திங்கள், 29 ஆகஸ்ட், 2011

ஓரங்கட்டப்பட்ட கிழக்கு முதலமைச்சர்! - படங்கள் இணைப்பு

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று 2011.08.29 ஆம் திகதி காலை திருமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதல்வர் சி.சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, எம்.எஸ்.தௌபீக், எம்.கே.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் சில்வா, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகள் அடங்கலாக அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் ஆளுமை அனைத்தும் மத்திய அரசின் கட்டமைப்பில் செயற்படுவதை இன்றைய விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவதானிக்க முடிந்தது, கிழக்கு மாகாணசபையின் ஆளுமை மிக்கவராகக் கருதப்பட வேண்டிய முதலமைச்சர் அதிகாரத்தில் இருந்து பறிக்கப்பட்டவர் போன்று அதிதிகளின் வரிசையில் கடைநிலையில் ஓரங்கட்டப்பட்டவராக காட்சியளித்தார்.

இந்த நிலமையை அவதானிக்கும் போது கிழக்கு மாகாணசபை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. மக்களுக்கு தனித்துவமிக்க கட்சி போன்றும், அரசாங்கத்துக்கு ஆதரவு தரும் கட்சி போன்றும் இரு தலைக் கொள்ளி எறும்பாய் வாழ முற்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் நிலை கவலைக்குரியது,

கிழக்கிலங்கையின் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட மாகாணசபையின் அதிகாரங்கள் மத்திய அரசினால் ஆளுநரின் வழி நடத்தலுக்குள் கொண்டு வரப்பட்டு, முதலமைச்சரின் அதிகாரங்கள் உருத் தெரியாமல் பறிக்கப்பட்டு வாய்ப்பூட்டு போடப்பட்ட நிலையில் பேரினவாத ஆட்சிமைக்குள் சிக்குண்டமை வேதனையே!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----