இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று 2011.08.23 ஆம் திகதி விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள் அபிவிருத்தி தொடர்பான கூட்டத் தொடர் இடம்பெற்ற வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் பிற்பகல் 2.40 மணியளவில் தனக்குக் கிடைத்த சந்தற்பத்தினைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டில் இன்று மக்களை அசௌகரியத்துக்குள்ளாகி நிம்மதி இழக்க வைத்திருக்கும் மர்ம மனிதன் விவகாரத்தை தெளிவு படுத்தினார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மர்ம மனிதனினால் பீதிக்குள்ளாகி அவஸ்தையுற்ற வேளையில் இவ் விடயத்தினை அறியாமல் இருந்தும், வடக்கு பிரதேசத்துக்கு மர்ம மனிதன் விவகாரம் விரிசல் அடைந்த இத் தருணத்தில் தான் சிறிதரனால் சிந்திக்க முடிந்துள்ளது.
மர்ம மனிதர்களைக் கண்டு பிடிக்க வேண்டிய பாதுகாப்புக்குப் பொறுப்பான காவற்துறையும், இராணுவத்தினரும் வதந்தி எனக் கூறி அசமந்தப் போக்கினை கடைப்பிடிப்பதனால், பாதிப்புற்ற மக்கள் மர்ம மனிதர்களைப் பிடிக்க முனையும் போது அவர்கள் காவல் நிலையங்களுக்குள் ஓடித் தப்பிக் கொள்கின்றனர்.
சில இடங்களில் மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டவர்கள் இராணுவத்தினராக அல்லது காவற்துறையினராக இனம் காணப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட போதிலும் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் நீதி விசாரணையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
நியாயம் கேட்கும் மக்கள் மீது இராணுவ பலத்தினைப் பயன்படுத்தி அடித்துக் காயத்துக்குள்ளாக்கி நீதிமன்றத்தில் குற்றவாளிகளென மறுதலையாக காவற்துறையினரால் பொது மக்கள் நிறுத்தப்படுகின்றனர், பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மற்றய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் காலம் கடத்தாமல் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் இடையூறுகளுக்கும் அப்பால் திசை மாறாமல் சிறப்பாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.ஶ்ரீதரனுக்கு "களத்துமேடு" பாராட்டுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.