இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் வீரகேசரி, தினக்குரல் மற்றும் தினகரன் போன்ற பத்திரிகைகள் முதன்மையானவை, அவற்றில் தினகரன் லேக் ஹவுஸ் எனும் அரச பத்திரிகைத் திணைக்களத்தினைச் சார்ந்ததால் அரசாங்க செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது, மற்றைய இரு பத்திரிகைகளிலும் மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்க பத்திரிகையாக வீரகேசரி திகழ்கின்றது.
புதன், 31 ஆகஸ்ட், 2011
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
ஓரங்கட்டப்பட்ட கிழக்கு முதலமைச்சர்! - படங்கள் இணைப்பு
திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று 2011.08.29 ஆம் திகதி காலை திருமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதல்வர் சி.சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, எம்.எஸ்.தௌபீக், எம்.கே.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் சில்வா, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகள் அடங்கலாக அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதல்வர் சி.சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, எம்.எஸ்.தௌபீக், எம்.கே.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் சில்வா, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகள் அடங்கலாக அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்த செங்கொடி! - கடிதம் இணைப்பு
தமிழக அரசியற் களத்தில் கால் பதிப்பதற்காக அண்மைக் காலமாக புதிய முகங்கள் சில புதிய புதிய யுக்தியைக் கையாண்டு வந்தார்கள், கடந்த காலங்களில் இவர்களுக்கு "இலங்கைத் தமிழர்" எனும் நாமம் பேசு பொருளாகக் கிடைத்திருந்தது, இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளே செய்து வந்தார்கள். முள்ளிவாய்க்கால் சங்கமத்துடன் பேசு பொருளுக்கு நாதியற்றிருந்த சினிமாத்துறை அரசியலாளர்கள் இப்போது கிடைத்திருக்கும் துருப்பாக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து இருக்கும் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் போன்றோரை இன்றைய அரசியல் காய் நகர்த்தலுக்குப் பயன்படுத்துகின்றார்கள்.
இலங்கைத் தமிழர் விடிவுக்காக புதுடில்லி சென்ற தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையீனம் மீண்டும் அம்பலம்!
"துயரும் வாழ்வும்" எனும் தொனிப் பொருளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை குறித்து இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஸன நாச்சியப்பன் தலைமையில் இருபது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைத் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டதான மாகாநாடு 2011 ஆகஸ்ட் 26, 27 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெற்றது.
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
கச்சதீவுப் பகுதியில் மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை! - காணோளி
இலங்கை தமிழ் மக்களின் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று 2011.08.25 ஆம் திகதி நடைபெற்ற விவாதத்துக்கு இன்று 26 ஆம் திகதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா பதிலளித்து உரையாற்றினார்.
இலங்கைச் சிறைகளில் இந்திய மீனவர்கள் எவருமே இல்லை, அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டார்கள், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகின்றது.
இலங்கைச் சிறைகளில் இந்திய மீனவர்கள் எவருமே இல்லை, அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டார்கள், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகின்றது.
குறியீடு :
இந்தியா,
இலங்கை,
தமிழர்,
நாடாளுமன்றம்
புதன், 24 ஆகஸ்ட், 2011
மர்ம மனிதன் விடயமாக பாராளுமன்றத்தில் சூளுரைத்தார் பா.உ. ஶ்ரீதரன்.
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று 2011.08.23 ஆம் திகதி விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள் அபிவிருத்தி தொடர்பான கூட்டத் தொடர் இடம்பெற்ற வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் பிற்பகல் 2.40 மணியளவில் தனக்குக் கிடைத்த சந்தற்பத்தினைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டில் இன்று மக்களை அசௌகரியத்துக்குள்ளாகி நிம்மதி இழக்க வைத்திருக்கும் மர்ம மனிதன் விவகாரத்தை தெளிவு படுத்தினார்.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்கள்!
"அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை" எனும் தலைப்பில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய பதிவு தற்போதைய இலங்கையின் சில சாதக பாதக நிலமையைக் குறிப்பிட்டிருந்தது, தலைப்புக்குப் பொருத்தமற்ற பத்தியாக காணப்பட்ட போதிலும் நாட்டை உலுப்பிக் கொண்டிருக்கும் கிறிஸ் பூசப்பட்ட மர்ம மனிதனைப் பற்றியதாக தொட்டுச் சென்றுள்ளார்.
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
தமிழ்ப் பிரதேசசபை அபிவிருத்தியும் புலம்பெயர் தமிழர்களும்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா யாழ்ப்பாணத்தில் ததேகூ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதேசசபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்காவிடின் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து பெற்று சபையைத் திறம்பட நடாத்துவோம் என சம்பந்தன் கூறினார்.
புதன், 17 ஆகஸ்ட், 2011
கிழக்கில் பீதியை ஏற்படுத்தும் மர்ம மனிதர்களைக் கண்டு கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ள மர்ம மனிதனினால் தினமும் தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, இதனை தமிழ் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகின்றது.
எமது எதிர்கால கல்வியலாளர்களைச் சிதைப்பதற்காக திட்டமிட்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் இந்த நேரம் பார்த்து மர்ம மனிதனை உருவாக்கி உள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்.
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011
கிழக்கு மாகாணத்தில் "கிறிஸ்"மனிதன்!
