இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மற்றும் ஊழியர்கள் உட்பட 310 பேருக்கு மரண அச்சுறுத்தல் விடும் வகையில் இறுதி எச்சரிக்கை எனும் சுவரொட்டிகளும் துண்டுப் பிரசுரங்களும் பல்கலைக் கழக வளாகத்தில் காணப்பட்டதைத் தொடர்ந்து சகலரிடமும் பயப்பீதி நிலவுவதை அறிய முடிகின்றது.
யாழ் குடாநாட்டில் புலிப் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்து பல்கலைக் கழக சமூகத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தொடர்ந்து அவதானிக்கப்பட்டுள்ளது, அரசாங்கத்துக்கும் அரச படையினருக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கும் பிரசாரங்களுக்கும் இவர்களே துணை போவது எமக்குத் தெரிய வந்துள்ளது, பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணை போவதுடன் பலர் ஆயுதப் பயிற்சியும் பெற்று பல்கலைக் கழகத்தினர் எனும் அடையாளத்துடன் செயற்படுகின்றனர்.
கலைப் பீடம் .. .. .. .. .. .. .. : 86 பேர்
முகாமைத்துவ வணிக பீடம்: 67 பேர்
விஞ்ஞான பீடம் .. .. .. .. .. : 22 பேர்
மருத்துவ பீடம் .. .. .. .. .. : 41 பேர்
இதர மருத்துவம் .. .. .. .. .. : 70 பேர்
ஊழியர்கள் .. .. .. .. .. .. .. .. : 24 பேர்
நாட்டைக் காக்கும் தமிழ்க் கூட்டமைப்பு - யாழ் மாவட்டம் எனும் பெயரிட்டு காணப்பட்ட பிரசுரத்தின் உண்மைத் தன்மை தான் என்ன?
தினமும் ஈழ மண்ணில் புத்திஜீவிகளும் அப்பாவிகளும் ஆயுததாரிகளினால் பயமுறுத்தலுக்கும் கொல்லப்படுதலுக்கும் தொடர்ந்து இலக்காகிக் கொண்டே இருக்கின்றனர், "பூனைக்கு மணி கட்டுபவர் யார்" என்பது தெரியாமல் அப்பாவிச் சமூகம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றது.
இந்த கொலைப்பயமுறுத்தல் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையே காரணமாகும்.
இவ் அனாமதேய துண்டுப் பிரசுரத்தைக் கண்டித்து எதிர்வரும் 18ம் திகதி வரை பல்கலைக் கழக மாணவர்கள், கல்வி செயற்பாடுகளைப் பகிஷ்கரிப்பதாகரிப்பதாக அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.