தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனமல்ல, தமிழர்கள் என்பது ஒரு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். சுயநிர்ணய உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் கோருவதற்கு தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, ஸ்ரீலங்காவில் சிங்கள மக்களுக்கே அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணும் முகமாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு வழங்குவதற்காக ஜாதிக ஹெல உறுமய தீர்வு யோசனையை தயாரித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனையை வெளியிடும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியாளர் மாநாடு நேற்று நுகேகொடையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது, ஹெலஉறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இனப்பிரச்சனை தீர்வு யோசனை சார்பாக கருத்துத் தெரிவித்தார்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடொன்றை கோரும் வரலாற்று உரிமை இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை. வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை தமிழ் மக்கள் சான்றுகளுடன் நிரூபித்தால் ஈழத்தை அனுமதிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னர் புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்றும் ஹெலஉறுமயவின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனை இல்லையென்று இனவாதிகளும், மதவாதிகளும் கட்டியம் கூறுவது சிங்கள மக்களை இன்னும் அழிவுப் பாதைக்கு நகர்த்தும் நடவடிக்கையாகும்.
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இன்னும் ஜாதிக ஹெல உறுமயவுக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகமென்று சான்றுடன் நிரூபித்தால் ஈழத்தை தாங்களும் அனுமதிப்போமென்று ஹெல உறுமய கூறுவதில் ஒரு விடயம் தொக்கி நிற்கின்றது, அதாவது விரைவில் மலரவிருக்கும் ஈழத்தை ஹெல உறுமய அங்கீகரிக்கும் என்பதாகும்.
தென்னிலங்கைச் சிங்களச் சமுகமும் அதன் அரசியலாளர்களும் தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நெருங்கி விட்டது.
பதிலளிநீக்குகளத்துமேட்டுக்கு வருகை தந்த ஸியாவுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குதமிழர்கள் ஸ்ரீலங்காவின் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட ஆரம்பித்ததும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் உரிமைகளை தாருங்களென சாத்வீகமாகக் கேட்டோம், பயனில்லை!, சில காலங்களின் பின் எமதுரிமையைத் தட்டிக் கேட்டோம் அதற்கும் பயனில்லை!, இயலுமானால் பறித்துத்தான் பாருங்களேன் என்று ஹெல உறுமய போன்ற இனவாதிகள் கொக்கரிக்கும் போது நாம் ஏன் கை கட்டி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும்.