

வெள்ளவத்தை ரொக்ஸி தியேட்டருக்கு முன்பாக காலி வீதி கீழிறங்கி காணப்படுகின்றது.

பாடசாலை செல்ல முடியாமல் மாணவிகளும், வழியின்றி வெள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் காரும் இப்படத்தில் இருப்பது இன்றைய கொழும்பில் ஆகும்.




இலங்கையில் சிங்களவர்கள் வாழும் தென்பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக இன்று வரை ஒன்பது பேர் மரணமாகியுள்ளதாகவும் 41,461 பேர் பாதிப்புற்றிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



கிழக்குப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் திட்டமிட்டு நடத்திய விமானக் குண்டு வீச்சு மற்றும் ஆட்டிலறி செல் வீச்சுக்களில் சிக்குண்டு இடம் பெயர்ந்து அகதிகளாகவுள்ள இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இருக்க இடமின்றி தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையில் சிக்குண்டு கஸ்டமுறுவதை அரசாங்கம் கண்ணெடுத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை, ஆனால் கொழும்பு நிலவரம் பற்றியே கவலைப் படுகின்றார்கள்.
நன்றி:வீரகேசரி படங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.