கிறிஸ் போன்ற உடலில் வழுக்கக் கூடிய திரவத்தைப் பூசிக் கொண்டு இரவு வேளைகளில் பெண்களிடம் சென்று பாலியல் தொந்தரவு செய்யும் மர்ம மனிதர்களால் ஸ்ரீலங்காவில் பல பகுதிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அண்மைக் காலமாக இம் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் பல இடங்களிலும் அதிகரித்திருப்பது வேதனையைத் தருகின்றது, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகள் இன்று வரை காவற்துறையினர் மேற்கொள்ளாமல் கண்டும் காணாமல் இருப்பது தான் வேடிக்கை.
பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச் செயலைச் செய்தவர்கள் எனப்படும் மர்ம ஆசாமிகள் உறவினர்களால் துரத்திச் செல்லப்பட்ட வேளைகளில் தஞ்சமடைந்த இடமாக காவல் நிலையங்களே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்காவின் காவற்துறை மாஅதிபர் என்.கே.இலங்ககோன் கருத்துத் தெரிவிக்கையில் கிறிஸ் மனிதன் எனக் கூறப்படுபவை அனைத்தும் கட்டுக்கதைகள், இதனை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட மர்ம ஆசாமிகள் காவல் நிலையங்களுக்குள் ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன!, இவர்களைப் பாதுகாக்க காவற்துறை எடுத்துக் கொண்ட தற்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசியம் என்ன!
இந்த வதந்திகளினால் பாதிக்கப்பட்டு தனித்து வாழும் பெண்களை சாதுரியமாக இம்சை செய்யும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருவதாக அறிய முடிகின்றது, இதனைப் பாதிக்கப்பட்ட பெண்களே உறுதி செய்துள்ளனர்.
நாட்டில் இன்றைய நிலையில் அவசர காலச் சட்டத்தின் தேவை இல்லாததால் அதனை நீக்க வழி வகுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்படியான வதந்திகள் ஏற்படுத்தப்பட்டு அல்லது தனித்திருக்கும் பெண்களிடம் திட்டமிட்டு நடாத்தப்படும் பாலியல் இம்சைகளால் அவசரகாலச் சட்டத்தினை நீடிப்பதற்கான யுக்தியாக இதனை அரசாங்கம் பயன்படுத்துவதாக அறிய முடிகின்றது.
காவற்துறை மறைமுகமாக தேவையற்ற துன்புறுத்தல்களை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல நொந்த மக்கள் மீது நிகழ்த்துவது கண்டிக்கத்தக்கதாகும். அரசாங்கம் இதனை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கத் தவறின் ஒவ்வொரு ஊரினுள்ளும் நுழையும் அப்பாவி மக்களில் பலர் சந்தேகத்தில் தாக்கப்பட அல்லது கொல்லப்படக் கூடிய அபாயம் உள்ளது.
உண்மைதான்...
பதிலளிநீக்குநானும் இதைப் பற்றி எழுதி உள்ளேன்..
http://faaique.blogspot.com/2011/08/sri-lankan-super-hero.html
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மொகமட்.
பதிலளிநீக்கு