இலங்கை தமிழ் மக்களின் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று 2011.08.25 ஆம் திகதி நடைபெற்ற விவாதத்துக்கு இன்று 26 ஆம் திகதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா பதிலளித்து உரையாற்றினார்.
இலங்கைச் சிறைகளில் இந்திய மீனவர்கள் எவருமே இல்லை, அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டார்கள், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகின்றது.
கச்சதீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் இடம்பெறுகின்றன, அத்தீவு இலங்கைக் கடற்பரப்பில் உள்ளது, இந்திய மீனவர்கள் அப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை பற்றி ஒப்பந்தத்தில் எதுவும் கூறப்படவில்லை, இதனால் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை. ஆனால் ஒப்பந்தத்தின்படி கச்சதீவில் இந்திய மீனவர்கள் ஓய்வு எடுக்கலாம், வலைகளை உலர்த்தலாம், அந்தோனியார் கோவில் விழாக்களில் கலந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதால், மனித உரிமைகளை மீறிய ஶ்ரீலங்கா அரசாங்கத்தைக் கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் குப்தா, அடிப்படை வசதிகள் இல்லாமல் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மடிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்திய அரசு உணர வேண்டும், இலங்கை முகாம்களில் உணவு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, தமிழ் வம்சாவளியினரின் நலத்தில் இந்திய அரசுக்குப் பொறுப்பு உள்ளது, மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு வருவதை விசாரித்து வரும் ஐநா குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே இப் பிரச்சனை குறித்து இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என பதிலளித்தார் கிருஸ்ணா.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைக் காணும் முயற்சி எதுவும் கிருஸ்ணா உரையில் காணப்படாததால் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
தவறான வழி நடாத்தலில் கச்சதீவுப் பகுதிக்குச் சென்று அத்துமீறிய மீன் பிடித் தொழிலை நடாத்தும் மீனவர்களுக்கான அறிவூட்டலைச் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.