தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவிலாறு அணைக்கட்டு பூட்டப்பட்ட 2006 ஜூலை தொடக்கம் 2009 மே முள்ளிவாய்க்கால் வரையான காலப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான உண்மை விபர ஆய்வு” எனும் தொனிப் பொருளில் இன்று ஓகஸ்ட் - 01ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சரணடைந்த 11000 முன்னாள் போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைப் படையணியாகவிருந்து சரணடைந்த 595 பேரும் ஒரு வருடத்துக்குள்ளேயே அவர்களின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் கொலை செய்யப்படவில்லை, சரணடைந்தவர்களின் குடும்பத்தினரை நன்றாகப் பராமரித்த அரசாங்கம், சரணடைந்தவர்களைக் கொலை செய்ய வேண்டிய தேவை இல்லை, ஸ்ரீலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி சமாதானத்தை கெடுக்கும் நோக்குடனே முன் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியான ரமேஷ் ஸ்ரீலங்கா இராணுடத்திடம் சரணடைந்து விசாரணையின் பின்னர் இராணுவச் சீருடை அணிவிக்கப்பட்டு கொலை செய்து வீசப்பட்ட செய்திகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இதில் தளபதி ரமேஷ் விசாரணக்குள்ளாக்கப்படுவது வீடியோ பதிவாகவும், கொல்லப்பட்ட பின் புகைபடங்களாகவும் சர்வதேசத்தின் முன் காண்பிக்கப்பட்டிருந்ததை கோத்தபாய ராஜபக்ஷ பார்க்க தவறி விட்டாரோ என எண்ணத் தோன்றுகின்றது, அவர் இக் காணொலியைப் பார்த்திருந்தால் ஸ்ரீலங்கா படையணியிடம் சரணடைந்தவர்கள் கொல்லப்படவில்லை எனும் கூற்று அவசியமற்றதாக இருந்திருக்கும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமது படையணிகளை, சர்வதேச நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முழுப் பூசனிக்காயை சோற்றினுள் மறைக்க முயற்சிப்பது வேடிக்கையாகத் தோன்றுகின்றது.
தொடர்புபட்ட செய்திகள்:
http://www.defence.lk/new.asp?fname=20110801_04
http://www.tamilnewsnetwork.com/2011/04/28/new-evidence-leads-to-war-crime-committed-on-lttes-col-ramesh/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.