
இக் கிரகத்திலுள்ள வெப்பநிலையின் அடிப்படையில் தண்ணீர் இருப்பதாகவும் அதில் உயிரினங்கள் இருப்பதற்குரிய சான்றுகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இக் கோளில் 0 பாகையில் இருந்து 40 பாகை செல்சியஸ் அளவான வெப்பநிலை நிலவுவதால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக ஜெனிவா விண்வெளி ஆராட்சியாளர் ஸ்டீபன் உட்றி தெரிவித்துள்ளார்.
பூமியை விட 1.5 மடங்கு கதிப்புத் தன்மையைக் கொண்டிருப்பதால் பூமியைப் போன்று இங்கும் கடலாற் சூழப்பட்ட பாறைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் ஆராட்சியாளர்கள் கூறுகின்றனர்.
இக்கோளானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தூரத்தை விட 14 மடங்கு தனது நட்சேத்திரத்தை அண்மித்து காணப்படுகின்றது. அத்துடன் சூரியனை விடப் பிரகாசம் குறைந்ததாகவும், சிறியதாகவும், குளிர்ச்சியுடையதாகவும் இக் கிரகம் காணப்படுகின்றது.
.jpg)
20.5 ஒளியாண்டுகள் தொலைவில் பூமியையொத்த இக் கோள் இருப்பதனால் அதனைச் சென்றடைவது கடினமானதாக இருக்கின்ற போதிலும் எதிர்காலத்தில் ஏற்படும் தொழிநுட்ப மாற்றங்களின் அடிப்படையில் இக் கோளுக்கு மனிதன் செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்படுமென லண்டன் விஞ்ஞான அருங்காட்சியத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராட்சியாளர் அலிஸன் போய்லே தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.