யாழ் மாநகரசபையின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுமைக்குட்பட்ட யாழ் மாநகரசபையின் தரப்புக்கு மாறியுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
ஞாயிறு, 5 ஜூன், 2011
சனி, 4 ஜூன், 2011
ஜெனிவாவில் ஒளிபரப்பான "இலங்கையின் கொலைக்களம்" ஆவணத் திரைப்படம்.
வெள்ளி, 27 மே, 2011
தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தைக்கு பயணிக்கும் புகையிரதம்!
தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் 2011.05.27 ஆம் திகதியான இன்று 21 வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் நண்பகல் வேளையில் தாண்டிக்குளம் ஊடாக ஓமந்தையைச் சென்றடைந்தது.யாழ்ப்பாணத்தில் மரணித்த புத்தரின் பஞ்சசீலக் கொள்கை!
யாழ்ப்பாணதிலுள்ள சைவ ஆலயங்கள் சிலவற்றில் மிருக வேள்வி நடைபெறுவதாக சில ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது, பந்நெடுங்காலமாக இலங்கையின் உள்ள சைவ ஆலயங்களில் பாரம்பரியமாக மிருக வேள்வி செய்யக் கூடியதென ஒதுக்கப்பட்ட சில ஆலயங்களில் மட்டுமே மிருக வேள்வி செய்யப்பட்டன.செவ்வாய், 24 மே, 2011
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மன்னிப்பு கோரினார் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்தமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரென கருதப்படும் குமரன் பத்மநாதன் ஐபிஎன் தொலைக்காட்சி ஊடாக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.வியாழன், 19 மே, 2011
வன்னிப் பேரவலத்துக்காக சுயாதீன விசாரணை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை
வெள்ளி, 13 மே, 2011
சனி, 30 ஏப்ரல், 2011
ஸ்ரீலங்காவின் மேதினத் கொண்டாட்டமும் முட்டுக் கொடுக்கும் தமிழ்க் கட்சிகளும்!
தொழிலாலர் தினத்தை நினைவூட்டும் விதத்தில் மே மாதம் முதல் நாள் உலகம் பூராவும் விடுமுறை தினமாகும். அந்த மே தினத்தைச் சிறப்பிப்பதற்காக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் எனப் பல சிறப்பு நிகழ்வுகள் தொழிற் சங்கங்களினால் நடாத்தப்படுவது ஜனநாயக நாட்டுக்குச் சிறப்பானதாகும்.செவ்வாய், 26 ஏப்ரல், 2011
அழிவின் விளிம்பிலுள்ள "டஸ்னர்"மொழியின் நிலை "தமிழ்"மொழிக்கும் ஏற்படுமா!
இந்தோனேஷியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் மலாய் மொழிக்கொத்த "பஹாசா இந்தோனேஷியா" எனும் மொழியே கோலோச்சி வருவதால் 17 மில்லியன் பேர் பாடசாலைக் கல்வி தொடக்கம் அரச நிர்வாகம் வரை "பஹாசா" மொழியைப் பின்பற்றுகின்றனர்.எல்லோரும் பஹாசா மொழியைப் பின்பற்றுவதனால் காலம்காலமாக பபுவா மாகாணத்தில் பேசப்பட்டு வந்த "டஸ்னர்" எனும் மொழி இல்லாது போகும் நிலையை எட்டியுள்ளது.
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
சாயிபாபா - அரிய படத் தொகுப்பு
சத்தியசாயி பாபா - அரிய படங்களுடன் ஒரு கண்ணோட்டம்

இந்திய ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்ற போதனைகளை வலியுறுத்தி கல்வி, மற்றும் பொதுநல உதவிகளை மக்களுக்காகச் செய்து, ஒழுக்கமான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் சத்தியசாயி பாபா.
சனி, 23 ஏப்ரல், 2011
ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருணாவின் முதலைக் கண்ணீரும்!
ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!செவ்வாய், 12 ஏப்ரல், 2011
"நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்!
இந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வருகின்றது என்றால் அதில் மிகையில்லை, அந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் "நீயா நானா", "நடந்தது என்ன" போன்ற நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை, இவற்றை திரு.சந்திரன் கோபிநாத் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கின்றார்.
குறியீடு :
கோபிநாத்,
தமிழ்,
தொலைக்காட்சி,
நீயா நானா
திங்கள், 4 ஏப்ரல், 2011
தமிழும் ஒரு நாள் தெமல என்றாகுமா!

