இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்தமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரென கருதப்படும் குமரன் பத்மநாதன் ஐபிஎன் தொலைக்காட்சி ஊடாக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.ஸ்ரீலங்கா அரச தடுப்பில் உள்ள விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் செயலாளர் குமரன் பத்மநாதன் நேற்றிரவு ஐபிஎன் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு, இப் படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பதே உண்மை.
ஆகவே ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன், தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள், இதற்காக எல்லோரும் மன்னியுங்கள், ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம் எனக் கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கோரினார் கேபி.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.