வவுனியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வவுனியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஆகஸ்ட், 2011

வவுனியா நகரசபைத் தலைவருக்கு வந்த அனாமதேய அச்சுறுத்தல் கடிதம்!


வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா 48 மணித்தியாலத்தினுள் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், இல்லாவிடில் உறவினர்கள் உட்பட அவரும் கொல்லப்படுவாரென ஜிகாத் போராளிகள் எனும் பெயரில் அச்சுறுத்தல் கடிதம் வந்துள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

திங்கள், 17 நவம்பர், 2008

சிறீ ரெலோவினர் மீது துப்பாக்கிச் சூடு இருவர் பலி இருவர் படுகாயம்!

2008.11.16 ஆம் திகதி நேற்று மாலை 6:45 மணியளவில் வவுனியா குருமன்காடு, காளிகோயில் பகுதியில் புதிய காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த சிறீ ரெலோ அமைப்பினர் மீது துப்பாக்கிதாரிகள் நடாத்திய தாக்குதலில் அவ் அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்தவர்களான வசந்த் எனப்படும் இராசையா பிரதீப், மற்றும் பரா எனப்படும் வடிவேல் சிவகுமார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர், மன்னாரைச் சேர்ந்தவர்களான ரமணன் எனப்படும் செல்லையா இளஞ்செழியன் மற்றும் நிர்மலன் எனப்படும் செபமாலை றோச் சபிறியல் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

வவுனியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!


வவுனியா தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தெருவால் சென்று கொண்டிருந்த பொது மகனொருவரும், தற்கொலையாளியும் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா காவற்துறையைச் சேர்ந்தவர்களும் இதில் காயப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது, இதில் 3 பொது மக்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்கொலைக் குண்டுதாரியில் இலக்குத் தவறியதால் இவ் விபரீதம் நடந்திருக்கலாமென அறிய முடிகின்றது.

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

வவுனியாவில் பெண்களிருவர் சுட்டுக் கொலை!

வவுனியா வைரவபுளியங்குளம், வைரவர்கோவில் வீதியில் அருகருகே உள்ள இரு வீட்டில் வசித்து வந்த பெண்கள் இருவர் 2008.09.22 (நேற்று) இரவு 8 மணியளவில் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை வங்கி வவுனியா கிளையில் பணி புரிந்த காரைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தில்நாதன் சிவசங்கரி மற்றவர் வவுனியா தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றிய நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய முத்துலிங்கம் தேவிகா இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஆகும்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2008

வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் !


வவுனியா ஜோசப் இராணுவத் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளும், கிட்டு பீரங்கிப் படையணியும் மற்றும் கரும்புலிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் இந்திரா ராடர் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட வான்புலிகளும் வானூர்திகளும் தளம் திரும்பி விட்டதாகவும், கொல்லப்பட்ட கரும்புலிகளினது விபரத்தினையும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

  1. கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
  2. கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
  3. கரும்புலி மேஜர் நிலாகரன்
  4. கரும்புலி மேஜர் ஆனந்தி
  5. கரும்புலி கப்டன் கனிமதி
  6. கரும்புலி கப்டன் முத்துநகை
  7. கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
  8. கரும்புலி கப்டன் எழிலகன்
  9. கரும்புலி கப்டன் அகிலன்
  10. கரும்புலி கப்டன் நிமலன்

சனி, 6 செப்டம்பர், 2008

வவுனியா விவசாயிகள் சங்க தலைவர் சுட்டுக் கொலை !

வவுனியா பம்பைமடு விவசாயிகள் சங்கத் தலைவரான 45 வயதுடைய பொன்னர் மகேந்திரன் கடந்த 2008.09.04 ஆம் திகதி இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு பம்பைமடு பாடசாலைக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----