யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன் சங்கிலியனின் நல்லூர், முத்திரைச்சந்தியில் இருந்த உருவச் சிலை இந்திய சிற்பிகளால் பொன்னிறத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று 2011.08.03 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் திறப்பு விழா செய்யப்பட்டது.
1519 ஆம் ஆண்டு தொடக்கம் 1561 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மன்னன் செகராசசேகரன் சங்கிலியன் 1565 ஆம் ஆண்டு நல்லூரில் இறந்தான், மன்னனை நினைவுகூருவதற்காக 1974 ஆம் ஆண்டு சிற்பி செல்லையா சிவப்பிரகாசத்தினால் செப்பனிடப்பட்ட சிலை காலப்போக்கில் சிதைவடைந்ததால் யாழ்.மாநகரசபையினால் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று எழுர்சியுடன் கம்பீரமாக காட்சி தருகின்றான் மன்னன் சங்கிலியன்.
இந்த சிலை திறப்பு விழாவினை களங்கப்படுத்த முனைந்த த.தே.கூ. பகிஷ்கரிப்பினை நடாத்தியது, ஆனால் ததேகூ சார்ந்த யாழ்.மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி ரெமிடியஸ் இவ்விழாவில் கலந்து சிறப்புரையாற்றினார்.
சங்கிலிய மன்னனின் சிலை புனருத்தாரண தொடக்க வேலைகள் ஆரம்பித்த காலம் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர், சிலை கூனிக்குறுகி இருப்பதாகவும், மன்னன் சங்கிலியனின் கையிருக்கும் வாள் சிங்களவருக்கு அஞ்சி நீக்கப்பட்டு விட்டதெனவும் இன்னோரன்ன பொய்களைக் கூறி வந்தனர்.
இவர்களின் ஊடகமான "உதயன்" பத்திரிகையும் இதனை உறுதிப்படுத்தக் கூடியதாக சிலையின் கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற வேளையில் பெறப்பட்ட படங்களின் மூலம் முந்திரிகைக் கொட்டைத் தனமாக அவசரச் செய்திகளைப் பிரசுரித்து மக்களைக் குழப்பி வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்னன் சங்கிலியனின் சிலை உருவாக்கம் முதலாக விழா நாள் வரை அர்த்தமற்று குற்றம் சுமத்தியதை மனதார உணர்ந்து மன்னிப்பு கோர வேண்டும், அத்துடன் திறப்பு விழாவினைப் பகிஷ்கரிக்க எடுத்த முடிவானது, சங்கிலிய மன்னனை அவமானப்படுத்தியதற்கு ஒப்பாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.