தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் ரிவி, மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை மையப்படுத்தி காத்திரமான பல நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அந் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் "கோம் சுவீட் கோம்", இந்நிகழ்ச்சியை முன்னர் நடிகர் சத்தியராஜ் தொகுத்தளித்தார், போட்டியின் வெற்றியாளர்களுக்கு வீடொன்றைப் பரிசளிப்பதே நோக்கம். தற்போது தீபக், திவ்வியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்தளிக்கின்றார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த வில்லன் நடிகர்கள் கலந்து கொண்டார்கள், அதில் ஒரு போட்டியாளருக்கு விதிமுறைகள் சரியாகத் தெரியாததாலும், ஆங்கிலத்தில் அதிக பரீட்சயம் இல்லாததாலும் வெற்றியைத் தழுவ முடியாமல் போனதால், அப்போட்டியாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இச் சம்பவம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், தமிழகத்தில் ஆங்கில மோகம் எப்படி வேரூன்றி உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகின்றது, தமிழில் விளக்கம் கோரப்பட்ட போதிலும் தொகுப்பாளர் தமிழில் விளக்கம் கொடுப்பதற்கு படும் வேதனை சொல்லிலடங்காது.
நல்ல பல நிகழ்ச்சிகளை நடாத்தும் விஜய் ரிவி தமிழ் போட்டியாளர்களின் நலன் கருதி நிகழ்ச்சிகளை செவ்வனே நடாத்தும் என எதிர்பார்ப்போம்.
megavum unmai
பதிலளிநீக்கு