மீனுக்கு வாலையையும் பாம்புக்கு தலையையும் காட்டிக் கொள்ளும் விலாங்கினைப் போல் தமிழ் மக்களிடம் ஒன்றும் சிங்களப் பேரினவாத அரசாங்கத்திடம் ஒன்றும் கூறி, அரசியற் கதிரையைத் தக்க வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொய்முகம் மீண்டும் ஒரு முறை அரங்கேறியுள்ளது.
பாரத சபாநாயகர் மீரா குமாரின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று 2011.08.01 ஆம் திகதி டில்லிக்குச் சென்று நாடாளுமன்ற அவையின் கௌரவ விருந்தினர் பகுதியில் அமர்ந்து நாடாளுமன்ற நிகழ்வை பார்வையிட்டனர்.
இக்குழுவில் ஸ்ரீலங்கா சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன் செனவிரட்ண, ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், ஆளும் கட்சி பா.உ.களான ரஜீவ விஜேசிங்க மற்றும் மாலினி பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சியின் டி.எம். சுவாமிநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
காலையில் இக்குழுவினர் நாடாளுமன்ற அவையைச் சென்றடைந்ததும், அ.தி.மு.கழக உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான கோசங்களை உரத்து உச்சரித்தனர், வன்னி நிலப்பரப்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் நடத்திய கோரத்தாண்டவத்தினை பொறுக்க முடியாத தமிழக மக்கள், ஸ்ரீலங்கா மீதான வெறுப்புணர்வுகளை வெளிக்கொணர முயன்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ தமிழ் மக்களை உசுப்பி வாக்குச் சேகரித்து விட்டு, அரசாங்கத்திடம் பின் கதவால் சென்று சொந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர், இந்தக் காய் நகர்த்தலில் ஒரு பகுதியே த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாரத நாடாளுமன்றத்துக்கு ஸ்ரீலங்கா குழுவுடன் இணைந்து சென்றதாகும், பாரத நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்காவுக்கு நியாயம் கற்பிக்கும் நோக்கில் சென்று குழுவில் இணைந்த செல்வம் அடைக்கலநாதனும், அ.தி.மு.க. உறுப்பினர்களால் அவமானப்படுத்தப்பட்டவர்களில் ஒருவராகும்.
தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போலி முகத்தினை பார்க்க மீண்டும் ஒரு சந்தற்பம் கிட்டியுள்ளது, இதற்கும் தமிழ் மக்களிடம் த.தே.கூ. நியாயம் கற்பிக்க வருவார்கள், அவதானமாக இருக்க வேண்டியவர்கள் இலங்கைத் தமிழர்களே!
வணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..
பதிலளிநீக்குஎன்னுடைய பக்கமும் வாருங்கள்..
http://desiyamdivyam.blogspot.com/
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!
பதிலளிநீக்குநிச்சயமாக உங்கள் தளத்துக்கும் வருவேன்.