்பதை விட்டுவிட்டு ஊடம் என்றால் என்ன என்பதை இங்குள்ள தமிழ் பத்திரிகை, இதழ்கள் தங்களை ஆளில்லாத அழகு ராசாக்களாக காட்டிக்கொள்ளும் புலம்பெயர் வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் கற்றுக்கொள்வது நல்லது.உதாரணமாக தற்போது நடைபெறும் யுத்தம் தொடர்பாக இராசையா இளம்திரையனிடமும்,சரத்பொன்சேகாவிடமும் கருத்து கேட்டு பதிவிடுவது
ஊடகத்தின் கடமை.அப்போது தான் சரத்பொன்சேகா பற்றியும் மக்கள் அறிவார்கள்.கனடா டைம்ஸ் பேட்டியில் வெளியான செய்தி தமிழ் இணையங்களில் எப்படி முன்னிலைபடுத்தப்படது என்பது தெரியாமலா? ஏன் சிங்களவனை பேட்டி கண்டாய் என்று ஒருவரும் கேட்கவில்லையே?
நிறையவே எழுதலாம்.தயவு செய்து மக்களை முட்டள்கள் என்று நினக்க வேண்டாம்
அப்புச்சி
கருத்துக்கு நன்றி அப்புச்சி.
பதிலளிநீக்கு"நீங்களும் ஊடகவியலாளராகுங்கள்" எனும் களத்துமேட்டின் தலைப்பில், வலைப்பதிவர் தோழர் சிவா சின்னப்பொடிக்கு என்ன வருத்தமோ தெரியவில்லை, அவர்சார் ஊடக தர்மமானது இப்படித்தான் இருக்க வேண்டுமென திணிக்க முற்படுவது வேதனையாக இருக்கின்றது.