யாழ்ப்பாணம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்காக ததேகூ சார்பாக முதன்மை வேட்பாளர் க.சிவாஜிலிங்கம் ஈறாக பலர் போட்டியிட்டனர், இந்த நகரசபைக்கான ஆட்சி அதிகாரத்தை ததேகூ கைப்பற்றியது, அதிகூடிய விருப்பு வாக்குப் பெற்றவரே தலைவராகக் கூடிய நிலை இருப்பதால் என்.ஆனந்தராஜா அவ் ஆசனத்துக்கான தகைமையைப் பெறுகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஊடகமாக ததேகூ இருந்ததால் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற அங்கத்துவம் பறிபோனதைத் தொடர்ந்து, அரசியல் கதிரைக்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வந்தார் சிவாஜிலிங்கம்.
தமிழீழ விடுதலை இயக்கத்தினைத் தொடர முடியாமல் விடுதலைப் புலிகளின் ஆதரவை நாடி, ததேகூ ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தைப் பெற்றுக் கொண்ட சிவாஜிலிங்கத்தின் அரசியற்காலம் காலாவதியானதும் ததேகூ இல் இருந்து நீக்கப்பட்டார் பின்னர் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனும் அரசியற் பெட்டிக் கடையைத் திறந்தது அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும், ஜனாதிபதியாகும் கனவில் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டு தொடர் தோல்வியினைத் கண்டார், அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனும் அரசியற் பெட்டிக்கடையை மூடிவிட்டு ததேகூ செயலாளர் மாவை சேனாதிபதியுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தின் பிரகாரம் ததேகூ சார்பாக வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்டார்.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலிலும் அவரது துரதிஸ்டம் நகரசபைத் தலைவர் பதவியினைப் பெறக் கூடிய அளவுக்கு அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறவில்லை, என்.ஆனந்தராஜாவே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார், இதனால் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட சிவாஜிலிங்கம், ததேகூ செயலாளர் மாவை சேனாதிராஜாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனக்கே வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென, வல்வெட்டித்துறை நலன்விரும்பிகள் எனப்படுவோர் 11 பேர் கையொப்பமிட்டு "வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் 2011" எனும் தலைப்பிலான தொலைநகலை ததேகூ செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு சிவாஜிலிங்கத்தின் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவியும் சிவாஜிலிங்கத்துக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடிய சாத்தியம் இருப்பதால் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, இந்தப் பதவியும் வழங்கப்படாமற் போனால் "வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய மாதிரி" மீண்டும் ஓர் அரசியற் பெட்டிக்கடையை சிவாஜிலிங்கம் திறக்க தயங்கமாட்டார் என எதிர்பார்க்கப் படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.