இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு மும்பாய் வாங்கடே சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகிய பத்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய, இலங்கை அணிகள் பங்கேற்றன.
முதலில் துடுப்பெடுத்து ஆட இலங்கை அணிக்கு சந்தற்பம் கிடைத்ததைத் தொடர்ந்து ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி, 275 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து உலகக் கிண்ணத்தை தன்வசமீட்டிக் கொண்டது.
போட்டி விறுவிறுப்பாக இருந்த போதிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு சீரின்மையாலே தான் உலகக் கிண்ணம் இந்தியா வசம் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது. இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுகின்றார், ஆனாலும் இன்றைய நிகழ்வில் முரளிதரனின் ஆட்டம் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1983 ஆம் ஆண்டின் பின்னரான 28 ஆண்டுகால முயற்சியின் பலனாக பத்தாவது உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறையாக இந்தியா மீண்டும் சுவீகரித்துக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.