எண்ணெய் வளம் மிக்க நாடான சவூதி அரேபியாவில் தொழில் புரியும் 7 மில்லியன் வெளிநாட்டவர்களின் அதிகமானோருக்கு குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு எட்டியுள்ளது.
மன்னர் அப்துல்லாவின் பணிப்புக்கமைய குடியுரிமை தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2005 வைகாசி 23ம் நாளிலிருந்து குடியுரிமை கோரியவர்களில் வைத்தியர்கள், எந்திரவியலாளர்கள் போன்றோரின் விண்ணப்பங்களின் முதற்கட்ட பரிசீலனை தொடங்கியுள்ளது.
குடியேற்றப்படுவோர் விதிமுறைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 23 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டுமென அரசு பணித்துள்ளது.
பத்து ஆண்டுகள் தொடர்ந்து தங்கியிருந்தால் - 10 புள்ளிகள்
விசேட காரணங்களுக்கென அழைக்கப்பட்டவர்களுக்கு - 13 புள்ளிகள்
உறவினர்களுக்காக - 10 புள்ளிகள்
வைத்தியர்கள், எந்திரவியலாளர்கள் - 13 புள்ளிகள்
அறிவியல் மற்றும் டாக்டர் பட்டப் படிப்பு தகுதியுடையவர்கள் - 10 புள்ளிகள்
முதுநிலை கல்வி கற்றவர்கள் - 8 புள்ளிகள்
இதனடிப்படையில் 23 புள்ளிகளுக்கு மேலதிகமாகப் பெறுவோர் சவூதி அரேபியாவில் குடியுரிமை பெறவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.