இலங்கையின் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருக்க வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்திருக்கும் செய்தியானது கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும் என்பதை தெளிவாக்குகின்றது.
சனி, 2 ஏப்ரல், 2011
கிரிக்கெட் உலகக் கிண்ணமும் தவற விட்ட இலங்கை அணியும்!
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
தமிழுக்கான அங்கீகாரத்தை நிலைநிறுத்துவாரா டக்ளஸ் தேவானந்தா!
சனி, 29 ஜனவரி, 2011
ஈபிடிபி மௌனித்துள்ள வடமராட்சி உறுப்பினர் கொலை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் துப்பாக்கிக் கலாசாரம் இலங்கையில் முற்றுப் பெற்றுவிட்டது என அரசாங்கம் மார்தட்டிக் கொள்ளும் இந்த 2011 ஆம் ஆண்டில் துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தளிர்க்கின்றது என்பது போல யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் ஓர் இளைஞன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சனி, 11 டிசம்பர், 2010
ஓரணியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகள் அரங்கமும்!
காலம் காலமாக பிரிந்து அரசியற் பணி செய்த தமிழ் அரசியற் கட்சிகட்குள் இருந்து வந்த பேதங்கள் நீங்கி ஓரணியில் அனைவரும் இணைந்து தமிழர்களின் குரலாக ஒலிக்கும் தருணம் வந்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளை எனும் நிலையிலே கவனிக்கப்படலாகினர், பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களின் பார்வைக்கேற்பவே தமிழர்கள் வாழ வேண்டுமென நினைக்கலாகினர், இவர்களின் பார்வைக் கோளாறை தீர்த்து வைக்க வேண்டுமெனில் தமிழர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று தமிழர்களின் பிரச்சனைகளை உரத்துக் கூற வேண்டும், ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்ட நிலையில் சாத்வீக அரசியற் போராட்டமே நிரந்தர உரிமைமைப் பெற்றுத் தரும்.

எமது அரசியற் தீர்வை நோக்கிய பயணத்தில் காலடி வைத்திருக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது அணியுடன் இணைந்து கொள்ளுமாறு கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல் பல தடவை கோரிக்கை விடுத்திருந்தது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டத்துக்கேற்ப செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படுவதில் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்ததால் பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப முயற்சியிலேயே இழுபறி ஏற்பட்டது, இந்த நிலையில் தமிழர்கள் இணைந்து ஒரு குடையின் கீழே என்னிடம் வாருங்கள் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார், மகிந்தவின் குரலை ஆமோதிப்பதாக அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அவர்களும் இணைந்து செயற்படுமாறு இரு கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்தார்.

இதன் முதற் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புதிதாக உருவெடுத்த தமிழ்க் கட்சிகள் அரங்கமும் உத்தியோக பூர்வமாக 2010.12.11 ஆம் திகதியான இன்று பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை நடாத்தினர்.

இரு பிரதான அரசியல் அமைப்புக்களின் கட்சித் தலைவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவசக்தி ஆனந்தன், பா.அரியநேத்திரன், எம்.சுமந்திரன், பொன்.செல்வராசா, எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, எம்.கே.சிவாஜிலிங்கம், த.சித்தார்த்தன், அ.இராசமாணிக்கம், மற்றும் செ.சந்திரஹாசன், ரி.சிறிதரன், ப.உதயராசா ஜீ.சுரேந்திரன், கோபாலகிருஷ்ணன், ஆர்.ராகவன், எஸ்.சதானந்தம், டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் போன்றனவுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஏதுவாக ஆறு பேர் கொண்ட உபகுழுவினை எதிர்வரும் 2010.12.13 ஆம் திகதி திங்கட்கிழமை அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதானது, தமிழர்களுக்கு பிரகாசமான ஒளி கிடைக்கவுள்ளது என்பதை எதிர்வு கூறுகின்றது.

இணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எனும் இரு துருவங்களும் எத்தகைய சவால்களையும் முறியடித்து தமிழ் மக்களுக்கான சுபீட்சமான வாழ்வுக்கு வழிவகுப்பார்களென எதிர்பார்ப்போம்.
வெள்ளி, 19 நவம்பர், 2010
ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ
இதனை வார்த்தை ஜாலத்தில் மாத்திரம் நிறுத்தி விடாமல், இந்த நாட்டில் தமிழர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என பிறர் மெச்சத்தக்க வகையில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.
இதனை தூர நோக்கோடு சிந்தித்து செயற்படும் பக்குவம் மகிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாகவே அறிய முடிகின்றது, எதிர்பார்ப்போம்.
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
ஈபிஆர்எல்எவ் நாபா அணியின் பாரிஸ் மாநாடு!
ஈழ விடுதலைப் போராட்டம் எனக் கூறிப் புறப்பட்டவர்கள், இத் தேச மக்களின் விடுதலைக்காக செய்தவை என்ன, இதற்கான விடையை மனம் திறந்து உரத்துக் கூற முடியுமா? ஈழ விடுதலை என நாமமிட்ட இயக்கங்கள் முதற்கொண்டு தமிழீழ விடுதலை என பெயரிட்ட இயக்கங்கள் வரை துப்பாக்கி ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்து எமது இனத்தை அழித்ததே வரலாறு!ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் அணி திரட்டி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றது தான் இந்த விடுதலை இயக்கங்கள் செய்த காரியமாகும்.
ஈழப் புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனப் பெயரிட்டு இயக்கங்களை உருவாக்கியவர்கள் எமது மக்களின் வளர்ச்சிக்காக செய்த நல்ல காரியங்கள் எதுவுமே இல்லை.
இந்த விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களுக்காவது குறைந்த பட்சம் எதாவது செய்து கொடுக்க இவர்களால் முடிந்ததா, இயக்க இலட்சியத்துக்காக உழைத்து மரணித்துப் போன போராளிகளின் குடும்பங்கள் நாளாந்த உணவுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை இன்றும் உள்ளது, இயக்கத் தலைமையோ தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டதுடன் வழங்களையும் சுருட்டிக் கொண்டதே வரலாறு, இதில் சற்று வித்தியாசமாக விடுதலைப் புலிகள் தாங்களும் அழிந்து தம்மைச் சார்ந்த சமூகத்தையும் அழித்துச் சென்றது.
பாரிஸில் மாநாடு நடத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மக்களுக்காக இது வரை செய்த நல்ல காரியம் எதுவும் இல்லை, இயக்கச் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொண்ட சுரேஸ் முதல் வரதர் வரை தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டார்களே தவிர மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யவில்லை.
வடக்கு கிழக்கில் இருந்து இந்திய இராணுவம் பின்வாங்கிச் சென்ற போது அவர்களின் பின்னால் ஓடிய வரதராஜப்பெருமாள் வட இந்தியாவில் சொத்துக்களை வாங்கி மனைவி, பிள்ளைகளுடன் சுகபோகம் அனுபவித்தார், இவர் சார்ந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காகப் போராடிய போராளிகள் விடுதலைப் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டு தெருத் தெருவாகச் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தகனாக வாழ்ந்த வரதருக்கு இன்று எதற்காக மீண்டும் இயக்கப் புனரமைப்பு.
சந்தற்பவாத தலைமைத்துவம் நடாத்தும் நாடகங்களுக்கு முகம் கொடுக்காமலும், இன்னும் இன்னும் எமது இனத்தை அழிவு பாதைக்குக் கொண்டு செல்ல வரதராஜப்பெருமாள் போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு விலை போகாமலும் புலம் பெயர்ந்த சமூகம் இருப்பதே எஞ்சியுள்ள தமிழினத்தைப் பாதுக்காக்கச் சிறந்த வழியாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















































![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)