இலங்கைச் சஞ்சிகையில் வெளிவந்த இயக்கப்படும் கிறிஸ் மனிதனின் கற்பனைச் சித்திரம்.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
தமிழகத் தொலைக்காட்சியில் தமிழ்க் கொலை! - காணொளி
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் ரிவி, மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை மையப்படுத்தி காத்திரமான பல நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அந் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் "கோம் சுவீட் கோம்", இந்நிகழ்ச்சியை முன்னர் நடிகர் சத்தியராஜ் தொகுத்தளித்தார், போட்டியின் வெற்றியாளர்களுக்கு வீடொன்றைப் பரிசளிப்பதே நோக்கம். தற்போது தீபக், திவ்வியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்தளிக்கின்றார்கள்.
சனி, 13 ஆகஸ்ட், 2011
விடுதலை பெற்ற 152 முன்னாள் விடுதலைப் புலிகள்! - காணொளி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முள்ளிவாய்க்காலில் காவு கொடுக்கத் தயாராக இருந்த பல்லாயிரம் பேரில் இருந்து மீண்டு, ஸ்ரீலங்கா படையிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11000 பேரில் புனர்வாழ்வு பெற்ற 152 பேர் நேற்று 2011.08.12 ஆம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறியீடு :
புனர்வாழ்வு,
விடுதலைப் புலிகள்,
ஸ்ரீலங்கா
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
கிறிஸ் மனிதனெனும் வதந்தியும், சாதகமாக்கிக் கொள்ளும் மர்ம ஆசாமிகளும்!
கிறிஸ் போன்ற உடலில் வழுக்கக் கூடிய திரவத்தைப் பூசிக் கொண்டு இரவு வேளைகளில் பெண்களிடம் சென்று பாலியல் தொந்தரவு செய்யும் மர்ம மனிதர்களால் ஸ்ரீலங்காவில் பல பகுதிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அண்மைக் காலமாக இம் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் பல இடங்களிலும் அதிகரித்திருப்பது வேதனையைத் தருகின்றது, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகள் இன்று வரை காவற்துறையினர் மேற்கொள்ளாமல் கண்டும் காணாமல் இருப்பது தான் வேடிக்கை.
வியாழன், 11 ஆகஸ்ட், 2011
கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஜெயலலிதா கண்டனம்! (காணொளி)
தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்தை விமர்சித்த ஸ்ரீலங்காவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானம், முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் இலாபத்துக்காகக் கொண்டு வரப்பட்டதாகுமென ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விடுதலைப் புலிகளால் கற்றல் மறுக்கப்பட்ட முன்னாள் போராளிகள் (காணொளி)
தமிழீழ விடுதலைப் புலிகளால் கற்றல் மறுக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 185 பேர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள்.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
இந்திய ஹெட்லைன் ருடே ஒளிபரப்பிய இலங்கை கொலைக்கள சாட்சியம். (காணொளி)
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உளத் தூய்மையாக செயற்படுமா?
இலங்கை அரசாங்கத்துடன் பத்து தொடர் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பேச்சுவார்த்தையைத் தொடர முடியாமல் உள்ளது, அரசாங்கம் உளச்சுத்தியுடன் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் காலத்தை நீடிக்கின்றது என்பதை உணர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளனர்.
சனி, 6 ஆகஸ்ட், 2011
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011
கலைந்த தமிழ் கட்சிகள் அரங்கம் மீண்டும் இணையுமா?
தமிழ் கட்சிகளின் ஒருமைப்பாடு அவசியம் எனக் கருதிய தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் "தமிழ்க் கட்சிகளின் அரங்கம்" எனும் குடையின் கீழ் ஒன்று சேர்ந்து, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தின.
இக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னின்றார் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அரசாங்க அமைச்சராக இருக்கும் இவருடனும், இவரைச் சார்ந்த கட்சியான ஈபிடிபி உடனும் சேர்ந்து தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் நிலவின.
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
சனல் 4 வீடியோ காணொளிக்கு மறுப்புக் கூறும் ஸ்ரீலங்கா வீடியோ காணொளி!
புதன், 3 ஆகஸ்ட், 2011
யாழ்.நல்லூர் முத்திரைச்சந்தியில் வீர வாளுடன் சங்கிலிய மன்னனின் பொன்னிறச் சிலை.
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011
த.தே.கூ. பொய்முகம் மீண்டும் அம்பலம், ஸ்ரீலங்கா குழுவில் செல்வம் அடைக்கலநாதன்!
குறியீடு :
செல்வம் அடைக்கலநாதன்,
ததேகூ,
போலிமுகம்
திங்கள், 1 ஆகஸ்ட், 2011
மனிதாபிமான நடவடிக்கையென சர்வதேசத்தின் சோற்றினுள் பூசனிக்காயை புதைக்க முற்படும் கோத்தபாய!
தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவிலாறு அணைக்கட்டு பூட்டப்பட்ட 2006 ஜூலை தொடக்கம் 2009 மே முள்ளிவாய்க்கால் வரையான காலப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான உண்மை விபர ஆய்வு” எனும் தொனிப் பொருளில் இன்று ஓகஸ்ட் - 01ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
சிவாஜிலிங்கம் புதிய அரசியல் கடை திறக்கவுள்ளார்?
யாழ்ப்பாணம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்காக ததேகூ சார்பாக முதன்மை வேட்பாளர் க.சிவாஜிலிங்கம் ஈறாக பலர் போட்டியிட்டனர், இந்த நகரசபைக்கான ஆட்சி அதிகாரத்தை ததேகூ கைப்பற்றியது, அதிகூடிய விருப்பு வாக்குப் பெற்றவரே தலைவராகக் கூடிய நிலை இருப்பதால் என்.ஆனந்தராஜா அவ் ஆசனத்துக்கான தகைமையைப் பெறுகின்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)