
ஆண் பெண்ணாகியதைக் கேள்வியுற்று இருப்பீர்கள் ஆனால் ஆசியாவிலேயே முதற் தடவையாக மேஜர் ஜெனரல் ஒருவர் மதகுருவாக மாறிய சம்பவம் இதுவாகும்.
அம்பாறை இராணுவ பயிற்சிப் பாடசாலையில் சிங்க ரெஜிமெண்ட் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரலாக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஆனந்த வீரசேகர என்பவர் மத அனுட்டானத்துடன் தீட்சை பெற்று பௌத்த பிக்குவாக மாறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள புத்தங்கல ரஜமகா விகாரையில் "புத்தங்கல ஆனந்த" எனும் பெயர் மாற்றத்துடன் மதகுருவாகியுள்ள ஆனந்த வீரசேகர பௌத்த மதத்துக்கு ஆற்றவிருக்கும் சேவை தான் என்ன?
இராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த சமயத்தில் தமிழர்களின் அழிவுக்கு தூபமிட்டவரல்லவா ஆனந்த வீரசேகர, கௌதம புத்தரின் மும்மணி சிந்தனைகளுடன் நல்வழி காட்டுவாரா அல்லது பௌத்த பிக்குகளின் கூடாரமாகிய ஸ்ரீலங்கா சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய போன்ற காவி தரித்த அரசியற் கட்சியுன் கூட்டுச் சேர்ந்து இனவாதம் கக்கப் போகின்றாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.
இவர் ரியட் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரராவார்.
Important observation!
பதிலளிநீக்குஏதோ பின்னூட்டமிட நினைத்து விட்டு பின் வாங்கி விட்டீர்கள்,
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சுந்தரவடிவேல்.