பிரித்தானியாவின் எர்ஸ்டான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண்டி பாவெல் என்பவரின் இடது கரம் சாதாரண வளர்ச்சியுடன் இருக்கும் போது வலது கரம் பெரிதாகிக் கொண்டே வருகின்றது, வைத்தியர்களாலும் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.தற்போது அவரின் வலது கையின் நிறை 17 கிலோ கிராமாகக் காணப்படுகின்றது, சில ஆண்டுகளுக்கு முன்னர் வலது கையிலுள்ள தசைகளை வெட்டிக் குறைக்க மருத்துவர்களின் ஆலோசனை பெறப்பட்டது, ஆனால் நரம்புகள், எலும்புகள் பாதிப்படையலாம் எனும் காரணத்தினால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

இவ் அசாதாரண தசைப் பெருக்கத்தினால் உளத் தாக்கமடைந்துள்ள பாவெல் தனது வலது கரத்தினை வெட்டி எடுத்து விடுங்கள் என டாக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐந்து வயது சிறுவனை தனது வலது கரத்தில் தொடர்ச்சியாக தூக்கி வைத்திருப்பதற்கு ஒத்ததாக பாவெலின் நிலை உள்ளது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.