பிரித்தானிய ஊடகமான சனல் 4 அண்மையில் ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" எனும் வீடியோ காணொளி பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்து சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பேரினவாதம் உலகுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையை உணர்ந்துள்ளது.
வன்னி பெருநிலப்பரப்பில் அப்பாவி மக்களின் அழிவுக்கு காரணமானவர்கள் ஸ்ரீலங்கா அரச படையும், வழி நடாத்திய அரசாங்கமும் தான் என கூறப்பட்டாலும், உண்மையில் மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் நகர்த்திச் சென்று அழிவுக்கு வழி வகுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே!
ஸ்ரீலங்கா படைதரப்பால் வகை தொகையின்றி தமிழ் மக்கள் அழிவுகளைச் சந்தித்த போதிலும், இன்று சர்வதேசம் உரத்துப் பேசுவதற்கு வழி வகுத்துக் கொடுத்த ஊடகம் சனல் 4 ஆகும்.
சனல் 4 வெளியிட்ட கொலைக்குற்ற ஆவண படத்தினை, பொய்யானது, திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக கூறி வந்த ஸ்ரீலங்கா அரசாங்கம், புதிய யுக்தியாக, தங்களை நியாயப்படுத்தும் வீடியோ காணொளியை வெளியிட்டுள்ளது.
இதில் சனல் 4 வீடியோ காணொளிக்குப் பதில் சொல்லப்பட்டாலும், பதில் சொல்லப் பயன்படுத்தப்பட்டவர்கள், ஏதோ நிர்ப்பந்தத்தின் பேரில் பேட்டி கொடுப்பது போல் தெரிகின்றது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயர்மட்டத்தவர்களாக அல்லது அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை இந்த காணொளிக்குச் சேர்த்துக் கொண்டமையானது ஸ்ரீலங்காவின் திட்டமிடலின் ஓர் அத்தியாயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.