இலங்கை அரசாங்கத்துடன் பத்து தொடர் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பேச்சுவார்த்தையைத் தொடர முடியாமல் உள்ளது, அரசாங்கம் உளச்சுத்தியுடன் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் காலத்தை நீடிக்கின்றது என்பதை உணர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஆட்சி அதிகார முறைமை, மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் வரி, நிதி அதிகாரங்கள் போன்ற கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்தால் என்ன செய்வீர்களென "வீரகேசரி" பத்திரிகை இரா.சம்பந்தனிடம் வினாவியது.
பேச்சுவார்தை பற்றிய காத்திரமான விடயங்களை அரசாங்கம் எழுத்து மூலமாக இன்னும் தெரிவிக்கவில்லை, அதனைத் தொடர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவும் அமையுமென இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை எனும் போர்வையில் தங்களது சுய இலாபங்களை மாத்திரமே பூர்த்தி செய்து பழக்கப்பட்ட கூட்டமைப்பினரின் பேச்சுவார்த்தைத் தொடர் முறிவடையும் நிலைக்கு வந்துள்ளது, இந்தப் பேச்சுவார்த்தைத் தொடரையும் அர்த்தமுள்ளதாக அமைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே எல்லோருடைய எண்ணமுமாகும்.
வணக்கம் தோழா அற்புதமான படைப்பு
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா!
பதிலளிநீக்கு