ஞாயிறு, 27 மே, 2007
72 மணித்தியாலத்தில் 40 புலிகள் பலி
வடக்கு கிழக்கின் பல பாகங்களில் ஸ்ரீலங்கா படையணிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் நேரடித் தாக்குதல்களில் 40 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் 18 விசேட அதிரடிப் படையினரும் கடந்த 72 மணித்தியாலத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த ஆறு பெண்பிள்ளைகள் தொப்பிகல பிரதேசத்தில் இருந்து தப்பி வந்து சித்தாண்டி இராணுவ முகாமில் சரணடைந்திருப்பதாக 232 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி லெப்டினண்ட் கேணல் பிரியந்த நாபாகொட தெரிவித்துள்ளார்.
போராளிகளின் வீரச்சாவு பற்றிய தகவல்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கவில்லை.
2 கருத்துகள்:
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஸ்ரீலங்காவின் கூற்றில் எந்தளவுக்கு நம்பகத்தன்மை இருக்கின்றது.
பதிலளிநீக்குஹெவின் தங்களின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇலங்கையைப் பொறுத்தவரை நம்பகத்தன்மை என்பது வினாக்குறிதான்.