வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா 48 மணித்தியாலத்தினுள் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், இல்லாவிடில் உறவினர்கள் உட்பட அவரும் கொல்லப்படுவாரென ஜிகாத் போராளிகள் எனும் பெயரில் அச்சுறுத்தல் கடிதம் வந்துள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
இந்தக் கடிதம் வவுனியா, பட்டைக்காடு, ஏ.எம்.எஸ்.முஸ்தபா என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது, மரண அச்சுறுத்தல் விடுப்பவர் தனது பெயரை நிச்சயம் பதிவு செய்திருக்க மாட்டார், இதனால் அஞ்சலில் இணைக்கப்பட்ட பெயர் போலியானது என அறிய முடிகின்றது.
ஜிகாத் எனும் அமைப்பு ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாஸ காலத்தில் காலம் சென்ற அமைச்சர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும், அமைச்சர் அஷ்ரப்பின் அகால மரணத்தினைத் தொடர்ந்து அஞ்ஞாதவாசத்தில் இருந்து வந்தது இவ்வமைப்பு, பலமிக்க தமிழீழ விடுதலைப் புலிகளே மகிந்த ராஜபக்ஷ அரசினால் அழிக்கப்பட்டுள்ள பொழுதில் இந்த ஜிகாத் அமைப்புக்களெல்லாம் ஜுஜிப்பிகளே!
குழப்பம் விளைவிப்பதற்காக தீய சக்திகளினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலே இதுவாகுமென எண்ணத் தோன்றுகின்றது, வவுனியா நகரசபைக்குரிய முஸ்லிம் மையவாடியில் நகரசபை அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவது தொடர்பாக நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கினை சாதகமாகப் பயன்படுத்தி தீயசக்தியினால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கிழக்கில் சட்டபூர்வமற்ற ஜிகாத் அமைப்பினால் தமிழ் மக்கள் சொல்லொணா துயரத்தினை அனுபவித்துள்ளார்கள், இதே நிலை வவுனியாவிலும் இடம்பெறுவதை எவரும் அனுமதிக்க முடியாது, ஆகவே அரசாங்கம் உண்மைக் குற்றவாளி யாரென்பதை கண்டு பிடித்து தண்டனை வழங்குவது அவசியமாகும்.
இதனை அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்குமாயின் அனாமதேயக் கடிதம் எனும் பெயரில் பலர் வேதனைகளை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும், இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
தொடர்புபட்ட செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.