தமிழ் கட்சிகளின் ஒருமைப்பாடு அவசியம் எனக் கருதிய தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் "தமிழ்க் கட்சிகளின் அரங்கம்" எனும் குடையின் கீழ் ஒன்று சேர்ந்து, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தின.
இக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னின்றார் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அரசாங்க அமைச்சராக இருக்கும் இவருடனும், இவரைச் சார்ந்த கட்சியான ஈபிடிபி உடனும் சேர்ந்து தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் நிலவின.
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நிலைப்பதனைப் பொறுக்க முடியாத பேரினவாதம் எவ்வாறு கலைக்கலாமென சிந்தித்ததன் விளைவே தேர்தல். தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய தமிழ்க் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதனால் இணைந்த தமிழ் கட்சிகள் கலைந்தன.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களை தற்போதைய சனத்தொகையின் விகிதாசாதத்துக்கேற்ப பத்தில் இருந்து ஆறாகக் குறைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் திணைக்களம் மேற்கொள்ள இருக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு கலைந்த தமிழ்க் கட்சிகள் மீண்டும் இணைய சந்தற்பம் வாய்த்துள்ளது, இதற்கான சமிக்சையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ளார், பாராளுமன்றப் பிரதிநிதித்துவக் குறைப்பினால் யாழ்.மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுவதுடன் பல அபிவிருத்திகள் பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும், இதனால் போரில் அழிவுற்ற பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்ற முயற்சிகளும் பாதிக்கப்படும்.
அரசியல் பேதங்களை மறந்து தமிழ்க் கட்சிகள் இணைய வேண்டிய தருணம் இது, இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கலைந்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மீண்டும் இணையட்டும்.
தொடர்புபட்ட செய்தி: தமிழ்க் கட்சிகளுக்கு ஈபிடிபி அழைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.