சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் 2011.06.06 ஆம் திகதியான இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில், ஈழத் தமிழர்கள் மீதான போர்க் குற்ற ஆவணத் திரைப்படம் "இலங்கையின் கொலைக்களம்" (SRILANKA'S KILLING FIELDS)எனும் மகுடத்துடன் சனல்-4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்டது.
இக் குறுந் திரைப்படத்தினைப் பார்த்த சில ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் கண்களின் கண்ணீர் பனித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது, இத் திரைப்படம் ஸ்ரீலங்கா படையினரின் கொடூரமான காட்டுமிராண்டித்தனத்தினை மாத்திரம் பிரதிபலிக்காமல், 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய போர்க் குற்ற ஆதாரக் காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போர்க் குற்ற ஆதாரத் திரைப்படத்தினை பார்வையிட்ட ஸ்ரீலங்காவின் பிரதிநிதி ஏ.நவாஸிடம் சனல்-4 தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜொனத்தன் மில்லர் உரையாட முனைந்த போது வேறொரு சந்திப்பு இருப்பதாக கூறி அங்கிருந்து தப்பித்துக் கொண்டார், ஐக்கிய நாடுகளின் ஸ்ரீலங்கா பிரதிநிதி ஏ.நவாஸ் சனல்-4 செய்தியாளருடனான உரையாடலைத் தவிர்த்ததானது ஸ்ரீலங்காவின் போர்க் குற்றத்தினை ஆமோதிப்பதாகவே உணர முடிகின்றது.
"இலங்கையின் கொலைக் களம்" எனும் போர்க் குற்ற ஆதாரத் திரைப்படம் 2011.06.14 ஆம் திகதி ஒளிபரப்பாகுமென சனல்-4 தொலைக்காட்சி ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.