
அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் உருவான உட்பூசல் தலை விரித்தாடி கிழக்கு மண்ணின் மகிந்தர்கள் தினமும் பலிக்கடாவாக தெருக்களில் சுட்டு வீசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
"தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடையே மோதல்" எனும் தலைப்பில் நேற்று நான் பதிவு செய்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த சிந்துஜன் (ஜோன்சன் ஜெயகாந்தன்) ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதிலுள்ள அடர்ந்த பற்றைக் காட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளாகி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்தாரென தகவல்கள் உறுதி செய்கின்றன.
இச் சிந்துஜனின் தந்தையான 52 வயதுடைய இராசநாயகம் ஜோன்சன் பெரியகல்லாறு.2 ஐச் சேர்ந்த தனது இல்லத்தில் இருந்த வேளையில் அங்கு வந்த ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கல்முனை அரசாங்க போதனா வைத்தியசாலையில் சிற்றூழியராக பணி புரியும் இத் தந்தை இவ்வாயுததாரிகளுக்குச் செய்த கொடுமை தான் என்ன? சிந்துஜனுக்கு தந்தை எனும் ஒரே காரணத்தினால் கொல்லப்பட்ட செய்தி மனதை உருக்குகின்றது.
இப்படிப்பட்ட மனித உரிமைகளை மீறும் செய்திகளால் தினமும் முக்குளித்து வரும் ஈழ தேசம், புனர் நிர்மாணம் பெறுவதெப்போது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.