
இந்தோனேசியாவிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்ற கிழக்கு தீமோரில் நேற்று முதன் முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
இத் தேர்தலில் இடைக்காலப் பிரதமர் ஜோஸ் ராமோஸ் ஹொர்தா மற்றும் சபாநாயகரான முன்னாள் போராளிக் குழுவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ கட்டெரஸ் இருவரும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாவர், கடந்த மாதம் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குழறுபடிகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று இடம் பெற்றது.

இத் தேர்தலிலும் முறைகேடுகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக சர்வதேச படைகளின் துணை கோரப்பட்டதால், தேர்தல் கண்காணிப்புக் கடமைக்கென ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த 1700 பொலிஸாரும், மேலும் 270 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் மற்றும் 2000 உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களும் சேவையில் அமர்த்தப்பட்டனர்.
இத் தேர்தலின் ஆரம்ப முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை மாலை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நோபல் சமாதான பரிசு பெற்ற இடைக்காலப் பிரதமர் ஜோஸ் ராமோஸ் ஹொர்தா வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்து கிழக்கு தீமோரின் ஆழமான பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வு காணவிருப்பதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை காட்டவிருப்பதாக சபாநாயகரான முன்னாள் போராளிக் குழுவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ கட்டெரஸும் உறுதி கூறியுள்ளார்.

வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
நாளை தீர்ப்பில் ஜனாதிபதி யார் என்பது உறுதி செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.