தொழிநுட்பத்தின் புது வடிவமாக கிரிகெட் மட்டையினை அவுஸ்திரேலியா மெல்போன் பல்கலைக் கழக ஆராட்சிப் பிரிவினரும் கிரிகெட் மட்டை தயாரிக்கும் குக்கபுரா மற்றும் டேவிட்சன் ஆகிய பிரபல நிறுவனங்களும் இணைந்து புதிய கிரிகெட் மட்டையினைத் தயாரித்துள்ளார்கள்.
பந்தை அடிக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் வெப்பமாக மாற்றப்பட்டு பின்னர் அதன் எதிர்த் திசையில் அதிர்வுகள் ஏற்படுத்தப்படுவதனால் சாதாரண துடுப்பை விட 42 சதவிகிதம் குறைவான அதிர்வு ஏற்படுத்தப்படுமென அறிய முடிகின்றது.
மட்டையின் கைப்பிடியில் மின்னியக்கக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது, கிரிகெட் மட்டையின் கைப்பிடி மரத்தினால் இருக்க வேண்டுமென ஐசிசி வெளியிட்ட விதி இதில் மீறல் குற்றமாகக் கருதப்படமாட்டாது எனவும் ஆராட்சியாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
இன்னும் 18 மாதங்களில் புதிய கிரிகெட் மட்டை சந்தைக்கு வருமென அறிய முடிகின்றது.
பந்து பட்டாலே நாலாகவோ,ஆறாகவோ போக வாய்ப்பிருந்தால் சரி.(நம் ஆட்களுக்கு மட்டும்)
பதிலளிநீக்கு#பந்து பட்டாலே நாலாகவோ, ஆறாகவோ போக வாய்ப்பிருந்தால் சரி.(நம் ஆட்களுக்கு மட்டும்)#
பதிலளிநீக்குபந்தா, மட்டையா அல்லது ஆட்களா?
ஹி ஹி.......
களத்துமேட்டுக்கு வந்து பின்னூட்ட மிட்ட வடுவூர் குமாருக்கு மிக்க நன்றி.