.jpg)
அமெரிக்காவில் முதன் முறையாக 1872ம் ஆண்டு அன்னையர் தினம் கொண்டாடப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது, ஜூலியா வார்ட் ஹோவ் அம்மணி அமைதிக்காக ஒவ்வொரு வருடமும் பொஸ்டன் நகரில் அன்னையர் தின பிராத்தனையை நடத்துவதுடன் அன்னையர் தின பிரசாரத்தையும் அத்தினத்தன்று மேற்கொண்டார்.
1907ம் ஆண்டில் அனா ஜர்விஸ் எனும் பெண்மணி தேசிய அன்னையர் தின முக்கியத்துவத்தை பிரச்சாரப்படுத்தினார், அவரின் தாயார் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று மரணமானார், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கிராப்டன் தேவாலயத்தில் அத் தினத்தை அன்னையர் தினமாக நினைவு கோருமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு பிலடெல்பியாவிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
.jpg)
அனா ஜர்விஸ் அம்மணியும் அவரின் ஆதரவாளர்களும் அன்னையர் தினத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்துக்கும், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கும் கோரிக்கை விடுத்தனர். 1911ம் ஆண்டு இம்முயற்சிக்கு வெற்றி கிடைத்தது, அமெரிக்காவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது, 1914ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று அன்னையர் தினத்தை தேசிய விடுமுறை தினமாக அப்போதைய அமெரிக்க அதிபர் வூட்டோ வில்சன் பிரகடனம் செய்தார்.
உலகில் பல நாடுகளில் அன்னையர் தினம் வெவ்வேறு நாட்களில் நடைபெறுகின்றது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, சுவீடன், டென்மார்க், சீனா, மெக்ஸிகோ உட்பட பல நாட்களில் அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.