இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் வீரகேசரி, தினக்குரல் மற்றும் தினகரன் போன்ற பத்திரிகைகள் முதன்மையானவை, அவற்றில் தினகரன் லேக் ஹவுஸ் எனும் அரச பத்திரிகைத் திணைக்களத்தினைச் சார்ந்ததால் அரசாங்க செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது, மற்றைய இரு பத்திரிகைகளிலும் மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்க பத்திரிகையாக வீரகேசரி திகழ்கின்றது.
எஸ்.பி.சாமி மற்றும் பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வனில் முயற்சியினால் உருவாக்கப்பட்டு கடந்த 15 வருடங்களாக வீரகேசரிக்குப் போட்டியாகச் செயற்பட்டு வந்த தினக்குரல் பத்திரிகை இடை நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. வீரகேசரி நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தினக்குரல் பத்திரிகை நிறுவனர் எஸ்.பி.சாமியினால் பத்திரிகை உரிமம் ரூ. 230 மில்லியனுக்கு விற்பனையாகி உள்ளதாக செய்திகள் கூறின.
தினக்குரல் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கான சேமலாப நிதி எதுவும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எஸ்.பி.சாமி குடும்பத்தினால் செலுத்தப்படாமையினால் எதிர்காலத்தில் தினக்குரல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் நன்மை பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான சட்டரீதியான வழக்கு தினக்குரல் ஊழியர்களால் தொழிற் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீரகேசரி நிறுவனத்துக்கு தினக்குரல் வெளியீட்டு உரிமம் விற்பனையான பின்னர் தினக்குரல் ஊழியர்களிடம் இருந்து தன்னிச்சையான இராஜினாமா கடிதங்களை எஸ்.பி.சாமி குடும்பத்தினர் கோரி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில் வீரகேசரி நிறுவனத்துக்கு தினக்குரல் உரிமம் முழுமையாகக் கைமாறியுள்ளதால் தினக்குரல் பத்திரிகை நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
ஊழியர்களின் எதிர்கால நலத் திட்டத்துக்கு உதவும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு செலுத்த வேண்டிய, ஊழியர்களுக்கான பணம் செலுத்தப்படாமையாலும், ஊழியர்களிடம் இராஜினாமா கடிதத்தினைத் தருமாறு கோருவதாலும் தினக்குரல் ஊழியர்கள் நிலைதடுமாறி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.