
பத்திரிகைப் புகைப்படத் துறையை 1933ம் ஆண்டிலே தேர்ந்தெடுத்து அதிலே சிறப்புறச் சேவையாற்றி பாரத முதற் பெண் பத்திரிகைப் படப்பிடிப்பாளர் எனும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளார் ஹோமிவியர்வலா, 13 வயதுப் பராயத்தில் உல்லாசப் பயணம் சென்ற போது எடுத்த படங்களை பத்திரிகைக்கு அனுப்பிய போது அவை பிரசுரமாகி சன்மானத்தையும் ஹோமிவியர்வலாவுக்கு பெற்றுக் கொடுத்தது, அதனால் பொருளாதாரத்துறையில் பட்டப்படிப்பு பெற்றிருந்தும் கூட புகைப்படத்துறையையே அவரை ஈர்ந்துள்ளது.
எலிசபத் மகாராணி, கென்னடி போன்ற பிரமுகர்களின் பாரத வருகை, நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்ற வைபவம், கும்பமேளா காட்சிகள் எனப் பல சம்பவங்களைப் பல கோணங்களில் அவர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புக்கள் பாரத நாட்டின் 50 ஆண்டு கால சரித்திரத்தின் மைல்கல்லாக விளங்குகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.