ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர் விடிவுக்காக புதுடில்லி சென்ற தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையீனம் மீண்டும் அம்பலம்!

"துயரும் வாழ்வும்" எனும் தொனிப் பொருளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை குறித்து இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஸன நாச்சியப்பன் தலைமையில் இருபது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைத் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டதான மாகாநாடு 2011 ஆகஸ்ட் 26,  27 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கையில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நீங்கலாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணி, நாபா அணி), தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அடங்கலான ஒன்பது அரசியற் கட்சிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

மகாநாட்டின் முதலாம் நாள் அமர்வு ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் எஸ்.ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) தலைமையில் ஒன்று கூடியது,
*"இலங்கை அரசினால் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், மக்கள் தமது சொந்தக் காணியில் சொந்த இடத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட வேண்டும்.
*வடக்கு, கிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு முற்றாக நிறுத்தப்படவேண்டும். அத்துடன் தமிழர் நிலப் பகுதிகளில் இருந்து இராணுவம் முற்றாக அகல வேண்டும். 
*யுத்த காலத்திலும் இதற்கு முன்பாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
*இந்தியாவிலுள்ள 2 லட்சம் ஈழத்தமிழரும் நாடு திரும்புவதற்கு ஏதுவான சூழ்நிலைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் இராணுவப் பிரசன்னங்கள் இருப்பதால் தாயகம் திரும்புவதற்கு அச்சப்படுகின்றார்கள். மேலும் தாயகம் திரும்பும் அகதிகளுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
*தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிப்பதை ஆக்கிரமிப்பதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். தமிழ் மக்களை அவர்களது வசிப்பிடத்துக்கு திரும்பவிடாமல் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்து விட்டு அந்த இடங்களில் சிங்கள மக்களை குடியமர்த்துவதை முதலில் நிறுத்த வேண்டும்.
*பயங்கரவாதச் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்." எனும் ஆறு அம்சக் கோரிக்கைகள், கலந்து கொண்ட எட்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகளினால் விடுக்கப்பட்டன.

மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் ஈழத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக இலங்கைத் தமிழ்க் கட்சிகளிடையே ஒத்த கருத்து அவசியம் என மாநாட்டுத் தலைவர் சுதர்ஸன நாச்சியப்பன கோரியமையைத் தொடர்ந்து தமிழ்க் கட்சிகளினால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இவ் அறிக்கையின் மூன்றாவது பத்தியில் குறிப்பிடப்பட்ட "இலங்கைத் தீவிலுள்ள தமிழ் மக்கள் தனியொரு இனமான தமது இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும், அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் அங்கீகரிப்பது இன்றியமையாததென்று என்பது எங்கள் வலுவான கருத்தாகும். 
அவ்வாறானதொரு சூழ்நிலையில் மட்டுமே இலங்கை அரசுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் அர்த்தமுள்ளதாக அமையமுடியும். ஆதலால் தமிழ்த் தேசம் முன்வைக்கும் இந்த உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறும் ஒரே நாட்டினுள் எட்டத்தக்க எந்தவொரு தீர்வுக்கும் இதுவே அடிப்படையாக அமையும் என இடித்துரைக்குமாறும் நாங்கள் இந்திய நாட்டிடமும் அனைத்துலக சமூகத்திடமும் விண்ணப்பம் செய்கின்றோம்." எனும் பகுதி இரு தேசம் எனப் பிரதிபலிப்பதால் அப்பகுதி நீக்கப்பட வேண்டுமென சுதர்ஸன் நாச்சியப்பன கோரியதால், அவருக்கு ஆதரவாக சுயநிர்ணய உரிமையெனும் வார்த்தைப் பிரயோகம் நீக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி) மற்றும் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் மூன்றாம் பத்தியை நீக்க சம்மதம் தெரிவித்தன.

சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மூன்றாம் பத்தியையும் உள்ளடக்கிய அறிக்கையை தமது கட்சியின் நிலைப்பாடு சார்ந்த அறிக்கையாக வெளியிட்டது, இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணி) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் போன்றன எவ்வித கருத்துக்களும் கூறாமல் நடுநிலை வகித்தன.

இலங்கைத் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான இரு வேறுபட்ட கருத்துப் பரிமாற்றத்தால் கூட்டறிக்கை தயாரிக்க முடியாமல் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய "துயரும் வாழ்வும்" எனும் தொனியில் அமைந்த மாநாடு தீர்மானம் எதனையும் எட்ட முடியாமல் போனதால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஸ்னாவைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு நழுவியது.

புதுடில்லியில் ஏற்படுத்தப்பட்ட மாநாட்டின் மூலம் திம்புப் பிரகடனத்துக்கு ஒப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எதனையும் எடுக்க முடியாமல் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் தங்களின் ஒற்றுமையீனத்தை மீண்டும் உலகுக்கு அம்பலப்படுத்தி உள்ளார்கள் என்பது ஜதார்த்தம்.

தொடர்புபட்ட செய்திகள்:
1. இந்திய அரசிடம் 6 கோரிக்கைகள் தமிழ்க் கட்சிகளால் முன்வைப்பு! 
2. தமிழ்க் கட்சிகள் தவறவிட்ட மற்றொரு அரிய சந்தர்ப்பம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----